ஆலவட்டம் : துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட,
வட்டமான பெருவிசிறி
Living in Chennai, you would for sure have travelled by this
road – the arterial road connecting Chennai to its suburb…. Approx 25 km
stretch starting from Muthusamy Bridge near Medical college, winds through Ega,
Pachaiyappas, Aminjikarai, Ampa Skywalk, DG Vaishnav, Maduravoyal … reaches
Poovirundhavalli (Poonamallee) ….. it was once the point through all vehicles
travelled towards Sriperumpudur, Kanchipuram, Bangalore … Thirumazhisai,
Thiruvallur, Thiruttani, Tirupathi…. This road has more hospitals than any
other roads in the city and is popularly known as the city's 'Med street'. The town of Poonamallee is situated at a
distance of 23 kilometres from Fort St George and 17 kilometres from
Sriperumbudur on the Chennai-Bangalore highway. The name
"Poonamallee" is derived from "Poovirundavalli", meaning
"the place where flowers are cultivated". In Sanskrit, the place is
called Pushpakavalli. Near the main bus
stand is the temple of Lord Varadharaja whose consort is Pushpakavalli, who
gave this place the name ~ and this place is more significant to us for its
attachment to our Acharyar who lived 1000 years ago and who had a great role in
the life of our Greatest Acharyar Sri Ramanujar.
Today, 9th March
2014 is Masi Mirugaseersham nakshathiram denoting the Sarrumurai (Birth
celebrations) of Acharyar Thirukachi Nambigal born to Veeraghava chettiyar and Kamalai. He was the disciple of
Aalavanthar and had association with Thirukoshtiyur Nambigal too. Thirukachi Nambigal is reverred for his
devoted committed service of ‘thiru aalavatta
kainkaryam – (service of providing air by hand fan) to Devathirajar, the Lord
at Thirukachi. Nambigal is reverred as acharyan
of Swami Ramanujar. In the Kaliyuga, Nambigal was blessed that Sri
Perarulalar spoke to Nambigal in person and through him, Devathirajar gave
message of ‘Six words’ to Ramanuja – of which ‘Aham Eva Param Thatvam’ – Lord
Sriman Narayana is Supreme is the first message.
On this day let us prostrate
at the feet of Acharyar Thirukachi Nambigal, Sri Bhagawath Ramanuja and all our
Acharyar and pray to Sriman Narayana for all good things in life and
after. At Thiruvallikkeni this being Thavana
Uthsavam, this morning Nambigal had purappadu with Sri Parthasarathi Swami to
Thavana Uthsava bungalow. Sri
Boothathazhwar’s irandam thiruvanthathi was rendered. In the evening, it will be sarrumurai
purappadu from Bungalow, whence Sri Ramanuja Noorranthathi will be rendered. Here are some photos taken during the morning purappadu.
இன்று
'மாசி மிருகசீர்ஷம்' - திருக்கச்சி நம்பிகளின்
அவதார திருநாள். திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு
ஆச்சார்யர் ஆவார். இவர் சௌம்ய வருஷம், 1009 ஆம் ஆண்டு, வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார்.
இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. சென்னையில்
இருந்து பெங்களூர் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், திருப்பதி செல்லும்
மார்க்கத்தில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் தர்மபுரீ
என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது எனவும் திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம்
வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது எனவும் அறிகிறோம். பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சிநம்பிகள்
சம்பந்தப்பட்டது. புராதானமான இக்கோவிலில், திருக்கச்சி வரதராஜர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர்
என மூவரும் சந்நிதி கொண்டுள்ளனர். இங்கே உள்ள தாயார் திருநாமம் : புஷ்பவல்லி தாயார். திருக்கச்சி நம்பிகள் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு சமீபத்தில், 2009ஆம் ஆண்டு விமர்சையாய் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ
ஆளவந்தாருடைய சிஷ்யரான இவருக்கு "பார்க்கவப்ரியர்" என்பது இயற்பெயராம். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த
திருநாமம், "பேரருளாள தாஸர்" என்பதாகும். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம்
(விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர்.
தேவாதிராஜர் அர்ச்சாவதாரத்தை தாண்டி,
இவருடன் பெருமாள் தினமும் உரையாடி வந்தாராம். இளையாழ்வார்
(உடையவர்) தமது சந்தேஹங்களை நம்பிகள் மூலமாக கேட்க : பெருமாள் ஆறு வார்த்தைகள்
பதில் அளித்தாராம். அவை 'அத்திகிரி அருளாளர் அருள்வித்த ஆறு வார்த்தைகள்' என கொண்டாடப்படுகின்றன.
"அஹமேவ
பரம் தத்வம்" - என்பது முதல் வார்த்தை. 'ஸ்ரீமன் நாராயணனே பரம் பொருள் - முழு முதற் கடவுள்'
என்பது ஆகும். நாம் "இமையோர் தலைவன் மாதவன்
பேர் சொல்லுவதே நம் வாழ்வின் சிறப்பு"என்பதை
உணர வேண்டும். எம்பெருமானிடம் மட்டுமே ஈடு
கொள்ளல் வேண்டும்; அவன் மட்டுமே நமக்கு இம்மையிலும் மறுமையிலும் புகலிடம் தர வல்லன்.
திருக்கச்சி நம்பிகள் சாற்றுமுறை இன்று(9th
April 2014); - காலை நம்பிகள், ஸ்ரீ பார்த்தசாரதியுடன்
தவன உத்சவ பங்களாவுக்கு எழுந்தருளினார். புறப்பாட்டின்
போது “இரண்டாம் திருவந்தாதி” சேவிக்கப் பெற்றது.
, மாலை தவன உத்சவ பங்களாவில் இருந்து ஏளும் சமயம் 'இராமானுஜ நூற்றந்தாதி' கோஷ்டி உண்டு.
இன்று காலை புறப்பாட்டின்
போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
9th March
2014.
No comments:
Post a Comment