Sunday, February 12, 2012

Thiruvallikkeni Ekkadu Thangal Thiruvural Uthsavam 2012


“EEkkadu Thaangal Thiruvooral Uthsavam at Thiurvallikkeni Divyadesam”

At Thiruvallikkeni Divyadesam there are daily, monthly, yearly uthsavams. Most of them occur on specific nakshathiram.  Today is ‘Eekkadu Thangal Thiruvural Uthsavam’ – which has no connection with any nakshathiram.

Eekkadu Thangal near Guindy is an area known for its industries and it lies on the bank of Adyar river.  Every year, Sri Parthasarathi visits this place.  This Uthsavam is held on a Sunday in the tamil month of Maasi, when there are no other special uthsavams.    Today  12th Feb 2012, this Uthsavam is taking place.

Sri Parthasarathi Swami started from His temple in the early hours of today at around 0100 am and after ‘mandakapadis’ at various places visits Eekkadu Thangal.  The first halt is at Thavana Uthsava Bungalow, then Sri Parthasarathi Swami Sabha, then Vijay Avenue, Venkatrangam Street.  Sri Parthasarathi then visited Mylai Madhava Perumal Thirukovil.   At around 02.30 am, near Chithirai kulam at Mylapore,  Sri Peyalwar waited for Sri Parthasarathi and took Him along to Mylai Kesava Perumal Temple.  There was veedhi purappadu whence the prabandham of Sri Peyalwaar –“Moondram Thiruvanthathi” was recited. 

Sri Parthasarathi after Mylapore, goes via Alwarpet, T Nagar, Kodambakkam, Mahalingapuram, Saidapet and finally reaches Eekkadu Thangal where Thirumanjanam is performed.  Here are some photos taken this morning.

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் : நித்யப்படி, மாதந்திர, வருஷாந்திர உத்சவங்கள் பலவும் சிறப்புற நடைபெறுகின்றன.  திருநக்ஷத்திரம் கணக்கு இல்லாமல் நடக்கும் ஒரு சிறப்பு உத்சவம் "ஈக்காடுத்தாங்கல்  திருவூறல் உத்சவம்".  கிண்டி அருகே உள்ள ஈக்காடு தொழிற்பேட்டை பிரசித்தி பெற்றது. இது அடையாறு ஆற்றங்கரையில் உள்ளது.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரதி வருடமும் ஒரு நாள் இங்கு எழுந்து அருள்கிறார்.  மாசி மாதம்  மற்ற சிறப்பு உத்சவங்கள் ஏதுவும் இல்லாத ஒரு ஞாயிற்றுக் கிழமை இவுத்சவம் நடைபெறுகிறது.  

இவ்வருடம் இவுத்சவம் இன்று 12th Feb 2012, சிறப்புரம் நடைபெற்று வருகிறது.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இன்று அதிகாலை, விஸ்வரூபம், காலசந்தி முதலியவை முடிந்து அதிகாலை ஒரு மணி அளவில் பெரிய புறப்பாடு கண்டு அருளினார்.

துளசிங்க பெருமாள் கோவில் தெருவில் உள்ள தவன உத்சவ பங்களாவில் முதல் மண்டகப்படி. அடுத்து ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபை இடத்திலும்நாங்கள் வசிக்கும் விஜய் அவென்யுவிலும் எழுந்து அருளினார். மயிலை ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலுக்குள் எழுந்து அருளினார். மயிலை சித்திரை குளம் அருகே பேயாழ்வார் எழுந்து அருளி, பெருமாளை எதிர்கொண்டு அழைத்து, மூன்றாம் திருவந்தாதி கோஷ்டியுடன் திருவீதி புறப்பாடு கண்டு அருளி - திருமயிலை கேசவ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் ஆனது. அங்கிருந்து, ஆழ்வார்பேட், தி நகர், கோடம்பாக்கம், மகாலிங்கபுரம் என பல இடங்கள் எழுந்து அருளி ஈக்காடு சென்று அடைந்தார்.

இன்று அதிகாலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். 

 Pallakku starting at the temple



Sri Parthasarathi and his consorts in the same pallakku
At Vijay Avenue

Entering Mylai Madhava Perumal Temple
 Sri Peyalwaar - Thirumayilai
 Purappadu at a fast pace

Photo of Sri Parthasarathi and Ubayanachimaar.

No comments:

Post a Comment