Today, 4th Sept. 2014 is day 1 of the Thirupavithrothsvam at Thiruvallikkeni.
Pavithrotsavam is an annual ritual - the word
itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy)
and Uthsavam (Festivity). This Uthsavam is penitential as also
propitiatory with the objective being to get rid of the evils that might have
been caused by the omissions and commissions in the performance of various
rituals throughout the year.
Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy
beholds the Best of everything and cannot in any manner be having anything in
short. The festivals are only intended to be error correction [dosha nirvana]
of the rituals that we, the humans conduct and fail in some manner. Lord only accepts them with Divine Grace, blessing
us all the time beyond what we deserve. For a Srivaishnavaite, nothing needs to be done by
self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings
and guide us to do kainkaryam to Him.
Here are some photos taken during the first day
purappadu of Sri Parthasarathi Pavithrothsavam. One can observe in the photos that Sri Parthasarathi is adorning -
floral garments, golden ornaments and …. Pavithra malai (the ones made
of silken thread in dangling colours)
Adiyen
Srinivasadhasan.
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் நடைபெறும் பல்வேறு
உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் திருப்பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு
'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.
திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது.
இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாகசாலை அமைத்து ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாகயக்னங்களும், அத்யாபகர்களால் திவ்யப்ரபந்த, திருவாய்மொழி சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது.
ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பல
வண்ணங்கள் உடைய பட்டு நூலிலான திருப்பவித்ரமாலை சாற்றப்படுகிறது.
திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம்
உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு
அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப்படுகிறது. திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில்
ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்”
கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு
பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)
முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம்
அளவிட முடியாதது. ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும் தன்னுள்ளே
வைத்துள்ளதனாலேயே ஸ்ரீநாராயணனென்னுந் திருநாமம்
படைத்தவனான எம்பெருமான் பரிபூர்ணன். சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும் தன்னகத்தே
கொண்டவன். எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை. எம்பெருமானின் திருவடிகளையே
சரணாய்க்கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி,
ஆனந்தம் கொள்ளுகிறோம்
திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் முதல் நாள் [4.9.2014] புறப்பாட்டின் போது
எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே
அடியேன் - ஸ்ரீனிவாச தாசன் – [ ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்]
No comments:
Post a Comment