Wednesday, July 4, 2012

Azhagiya Singar Brahmothsavam - Day 6 Eve - Yaanai vahanam


திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் - ஆறாம் நாள் - இரவு - யானை வாஹனம். – 3rd July 2012

On 6th day of Brahmothsavam it was Yaanai [Elephant] vahanam for Sri Azhagiya Singar.  The one at Thiruvallikkeni is the beautifully carved out in sitting posture coated with gold plates.  It was indeed a very grand purappadu on the evening of 3rd July 2012.

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் அன்று இரவு ஸ்ரீ அழகிய சிங்கர் யானை வாகனத்தில் எழுந்து அருளினார். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். மிக கம்பீரமானது. வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டரும் அமர்வது தனி சிறப்பு. யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் ஸ்ரீபாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும்  வைபவம் இது.  முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார்.  திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள்.  
யானை பார்க்க பார்க்க கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர்.  பெருமாள் ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். இதையே பொய்கை ஆழ்வார் 'பிடி சேர் களிரளித்த பேராளா' என்கிறார். மூன்றாம் திருவந்தாதியில் பேயாழ்வார், யானை குறித்து பாடியுள்ளார். 

"களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி"  -  திருவேங்கடத்தில், மேகங்களை தவறாகப் புரிந்து கொண்டு, தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாயோடி குத்த ஓடுமாம் மத யானை -  அந்த யானை திருமலையில் உறைகின்ற வேங்கடவனை  என்றென்றும் துதித்து வணங்குமாம்.     "வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு".

திருவல்லிக்கேணி அழகியசிங்கர் பிரம்மோத்சவத்தில் சிறப்பான யானை வாகன புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 






No comments:

Post a Comment