பற்றறுத்தல் பகவத் கீதையில் கண்ணன் உபதேசம்
உத்பலர் என்பார் ஸ்ரீ கிருஷ்ணரது முக்கிய நண்பர். த்வாபரயுகம் முடியும் கடைசி நாளன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூவுலகத்தில் இருந்து ஸ்ரீ வைகுண்டத்துக்கு எழுந்து அருளினார். அந்நாளில் உத்பலர் மிகுந்த வருத்தம் கொண்டு கண்ணனை பிரிந்து எவ்வாறு வாழ்தல் இயலும் என கண்ணனிடமே வினவினாராம் !
எல்லா உலகங்களையும் காத்து அருள்பவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் - அவரிடம் நான் உலகோர்க்கு பல சமயங்களிலும் முக்கியமாக மகாபாரத யுத்தத்தின் போது பகவத் கீதை வாயிலாகவும் 'ஞான வைராக்ய விஷய பற்றறுத்தலையும் - என்னையே சரணடைதலையுமே உபதேசித்தேன்' - ஏன் அதன் வழி நடக்க மறுக்கிறாய் ? எல்லா விழயங்களிடம் இருந்து பற்றறுத்தல் என்பது என்னையும் சேரும் - எம்பெருமானிடத்தும் கூட அளவு கடந்த பற்று கூடாது என்று சாற்றினார்.
உத்பலரோ மானிட பிறவி. கடவுளே நேரில் உபதேசித்தாலும், உபதேசத்தை பின் பற்றுவதை விட எம்பெருமானிடத்தில் பக்தி கொள்வதையே அறிந்தவர்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
பி கு : காலஷேபத்தில் கேட்டது !
No comments:
Post a Comment