Tuesday, October 4, 2011

Purattasi Sanikkizhamai at Thiruvallikkeni - Azhagiya Singar Purappadu

The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng temples, especially Tirupathi.  In this month, there will be the annual Brahmothsavam at Tirupathi.

Devotees in large numbers visit Thiruvallikkeni also.  Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar. 

In the Purattasi month, on the ascending Prathamai day starts the 9 day Navarathri celebrations.  During Navarathri, there will not be purappadu of Lord Azhagiya singar as there will be purappadu of Vedavalli Thayar inside the temple.

Here are some photos taken during the Azhagiya Singar purappadu on 24th Sept. 2011

திருவல்லிக்கேணியில் புரட்டாசி  சனிக்கிழமை புறப்பாடு

புரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர்.   புரட்டாசி மாதத்தில் திருமலையில் "பிரம்மோத்சவம்" சிறப்புற நடைபெறுகிறது.  மேலும் புரட்டாசி மாதத்தில்தான் "நவராத்திரி" வருகிறது.  புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா.

திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலும்  புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.  முக்கியமாக சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் சேவிக்க வருகிறார்கள்.   புரட்டாசி சனி நாட்களில் மாலையில் "ஸ்ரீ அழகியசிங்கர்"  வீதி புறப்பாடு நடைபெறும். 

இந்த வருடம் செப்ட் பதினெட்டு (Sept. 18)  அன்று புரட்டாசி மாதம் பிறந்தது.  அன்று ஞாயிறு.  (Sept. 24)  செப்ட்  இருபத்தி நாலு அன்று புரட்டாசி சனி வாரம் ஒன்று. மாலை தெள்ளிய சிங்கர் பெரிய மாட வீதி புறப்பாடு  கண்டு அருளினார்.     செப்ட் இருபத்தி ஏழு(Sept 27)  முதல் நவராத்திரி ஆதலால் Oct 1 அன்று  அழகிய சிங்கர் புறப்பாடு கிடையாது. நவராத்திரி  எல்லா நாட்களிலும் சாயம், வேதவல்லி தாயாருக்கு கோவில் உள்ளே புறப்பட்டு உண்டு.  இந்த விமர்சையான புறப்பாட்டில் சிறிய திருமடல் சேவிக்கப்படுகிறது.   Oct 8  அன்று  அழகிய சிங்கர் புறப்பாடு உண்டு.

செப்ட்  இருபத்தி நாலு .  (Sept. 24)  அன்று  அழகிய சிங்கர் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 




No comments:

Post a Comment