Sri Azhagiya Singar Brahmothsavam –
Day 6 – Churnabishekam purappadu
திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம்
நாள் ~ சூர்ணாபிஷேகம்
உத்சவம் . இன்று [22nd June 2013] காலை ஸ்ரீ அழகிய சிங்கர் அழகு பொலிந்திட தங்க சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார்.
புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சிலபடங்கள் இங்கே :
சூர்ணாபிஷேகம் சிறப்பு. சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால்
ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில்
எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில்
பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில்
சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை
ஆழ்வார் அருளிய "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த
விருத்தம்" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச்
சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே
திருமழிசைப் பிரானின் ஒரு பாடல் :
அச்சம்நோயொடல்லல்
பல்பிறப்பு அவாய மூப்பிவை
வைத்தசிந்தை
வைத்தவாக்கை மாற்றிவானிலேற்றுவான்
அச்சுதன்
அநந்தகீர்த்தி ஆதியந்த மில்லவன்
நச்சு
நாகணைக்கிடந்த நாதன் வேதகீதனே.
பயம்,
வியாதிகள், பல்வேறு அல்லல்களோடு கூடிய பல பிறப்புகள் ஆகிய இவற்றையும்; இவற்றை
அனுபவிப்பதற்காகக் கண்ட நெஞ்சையும், அல்லல் படும் சரீரத்தையும் போக்கடித்து
~ நம்மைப் ஸ்ரீபரமபதத்திலே கொண்டு சேர்க்க வல்லவன் - அடியாரை ஒருநாளும் கைவிடாதவனும், எல்லையில்லா
கீர்த்திகளையுடையவனும், முதலும் முடிவும் இல்லாதவனும், விரோதிகளை அழிக்க வல்ல
ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும், வேதங்களினால் பிரதிபாதிக்கப்பட்டவனான ஸ்ரீமன்
நாராயணன் ஒருவனே !
22nd June 2013, - Today is the 6th day
of Brahmothsavam at Thiruvallikkeni Divyadesam for Sri Azhagiya Singar
This morning after
‘Choornabishekam’, Sri Thelliya Singar had purappadu in ‘Golden Chapparam’. In
the purappadu, ‘Thiruchanda Virutham’ composed by Sri Thirumazhisai
Azhwaar was rendered. These 120 songs fall under the type ‘virutha
paa’ – they are replete with numbers and fall under a specialized category of
tamil grammar called ‘enn adukki cheyyul’.
Some photos taken during the
morning purappadu are here.
No comments:
Post a Comment