Thursday, May 10, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - Day 6 Eve


திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள்.  இன்று [9th May 2012]   மாலை ஸ்ரீ பார்த்தசாரதி யானை வாகனத்தில் எழுந்து அருளினார்.  யானை வாகன புறப்பாட்டில் 'ஏசல்", "ஒய்யாளி"  என்று அழைக்கப்படும்  சிறப்பு உண்டு.  துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீ பாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும்  வைபவம் இது.  முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார்.  திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள்.  ஒரு மிக பெரிய யானை ஒன்று வேகமாக நடந்து வருவதை போன்றே இது காணப்படும். இந்நிகழ்ச்சியை சேவிக்க நூற்றுக்கணக்கான மக்கள் திரள்வதும் ஒரு விசேஷம். 

யானை வாகனத்தின் மீது வெள்ளை அங்கி அணிந்து பட்டரும் பெருமாளுடன் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி அழகு !


இன்று கோஷ்டியில் - பெரிய திருவந்தாதி, பெருமாள் திருமொழி, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனிதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு - சேவிக்கபெற்று முதலாயிரம் சாற்றுமுறை ஆகிறது.  யானை வாகன கோஷ்டிக்கு, திருமலையில் இருந்து "இளைய கேள்வியப்பன் ஜீயர் சுவாமி" எழுந்து அருளினார். 

பொழுது போக்க பல வாய்ப்புக்கள் உள்ள இந்நநாளில் திருவல்லிக்கேணி சிறுவர்கள் பெருமாள் சேவிக்க அணி திரள்கின்றனர்.   பிரம்மோத்சவ புறப்பாட்டின்  போது, பெருமாளுக்கு பின்பு சிறுவர்கள் தாங்கள் செய்த வாகனத்துடன்,  ' சிறிய பெருமாள் ' ஏளப்பண்ணுவார்கள்.  அதீத முயற்சி எடுத்து, பெரிய பெருமாளைப் போலவே, இந்த '  குட்டி பெருமாள்களும் ' சௌந்தர்யத்துடன் விளங்குவர்.  இங்கே 'சிறுவர்கள் பண்ணிய யானை  வாகனத்தையும், அந்த யானை மீது, அமர்ந்து இருந்த பட்டரையும் காணலாம்.

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

9th May 2012 - Today is the 6th day of Brahmothsavam at Thiruvallikkeni Divyadesam for Sri Parthasarathi Perumal.    In the evening, it was purappadu on Yaanai (Elephant) vahanam.  Some photos taken during the   purappadu are here.



சிறுவர்கள் பண்ணிய யானை  வாகனம், (கீழே)


No comments:

Post a Comment