பூக்கள் அழகானவை; Clitoria
Ternatea- - கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?
This year Udayavar sarrumurai
fell on Sunday 4th May 2014. [Chithirai 21 –
Chithiraiyil seyya Thiruvathirai] ~ and it was double delight in the evening !!
It was a great day in our lives
celebrating the birth of our darsana Sthapakar, Sri Ramanujar reverred
as ‘Yathigad Iraivan’ .... in the
evening there was purappadu of Sri Ramanujar with Sri Parthasarathi. After 10 days of Brahmothsavam, it is
rest called ‘Vidayarri’ for Sri Parthasarathi and after 10 days of rest comes
the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’ which
coincided with Udayavar sarrumurai.
Favourite memories are triggered
by our sense of smell ~ flowers are admired for their beauty, exquisite shapes, spectrum of colours and more
so for their fragrance. In our tradition, the decorative wreath of flowers
woven together as garlands adorn God. Flowers
have their pride of place and are mentioned in our epics – in Divyaprabandham too. In our mythology, Parijatha flower was
brought to earth by Lord Krishna himself.
Legend has it that Sriman Narayana’s heavenly throne is under a flowering
Parijatha tree. The pallakku was fragrant pervading goodness
all around – a great treat to the eyes, ears and senses of Bakthas. At Triplicane
[Thiruvalikkeni divyadesam] Sri Parthasarathi had purappadu in Pushpa pallakku and Sri
Emperumanaar in mangalagiri.
சித்திரையில் செய்ய திருவாதிரை -நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்தது. இன்று சுவாமி எம்பெருமானார் அவதரித்த திருநாள். இன்று பெருமாளுக்கு புஷ்ப பல்லக்கும் கூட. பூக்கள் அழகானவை; நறுமணம்
தர வல்லன:: மல்லிகை, முல்லை, செண்பகம், தாமரை,மகிழம், ரோஜா, அல்லி மற்றும் விருச்சி, செங்காந்தள்; ஆம்பல்; அனிச்சம்;
குறிஞ்சி ;வாகை; வகுளம் ; கோங்கம்;- என எவ்வளவோ
நறுமலர்கள் உள்ளன. பூக்களை அழகாக தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக
உள்ளது. ஒரு நாட்டில்அதிகமாக மலர்கள் காணப்படுவதனை
வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம்.
இதனைப் பழங்காலந்தொட்டுதமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி
வந்துள்ளனர். மலருக்கு பருவங்கள் (stages) உண்டு . ; அரும்பு,
மொட்டு, முகை, மலர் என எழுவகைப்படுமாம்.
புஷ்பங்கள்
பற்றிய பல குறிப்புகள் சங்க தமிழிலும் நமதுதிவ்யப்ப்ரபந்தத்திலும் உள்ளன. கோதைப்பிராட்டியாம்
ஆண்டாள் : "தார்க்கொடி முல்லைகளும்
தவளநகை காட்டுகின்ற"என அரும்புகளையுடைய கொடி முல்லைகள், அழகர் பெருமானின் வெளுத்தபுன்சிரிப்பை காட்டுகின்றதாய் கூறுகின்றார். பிறிதொரு இடத்தில் "கருவிளையொண்மலர்காள்
காயாமலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர்"
என அழகிய கருவிளைமலர்கள் மற்றும் காக்கணம்
பூக்கள், எம்பெருமானுடைய திருமேனியின் நிறத்தைநினைப்பூட்டுவதாக
பகர்கிறார்.காயா மலர் - காக்கணம் பூ - சங்குப்பூ.
(Clitoria Ternatea)-of family -: Fabaceae, [Papinonaceae]. சுவாமி நம்மாழ்வார் "மல்லிகை
கமழ்தென்றலீருமாலோ வண்குறிஞ்சியிசை" எனும்போது
- மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலையும்; வண் குறிஞ்சி இசை என்னும் இடத்தில்
'செவிக்கினிய குறிஞ்சிப் பண் இசையையும்' குறிக்கிறார்- குறிஞ்சிஎன்று ஒரு நிலப்பரப்பும்;
குறிஞ்சி என்று அரிய பூவினமும் உண்டு. பெரியாழ்வார்
-"வலங்காதின் மேல்தோன்றிப்
பூவணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை" என – மேல்தோன்றிப்பூ, மல்லிகை, செங்காந்தள் பூ, காட்டுமல்லிகை மாலை இவற்றை குறிக்கிறார்.
இத்தகைய அருமையான
நறுமண மலர்களால் ஆனது 'பூப்பல்லக்கு' எனும் புஷ்பப் பல்லக்கு. மிக அலங்காரமானது. சுகந்த வாசனையும் கொண்டது. திருவல்லிக்கேணியில் பிரம்மோத்சவம் கண்டு அருளிய ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான்
10 நாட்கள் 'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார். பிறகு மணம் தரும் மலர்களால்அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக
வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டுஅருள்கிறார். பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான
நந்தவனத்தைபராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக
கருதப்படுகின்றன. நன்மலர்கள் எல்லாஇடங்களிலும் அழகு தரும். எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும்
தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.
04.05.2014 ஸ்ரீ பார்த்தசாரதி சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கிலும்
உடையவர் மங்களகிரியிலும் எழுந்து அருளினர். அவ்வமயம் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.
அடியேன்
: ஸ்ரீனிவாச தாசன்.
No comments:
Post a Comment