Wednesday, July 11, 2012

Thiruvallikkeni Azhagiya Singar Pushpa Pallakku Purappadu


After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Azhagiya Singa Perumal and after 3 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. 

It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas.

On the night of 10th July 12, Sri Azhagiya Singar  had purappadu in Pushpa pallakku and photos taken can be worshipped below :-



திருவல்லிக்கேணி அழகிய சிங்கர்  புஷ்பப் பல்லக்கு புறப்பாடு   -   

புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் மலர்களால் ஆனது.  திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் மூன்று நாட்கள்  'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.   பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன.

நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.

நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் :

"தேவும் எப்பொருளும் படைக்கப்*   பூவில் நான்முகனைப் படைத்த*   தேவன் எம்பெருமானுக்கு அல்லால்*     பூவும் பூசனையும் தகுமோ ?  -  என வினவுகிறார்.   தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா !!!!

பெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்து, அவருக்கு : செண்பகம், மல்லிகை, பாதிரிப்பூ, தமனகம், மருவு,செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - என பல பல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார்.  பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன்,  இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.

10.07.2012 அன்று இரவு, ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். 






No comments:

Post a Comment