Monday, October 24, 2011

Sri Manavala Mamunigal Uthsavam @ Thiruvallikkeni Divyadesam - 2011. 2nd Day purappadu


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:

Sri Manavala Mamunigal Uthsavam is being celebrated in a grand manner in Divyadesams.  On 23/10/2011 occurred the Second day and in the evening there was a grand purappadu of Acharyar with Sri Parthasarathi, adorning the famous Pandiyan Kondai and having the sceptre in hand.  Here are some photos taken during the veedhi purappadu.

ஸ்ரீ வரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆச்சார்யர்  பாழ்பட்டு கிடந்த ஸ்ரீரங்க கோயில் நிர்வாகத்தை ஏற்று ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர்.  தன்  ஆச்சாரியார் திருவாய் மொழி பிள்ளை ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றியவர். இதனால் யதீந்த்ர ப்ரவர் என போற்றப்பட்டவர்.  1430  ஆண்டில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டு காலம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு -6000-படி அடிப்படையில் உபன்யாசம் நிகழ்த்தினார் . ஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே  சிறுவனாக வந்து மாமுனிகளின் திறமையை பாராட்டி "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் "என்ற புகழ் பெற்ற தனியனை நமக்கு அளித்தார்.  தென்னசார்ய  ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது இத் தனியனே.  

இவரது பல நூல்களில், உபதேச ரத்தினமாலை எனும் நூல் மிக எளிய பாக்களில் ஆழ்வார்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், மற்றும் ஆச்சர்யர்கள் பற்றியும் அழகாக எடுத்து உரைக்கிறது

திருவல்லிக்கேணியில்  ஸ்ரீ  மணவாள மாமுனிகளின்  உத்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.  23/10/2011 அன்று இரண்டாம் உத்சவம்.  மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி சேர்ந்து புறப்பாடு.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பாண்டியன் கொண்டை செங்கோல் உடன் அற்புதமாக சேவை சாதித்தார்.  அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 





 ஸ்ரீ பார்த்தசாரதி
 பெருமாள் - பாண்டியன் கொண்டையுடன்

ஸ்ரீ மணவாளமாமுனிகள்
 திவ்யப்ரபந்த கோஷ்டி

1 comment:

  1. அடியேன்
    படங்கள் அருமை . பத்து நாள் உத்சவ படங்களையும் போடலாமே . நேரில் சேவிக்காதவர்களுக்கு சேவித்த பாக்கியம் கிடைக்குமே

    same time Please upload all photos in picassa and send pbase also

    தாசன்
    கேசவபஷ்யம்

    ReplyDelete