Tuesday, March 11, 2014

Masi Punarpoosam - Sri Kulasekara Azhwar Sarrumurai

Chēra dynasty is one of the most ancient dynasties ~ their kingdom is otherwise known as ‘Malai Naadu’ – the present day Kerala where there are many divyadesams.  In the land where elephants galore as cows are opulent elsewhere – ruled a King who with his utmost commitment towards Sriman Narayana, became Kulasekara Azhwar.
Today, 11th Mar 2014 - is ‘Punarvasu (punarpoosam) nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Kulasekhara Azhwaar.  He was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Maha Vishnu.  He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire.  He was greatly devoted to Rama and ‘Ramayana’ and reverred Sri Vaishnavaites with devotion.

His contribution in ‘Sri Naalayira Divya Prabandham’  is 105 songs titled ‘Perumal Thirumozhi’.  In the 4th chapter – he sings about his various wishes of the forms that he would like to take for doing service to the Lord Balaji at Thirumala.  In one of these songs, he says ‘he would eternally  be waiting as the step before the Lord, as he could continuously have darshan of Lord Thiruvengadavan’ all the time.  After these beautiful words, the padi (doorstep) at Thirumalai is known as ‘Kulasekara Padi’.

Azhwar in another hymn adopts a beautiful meataphor …. Compares his commitment to the Lord at Thiru Vithuvakkodu saying that ‘ a patient would always be attached to the Doctor, though he might give him temporary pain by cutting and treating him with heated instruments – still the love would last’ …. Similarly Azhwar has nothing but boundless affection towards the Lord. 

Today is the 4th day of Thavana Uthsavam at Thiruvallikkeni Divyadesam -  there was veedhi purappadu of Kulasekhara Azhwaar alongwith Sri Parthasarathi who shone like an Emperor holding the scepter, wearing Pandiyan Kondai ~ the crown of an Emperor.  Some photos taken during the  purappadu  are posted here. 

இன்று 'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய சேரலர் கோன் 'குலசேகராழ்வார்' அவதரித்த  நந்நாள்.  குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்குளத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.  வைணவர்கள் மீது இவருக்கு இருந்த அபிமானம் விவரிக்க முடியாதது. ஒரு சமயம் அவரது அரண்மனையில் தங்க ஆரம் ஒன்று தொலைந்து போயின போது - மற்றவர்கள் குற்றம் சொல்ல - திருமாலடியார்கள் ஒரு போதும் இழிச்செயல் செய்யார்  என, நச்சு பாம்புகள் நிறைந்த குடத்தில் கையிட்டு நிலை நாட்டினவர்  இவர்.


இவர் அருளிச்செய்தது 'பெருமாள் திருமொழி" எனும் அற்புத  பிரபந்தம் -  (105)  பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம்.  "ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்' என தொடங்கும் பதிகத்தில், 'திருமலை திருப்பதியில்' என்னென்னவாக எல்லாம் இருந்து திருவேங்கடவனுக்கு கைங்கர்யங்கள் செய்து வேங்கடவனையே தரிசிக்கும் பேறு பெற தமக்கு உள்ள எண்ணங்களை அழகாக 'செம்பவள வாயான் திருவேங்கடமென்னும், எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே !" - என்கிறார்.

வாளாலறுத்துச்  சுடினும்  மருத்துவன்பால்*
மாளாதகாதல்  நோயாளன்போல்*  மாயத்தால்
மீளாத்துயர்தரினும்  விற்றுவக்கோட்டம்மா* நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே. ~ 
எனும் பாசுரத்தில்  - விற்றுவக்கோட்டில் எழுந்து அருளியிருக்கும் எம்பெருமானிடம் தமக்கு உள்ள பற்றை, மருத்துவன் கத்தியினால் அறுத்து சூடிட்டு துன்புறுத்தினாலும் நோயாளிக்கு அவனிடத்தில் பெருகும் ஈடுபாட்டோடு ஒப்பிடுகிறார்.

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  இன்று தவன உத்சவம் நான்காம் நாள் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மாமன்னனாக செங்கோல் பாண்டியன் கொண்டையுடன் சேவை சாதிக்க, உடன் குலசேகர ஆழ்வாரும் புறப்பாடு கண்டு அருளினார். மாலை சாற்றுமுறை புறப்பாடு - இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி ஆனது.

மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் - கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால், நல்லவர்கள் கொண்டாடிய சீரிய நந்நாள், இந்நாள் !! குலசேகர ஆழ்வார் வாய் மொழியான சீரார்ந்த தமிழ் மாலை வல்லவர், தீ நெறிக்கண் செல்லார் என்பது திண்ணம்.  சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே  !! 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்



No comments:

Post a Comment