திருப்புட்குழி திவ்யதேசம் : 'மரதகத்தை புட்குழியெம் போரேற்றை'
The Divyadesam
known as “Thiruputkuzhi” is situated on the Chennai Bangalore High Road –
around 90 km off Chennai. As you pass
through Sriperumpudur, on way to Vellore, you would pass the bridge known as
‘Vellai gate’ which would take you to Kanchi.
Around 10 kms after this, is Baluchetty Chathiram. Hardly half a kilometer from the main road,
is the temple sung by Thirumangai Azhwar in Periya Thirumozhi and Periya
Thirumadal.
Legend has it that Lord
Rama did moksha kainkaryam to ‘Jadayu’ – the bird who fought valiantly against
Ravana when he was abducting Sita and lost his life. There is a sannathi for Jadayu before the
temple tank. ‘Pul” is bird and this
sthalam is known as “Thiru-pul-kuzhi – thiruputkuzhi’. Unusually, the dwajasthambam (the flag post)
is situated outside the Temple and the main Gopuram lies after the the
dwajasthambam.
My friend Sri VN Kesava
Bashyam has been doing great kainkaryam by taking photos of many divyadesams
(more particularly those in and around Kanchipuram). Recently, he had sent some from Thiruputkuzhi
divyadesam on the occasion of sarrumurai and Thirumanjanam of our Acharyar –
Sri Manavala Mamunigal and could not resist sharing them with my group and hence
posting them here – courtesy Sri Kesava Bashyam Swami. Here are some photos of this temple façade, Lord Vijayaraghavar (Uthsavar) with his
consorts and Swami Manavala Mamunigal.
திருப்புட்குழி திவ்யதேசம் சென்னையில் இருந்து சுமார் 90 கி மீ தொலைவில் உள்ளது.
ஸ்ரீபெரும்பூதுரை கடந்து வேலூர் பெங்களூர் செல்லும் பாதையில் பயணித்தால், பிரதான சாலையில், கச்சி செல்லும் வெள்ளை கேட் தாண்டியவுடன் வரும் மேம்பாலத்தை தாண்டி சுமார் 10 கி மீ பயணித்தால் பாலுசெட்டி சத்திரம் வரும். இங்கே பிரதான சாலையில் இருந்து இடது புறம் திரும்பி சுமார் அரை கி மீ தூரத்திலேயே திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் வாசலிலே உள்ள குளம் 'ஜடாயு தீர்த்தம்' என வழங்கப் படுகிறது. வித்யாசமாக த்வஜஸ்தம்பம் குளக்கரை அருகே கோவிலுக்கு வெளியே அமைந்துள்ளது. கொடிமரத்துக்கு பின்னல் பிரதான கோபுரம் உள்ளது.
இங்கு பெருமாள் ஜடாயுவுக்கு (புள்) மோக்ஷம் கொடுத்த திருத்தலம் ஆனதால்
திருப்புட்குழி ! குளக்கரையில் ஜடாயுவுக்கு
சன்னதி உள்ளது. உள்ளே மூலவர் விஜயராகவப்
பெருமாள் பரமபதத்தில் இருக்கும் நிலையில் வீற்றிருந்த திருகோலத்தில் சேவை
சாதிக்கிறார். மூலவர் ஜடாயு சம்ஸ்காரம் செய்யும் தாபத்தை தாங்க முடியாமல்
ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் வலமாக மாறி எழுந்து உள்ளனர். தாயார் : மரகத வல்லி தாயார்.
திருமங்கை மன்னன் தனது பெரிய திருமொழியில் {இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி}
- "அலங்கெழுதடக்கை ஆயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும் * புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும்" - எனவும் "பெரிய திருமடலில்" - " மரதகத்தை
புட்குழியெம் போரேற்றை"
எனவும் மங்களாசாசனம் செய்துள்ளார் .
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
திருக்கோவிலின் முகப்பு
உத்சவர்
விஜயராகவர்
திருமஞ்சனம் கண்டு அருளும் அவசரம்
Swami Manavala Mamunigal and purappadu with Perumal above
No comments:
Post a Comment