Saturday, May 2, 2015

Sri Madura Kavi Azhwar Sarrumurai today .... significance of Azhwar Thirunagari


Today,  2nd May 2015  is ‘Chithiraiyil Chithirai naal’ [Chitra Nakshathiram in the month of Chithirai]  ~ the birthday of Sri Madhurakavi Azhwar.  He was born in Thirukkolur as incarnation of Sri Garuda. He sang only one divyaprabandham ~ ‘Kanninun Chiruthambu’ consisting of only 11 hymns;  his life was intertwined with that of Sri NammAzhwar.

Of the Nava Thirupathi divyadesams, Thiruk Kurugoor is hailed as Azhwar Thirunagari, as it was here Swami Nammalwar was born.   Madura Kavigal saw the leading light from Thiru Ayodhya and travelled all the way to Azhwar Thirunagari and identified  Nammazhwar in the Puliyamaram.  Mathurakavigal was so attached to Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar.

He as a disciple was attracted to the holy feet of  ‘Kurugaip Piran’ [Swami Nammazhwar]  and claimed that he knew none and nothing else than his Acharyar……. ~an exceptional piece of guru bakthi. 

கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றியருளினான்
எண்டிசையு மறிய இயம்புகேன்
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.

Azhwar in his exalted state claims that  Nammalwar, the son of Kari transformed him ( a person who was not worthy of any values) by taking care  and being considerate towards him and removed him of his sins by guiding him to the right path, hence he will loudly proclaim the glory of the kindness of the one who is the source of sweet Tamil poets , spreading his fame in all directions (that is he would sing in praise of Nammalwar only) 

Generally, His Sarrumurai would come during the brahmothsavam.  However there is no purappadu today at Thiruvallikkeni due to balalayam.  Here below is  photo of Sri Madurakavigal taken earlier at Thiruvallikkeni and one taken at Thiru Kurugoor. 

                                                              **************************************

திருவாய்மொழி தனியனில்   : - “ திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,”  -  என  பாண்டிய நாட்டு நாடு தாமிரபரணி நதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.   இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. 

ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம்சித்திரை மாதம்சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர்.  மதுரகவியாழ்வார்ஒரு சமயம்  அயோத்தியில் இருந்து  தென் திசை நோக்கி  வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அதிசயத்த மதுரகவியாழ்வார் அந்த ஒளியை நோக்கி நடந்து வரத்தொடங்கினார் அந்த ஒளி ஆழ்வார் திருநகரி புளியமரத்தடிக்கு  வந்ததும் மறைந்து விட்டது.

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்காபுளிய மரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.  அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதை உணர்ந்த  மதுரகவியாழ்வார்,  ஞான முத்திரையுடன்  மோனநிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்துஅவர் அருகில் ஒரு கல்லை போட சடகோபர் கண்விழித்தார்.  

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என  சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார்? 
அது வரை பேசாமலிருந்த சடகோபர் "அத்தைத்  தின்று அங்கே கிடக்கும்"என்றார்.  
மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம். அவர் கேட்டதுஉயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்துஅனுபவித்து எங்கே கிடக்கும் என்பது... அதற்கு நம்மாழ்வாரின் பதில் - அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.

இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார்   அழைத்தார். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். மதுரகவிகள் தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.

** தேவு மற்று அறியேன்குருகூர் நம்பி; பாவின் இன்னிசை பாடித்திரிவனே.**

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன்.


Sri Madura Kavigal at Thiruvallikkeni above and at Azhwar Thirunagari below


No comments:

Post a Comment