Saturday, April 26, 2014

திருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம் (2014) – மங்களாசாசனம்

திருவல்லிக்கேணி எம்பெருமானார் உத்சவம் (2014) மங்களாசாசனம்

The annual Brahmothsavam of our  darsana Sthapakar, Sri Ramanujar ‘Yathigad Iraivan’ is now on and today, 26th Apr 2014,  is the 2nd day of the Uthsavam.    At Thiruvallikkeni divyadesam ~ there will be purappadu both in the morning and in the evening. 

In the afternoon, after Thirumanjanam, there will be Thiruppavai sarrumurai, and thereafter there will be ‘Mangalasasanam’ – whence num Swami Emperumanaar will go to all sannathies inside the temple – from the Presiding deities – garland, Sri Sadagopam, Aarthi maryathai will be begotten.  At that time ‘kattiyam’ will be rendered.

நமது ஒப்புயர்வற்ற ஆசார்யன் எம்பெருமானாரின் உத்சவம் திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெற்று வருகிறது.

உடையவர் உத்சவத்தில் எல்லா நாட்களிலும் மங்களாசாசனம் சிறப்பாக நடைபெறும். (மணவாள மாமுனிகள் உத்சவதிலும் மங்களாசாசனம் உண்டு)   திருக்கோவில் உள்ளே (உட்)புறப்பாடு கண்டு அருளும் போது ஒவ்வொரு சன்னதியில் இருந்தும், எம்பெருமானாருக்கு மாலை, ஸ்ரீ சடகோபம், ஆர்த்தி, இவை சாதிக்கப்படும்.  அப்போது ஒவ்வொரு சந்நிதியிலும் கட்டியம் சேவிக்கப்படும்.   Dr MA  வேங்கட கிருஷ்ணன் சுவாமி கட்டியம் சேவிப்பார்.

ஸ்ரீ பார்த்தசாரதி சன்னதியில் துவங்கி வேதவல்லி தயார் சந்நிதி வரை ஸ்தோத்ர பாடம் கோஷ்டி உண்டு.  இந்த கோஷ்டியில் " தாடி பஞ்சகம், ஸ்தோத்ர ரத்னம்,யதிராஜ விம்சதி" இவை சேவிக்கப்படுகின்றன.  இன்று நம்மாழ்வார் சன்னதி மங்களாசாசனத்தின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்




 நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்து அருளும் உடையவர்





கட்டியம் சேவிக்கும் Dr MAV

No comments:

Post a Comment