Saturday, November 20, 2010

Ascending Thirumala by foot and worshipping Lord Srinivaasa

For  a Srivaishnavaite visiting Divyadesams and having darshan of Emperumans in these places are of utmost importance.  For Sri Vaishnavaites, the word Kovil, Thirumalai, Perumal Kovil would refer to “Sri Rangam, Thirumala Tirupathi and Kanchipuram” respectively.

The sacred and most reverred temple of Sri Venkateswara is located on the seventh peak – Venkatachala hill of Tirumala.  The Lord stands tall as bestower of all boons and lakhs of people reach here to have a glimpse – a few seconds darshan of the Lord.  This beautiful temple in its present form owes a lot to the works of the greatest Vaishnava Acharya – Sri Ramanujar.

Now there are lots of facilities in the hill and the roads are very well laid.  The transportation is at its best as there are buses at almost every 5 minutes from the foothill to the top – the abode of Lord.  In olden days, people used to climb the hill afoot which was arduous.  Sri Udayavar (Ramanujacharya) used to climb the hill on his knees reverring the sacredness of the hill itself. 

There are now 3550 steps and for a healthy person would take around 4 hours to climb the hill.  The footsteps in most places are well covered and there are shops which make available things to the pilgrims.  The Tirumala Temple Devasthanam has also made good arrangements which include taking care of the luggage of the devotees who ascend the hill on foot.  The baggage deposited at Alipiri is carried free of cost and the ones deposited at the foot of the hill can be collected at the top.  Also there are arrangement for issuance of tokens facilitating special darshan for them.   On the way stands a deer park which attracts people. At any point of time, you can see thousands of people climbing the hill by foot – the pilgrims include children, youth, old people and those with some disabilities – all in the faith and wanting to have darshan of the Lord Srinivasa climb happily singing paeans in praise of the Lord and speaking of the greatness of the Lord.

At the starting point, a huge statute of Garuda azhwar stands.  There is Raja gopuram, Mysore gopuram, Gali gopuram, tall statute of Prasanna Aanjaneya,  steep steps known as Mokali mitta (literally breaker of knees).  On the way, TTD has installed statues describing the Dasavatharam – 10 avatars of Lord as also that of Azhwars who have sung about the divyasthalam.   Near the Mokali mitta stands a temple of Ramanuja charya.  Legend has it that he took rest at this particular place, when he was climbing the hill on his knees.

Here are some photos taken recently when I had the great fortune of climbing the divine hill by foot.


Adiyen  Srinivasa dhasan.
********************************************************************************************
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு "திருமலை" என்றால் திருவேங்கடமுடையான் உறையும் திருவேங்கடம் என்பதுவே !.... திருமங்கை ஆழ்வார் தமது திருமொழியில்  :
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில் சூழ்தரும் உலகுக்கு  எல்லாம்
தேசமாய் திகழும் மலைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே.   - 
என்று திருமலைக்கு சென்று உய்வு  அடையுமாறு வழி காட்டுகிறார். 

திருவேங்கடமுடையானின் திவ்ய தேசம் 'கலி யுகத்தில் கண் கண்ட தெய்வமாய் அருள்கள் அனைத்தையும் தரும் சிறந்த இடமாய் திகழ்கிறது. மழையோ, வெயிலோ, குளிரோ பாராமல் இங்கே குவியும் பக்தகோடிகள் எம்பெருமானின் சில வினாடி தர்சனம் பெற ஓடோடி வருகிறார்கள்.   திருப்பதி என்பது மலைக்கு கீழே உள்ள பகுதியையும் திருமலா என்பது திவ்யமான திருமலையையும் குறிப்பதாக கொள்ளலாம்.   இந்த திவ்ய தேசம் ஏழு மலைகளுக்கு நடுவே சிறப்புற மிளிர்கிறது.

"ஸ்ரீ சேஷசைல கருடாசல வேங்கடாத்ரி நாராயணாத்ரி வ்ருஷபாத்ரி வ்ருஷாத்ரி முக்யாம்" என பாடப்படும் திருமலையில் உள்ள மலைகள் : சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என ஏழு சிகரங்கள்.

சென்று சேர் திரு வேங்கட மாமலை,  ஒன்றுமே தொழ நம் வினை ஒயுமே! - திரு வேங்கடவனை காண திருமலை நடந்து ஏறி சென்று தரிசனம் செய்தல் மிக புண்ணியம்.    சுமார் ஐம்பது வருடங்கள் முன்பு கூட திருமலைக்கு செல்வது சற்று கடினமானதாகவே இருந்து வந்தது. அந்நாட்களில் பஸ் வசதி குறைவு. மேலும் ஏறிச் செல்வதற்கும் இறங்குவதற்கும் ஒரே வழிதான்.  இன்றைய நிலைமை வேறு. மிக எளிதாக பல வாகனங்கள் செல்கின்றன.

சில வருடங்கள் முன்பு வரை, திருமலையில், கோவில் அருகே பல மடங்களும் தங்கும் விடுதிகளும் இருந்து வந்தன. இப்போது அவை அங்கு இருந்த தடயம் கூட இல்லை. இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் கூட ஒரு தடவை, நாங்கள் கோவில் வாசல் மிக அருகே கற்பூரம் ஏற்றும் ஸ்தம்பம் முன்பு இருந்த விடுதில் தங்கி உள்ளோம்.  அப்போது  மேடாக இருந்த இடமெல்லாம் கூட துடைத்தாற்போல் கட்டிடங்கள் இருந்த சுவடே இல்லமால் மாறி உள்ளன.

திருமலை அவ்வளவு இயற்கை அழகும், வளமும் கொண்ட ஒரு அற்புத பிரதேசம். அடர்த்தியான வனம் - அங்குள்ள மரங்களும், மலை அமைப்பும், ஆங்கங்கே சல சலவென பிரவகிக்கும் அருவிகளும் ரம்மியமானவை.  முன்பு மிக கடினமாக இருந்த மாலை பாதை இப்போது ஓரளவுக்கு சுலபமாக பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.   அலிபிரி எனும் மலை அடிவாரத்தில் கருடாழ்வார் பிரம்மாண்டமாய் நிற்கும் இடத்தில்  இருந்து திருமலையை அடைய சுமார்  3550 படிகள் ஏற வேண்டும்.   பலவிதமான பக்தர்கள் - வெவ்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள், குழந்தைகள் முதல் முதியோர் வரை பல பிராயத்தினர் வேங்கடவனை காண வேண்டி நடந்து வருகின்றனர். சாதரணமாக நான்கு மணி நேரங்களில் மலை ஏற இயலும்.   

அலிபிரி அருகே தேவஸ்தானம் அலுவலகம் உள்ளது. இங்கே பக்தர்கள்  தங்கள் இடம் உள்ள மூட்டைகளை ஒப்படைத்து  விட்டு கஷ்டமில்லாமல்  மலை ஏறலாம்.  பல ஊர்களில் இருந்து பன்மொழி பேசுவோர் மலை ஏறுகின்றனர். திருவேங்கடவனின்  பாடல்களைப் பாடிக்கொண்டும், கதைகளைச் சொல்லிக் கொண்டும் அவனை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி அவனருள் வேண்டி நெஞ்சுருக ஆயிரகணக்கானோர் மலை ஏறுகின்றனர்.

பண்டெல்லாம் வேங்கடம் என ஆழ்வார் பாடிய இத்திருக்கோவில் ஏறும் வழியில் சரித்திர நிகழ்வுகளும், அவற்றை விளக்கும் பெயர் பலகைகளும் உள்ளன.  ஏறும் வழியில் - கருடாழ்வார், ராஜ கோபுரம், மைசூர் கோபுரம், காலி கோபுரம், விஸ்வரூப பிரசன்ன ஆஞ்சநேயர், விஷ்ணு பாதம்,  முழங்கால் முறிச்சான் என பல இடங்கள் உள்ளன.  அழகான மான்கள் பூங்கா உள்ளது. பல கடைகள் உள்ளன. ஒன்றிரண்டு இடங்களில் நடக்கும் பாதை இறங்கி வரும் பஸ் பாதையில் அமைந்து உள்ளதையும் காணலாம். 

தசவாதார சிலைகள் அழகாக உள்ளன.  மேலும், திருமலை பெருமாளை மங்களாசாசனம் செய்த  ஆழ்வார்களின் சிலைகளும் - அவர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. சுமார்  2900  படிகள் ஏறியதும் முழங்கால் முறித்தான் என்ற இடம் உள்ளது.  நமது ஒப்பாரிலாத இராமானுஜர் திருமலையை தமது முழங்கால்கள் தவழ ஏறி வந்து, இவ்விடத்தில் இளைப்பாறியதால் இப்படி பெயர் சிறப்பு பெற்றது இவ்விடம். இங்கே உடையவருக்கு விஜய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.

இப்போது நடந்து வரும் பக்தர்கள் திருவேங்கடமுடையனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதால் அவர்கள் தனி வரிசையில்  பெருமாளை   சேவிக்க  இயல்கிறது.
 
விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத ; சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச  :
வேங்கடேசனைத் தவிர  வேறு தலைவன் இல்லை! வேறு தலைவன் இல்லை!  எப்போதும் வேங்கடேசனையே  நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானை அடைந்தார்க்கு எல்லா சிறப்பும் கிடைக்கும் என்பது திண்ணம்.


அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.
பயணிகள் தங்கள் உடமைகள் தருமிடம். 

 இராஜ கோபுரம்

  ஸ்ரீ கூர்மாவதாரம்

  ஸ்ரீ விஷ்ணு பாதம்
   காலி கோபுரம்

  விஸ்வரூப ஆஞ்சநேயர்  

முழங்கால் முறிப்பான் 


   உடையவர் சன்னதி

 பொய்கை ஆழ்வார்

   கோவில் மாடவீதி


  கோவில் முகப்பு 


ஆனந்த விமானம் 



Monday, November 8, 2010

Sree Parthasarathi Swami Deepavali Purappadu - 05/11/2010


For a Srivaishnavaite,  Wednesday - the 10th of October 2010  is a very important day – it is Thirumoola nakshathiram in the tamil month of Aippasi.   64 decades back, on this day was born the incarnation of Adisesha, the reincarnation of Swami Ramanujacharya. 

Swami Manavala Mamunigal, also known by the Thenkalai followers as Varavaramuni, Yathindra Pravanar,  the Acharya was born on AD 1370 at Alwar Thirunagari near Thirunelveli.

Acharya lived on this earth for 73 years during which period he propogated the tenets of Vaishnavism by his writings and commentaries.  It is believed that at the end of his year long discourse at Thiruvarangam,  Swami Namperumal himself came and uttered the thanian which is now followed by the  Thenkalai sect.

The 10 day celebrations are now on at Thiruvallikkeni and on 5th day (which was Deepavali day), there was grand procession of Mamunigal with Lord Parthasarathi.  It has become a tradition that in Triplicane, that during those 2 hours during veedhi purappadu (procession in mada streets) fireworks will go in air in a spectacular fashion.   Here are some words on Mamunigal alongwith some photos taken during the purappadu at Triplicane

With regards – Srinivasan Sampathkumar

********************************************************************************



திருவல்லிக்கேணி பெருமாள் தீபாவளி புறப்பாடு

தென்னாசார்ய  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருவோணம் மிக சீரிய நாள். மன்னுபுகழ் மணவாள மாமுனிவன் அவதரித்த நாள்.  இந்த விக்ருதி வருடம் ஐப்பசி மாதம்  15 (01 11 2010)முதல் ஐப்பசி  24 (10 11 2010) வரை நம் ஆச்சர்ய சுவாமியின் திருநக்ஷத்திர சம்வத்சரோத்சவம் நடைபெறுகிறது.  திருமூலத்தன்று (10.11.2010) சாற்றுமுறையாகும்.  சாற்றுமுறையன்று திருவல்லிக்கேணியில் சிறப்பாக "கைத்தல சேவை" என்று ஸ்ரீ பார்த்தசாரதி உத்சவரையும் உபய நாச்சிமார்களையும் கட்டியங்கள் முழங்க அர்ச்சகர்கள் தங்கள் கைத்தலத்தில் ஏளப் பண்ணும் அழகு பரம போக்யமானது. 

ஸ்ரீ வரவர முனி என்றும் யதீந்திர ப்ரவணர் என்றும் போற்றி தொழப்படும் நம் சுவாமி கி பி  1370 ஆம் ஆண்டு கிடாரம் என்ற கிராமத்தில் அவதரித்தார். சுவாமிகள் நமக்கு அளித்தவை "ஸ்ரீ சைலேச தயாபாத்திரம்" எனும் தனியன் தவிர யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் மற்றும் 19  க்ரந்தங்கள்.

திருவல்லிக்கேணியில் மாமுனிகளுக்கு பத்து நாட்களும் புறப்பட்டு நடை பெறுகிறது.   வெள்ளி 05.11.10 அன்று தீபாவளி திருநாளில் பெருமாள் புறப்பாடு மிக விமர்சையாக நடந்தது.  ஏரளாமான வாண வேடிக்கைகளுடன் புறப்பாட்டை ஆயிரக்கனக்க்கானோர் கண்டு களித்தனர்.  புறப்பாட்டின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே : 








 மேலும் படங்களை இங்கே காணலாம் : Athul Photo album    http://picasaweb.google.com/athulsri/ThiruvallikkeniDeepavali2010

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்

Monday, November 1, 2010

Sree Sarada Sevashram at Mannivakkam (near Vandalur off Chennai)


அன்பு நண்பர்களே 

இன்று காலை ஒரு செய்தி படித்தேன்.  பிரபல வோல்க்ஸ்வகோன்  நிறுவனம்” ‘ புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் ‘ தங்களது சிறப்பு விளையாட்டு வடிவ கார்  "புகாட்டி  வெயரோன்  16.4  கிரந்த் ஸ்போர்ட்"  மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.  இன்றைய இளைநர்களுக்கு எல்லாவற்றிலுமே சிறந்ததுதான் தேவை. இந்த நவீன சிறப்பு கார் உலகத்தில் எல்லா பணக்கார நாடுகளிலும் ஓடுகிறது.  இந்தியர்களுக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பது ஞாயமல்ல !!

இந்த காரின் விலை பதினாறு கோடிக்கு மேல்.  இதற்கு முன் மிக விலை உயர்ந்த கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் பான்தோம் மற்றும் மேபாச் - இவற்றின் விலை ஐந்து கோடி தான்.  இந்த புகாட்டி  வெயரோன்   மணிக்கு 407 கிமீ செல்ல வல்லது. 2.7 நொடியில்  ஜீரோவிலிருந்து 100 கி மீ வேகம் எடுக்கும். ! பிரமிப்பாக உள்ளதா ??   உலகெங்கும் வருடத்துக்கு இது போன்ற கார்கள் எண்பது மட்டுமே விற்கப்படுகின்றன.  விரைவில் நமது சாதாரண குடிமகனுக்கும் இது போன்ற ஒரு காரை பார்த்து மூக்கில் விரல் வைக்க வாய்ப்பு கிடைக்கும்.,  வசதி படைத்தவர்கள் கார் வாங்கலாமா என்பதோ அவர்கள் தங்கள் சொந்த பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்பதோ இந்த இடுகையின் நோக்கம் அல்ல.

இன்றைய சமுதாயம் மிக வேகமானது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்குக்  கூட தங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரிந்துள்ளது.  கூட இருப்பவர்களுடன் தன்னை சீர் தூக்கி தனக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.  அவர்கள் தங்கள் ஆசையை விட சற்று குறைந்ததுக்கும் ஒப்ப மாட்டார்கள்.  அவர்களிடம் தெளிவான சிந்தனை, சொல்திறன், ஆங்காரம், அடங்கா மனது எல்லாமும் உள்ளது.  சமுதாய மாறுதல்.  புலம்பி பிரயோஜனமில்லை.

இந்திய தேசம் இன்னமும் கிராமங்களில் வசிக்கிறது. அவர்களை காண நகரத்தில் இருந்து தொலை தூரம் செல்ல அவசியமில்லை. பெருநகரங்களிலும் மிக நிறைய ஏழைகள் உள்ளனர்.  இங்குள்ள குழந்தைகள் ஒரு வேளை நல்ல உணவுக்கும், சற்று ஒதுங்க இருப்பிடத்துக்கும் பரிதவிக்கின்றன. பலருக்கு வாழ்க்கையே போராட்டம் - சாதாரண தேவைகள் கூட ஆடம்பரம்.  நடுத்தர வர்க்கம் என்பதுவும் வழக்கு ஒழிந்து வருகிறது.  நடுத்தர வர்க்க மனிதன் தனது கனவுகளை துரத்துகிறான்.  எப்படியாவது பணக்காரன் ஆக பெரு  முயற்சி செய்கிறான். ஒரு காலத்தில் சேமிப்புக்கு முக்கியம் தந்த சமுதாயம் இப்போது எல்லாவற்றையும் வாங்க முயற்சி செய்கிறது.  பணம் இல்லை எனில் பிளாஸ்டிக் கார்ட் உள்ளது. கடன் தர வங்கிகள் உள்ளன.

வாழ்க்கையை பகுதி பிரித்தால், இளமை முடிந்தவுடன் மனிதன் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பருவம். தற்போதைய சமுதாயத்தினர் பேராசையுடன் ஓடிக்கொண்டே  உள்ளனர்.  நாற்பது வயது என்பது பணம் சம்பாதிக்கும் வயது. எதிர்கால தேவைக்கு எல்லாம் சேர்த்து சம்பாதிக்க வேண்டும்.  இதுதான் குறிக்கோள்.

தவிர திரும்பும் இடம் எல்லாம் சாதனை புரிந்த நடிகர்கள், ஆட்சியாளர்கள், என சாதித்தவர்கள் ப்ளெக்ஸ் போர்டுகளில் மின்னுகின்றனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில், இன்னமும் சிலர் சுய சிந்தை இல்லாமல் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியுடன் செயல் படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு மாணிக்கத்தை 31/10/2010 அன்று மண்ணிவாக்கத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சாது யோகி குமார் என்ற இவர் நாற்பது வயது இளைஞர். தனது இளம் வயதில் ராமகிருஷ்ண இயக்கத்தில் சேர்ந்து, இமயமலைக்கு சென்று சன்யாசம் பெற்று, யோகா கலை கற்று  தனது தணியாத தாகத்தை தணித்துகொள்ள சென்னை திரும்பி ஒரு ஆஷரமத்தை நடத்தி வருகிறார்.  இவரது மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து நடத்தி வருவதுதான் "ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம்". இந்த  ஆஷ்ரம் சாது  யோகா குமாரால் துவங்கப்பட்டு, திருவாளர்கள் ரகுராமன், சந்திர சேகரன், விஜய செல்வராஜ், குமர குருபரன்,  பாலசுப்ரமணியம் போன்றோரின்  சீரிய உதவிகளுடன் ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையின் வாகன மற்றும் மக்கள் கும்பலை தாண்டி வண்டலூர்  அருகே  மண்ணிவாக்கம் என்ற  பகுதியில் மிக தூய்மையாக இந்த ஆஷ்ரமம் அமைந்து உள்ளது. இங்கு  26  சிறார்கள் (மாணவ, மாணவியர்) அன்புடன் தங்க வைக்கப்பட்டு,  உணவு, உடை,  இருப்பிடம், படிப்பு, பாசம் அனைத்தும் சூழ நல்வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.   ஆஷ்ரமம் பாரத தாய் திருநாட்டில் வாழ்ந்த ரிஷிகள் ஞானியர் முனிவர்கள் மற்றும் தேச பெரியவர்கள் கட்டி தந்த வழிமுறையுடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரஹம்சர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் அவர்களது நெறிமுறைகளை பின்பற்றி நடத்த பெறுகிறது. திரு சாது குமாரின் குறிக்கோள், இது போன்ற சிறுவர்களை நெறி படுத்தி வாழ்வில் வெற்றி பெற செய்வதே.  இங்கு அவர்களுக்கு நல் ஒழுக்கம், நேர்மையான வாழ்க்கை குறிக்கோள்கள் கற்று தரபடுகின்றன.   அவர்கள் தினமும் அதிகாலை இறை வணக்கத்துடன் நாளை தொடங்கி, யோகா, உடற் பயிற்சி போன்றவற்றுடன் பள்ளி படிப்பு படித்து, ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

இங்கே காற்றில் இருந்து எல்லாமே சுத்தமாக உள்ளது.  சுவாமி இங்கு தேவைக்கு அதிகமாக எதுவும் அவசியம் இல்லை என்று திண்ணமாக சொல்கிறார்.  ஆஸ்ரமத்தின் தேவைகள் சீரிய முறையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.  வாரத்தின் வெவ்வேறு   நாட்களில் என்னென்ன உணவு என்பதும் பட்டியலில் உள்ளது. 

சைமாவில் இருந்து ஒரு குழுவாக நாங்கள் நேற்று (31/10/2010) இங்கு சென்றோம்.   சுவாமியும் மற்ற நிர்வாகிகளும் எங்களை அன்புடன் வரவேற்றனர். அங்குள்ள குழந்தைகளுடன் விளையாடி அவர்களுடன் கலந்து உரையாடி, நாங்கள் களித்தோம். ஆஸ்ரமத்துக்கு எங்காளால் இயன்ற சிறு பொருள் உதவி அளித்து மகிழ்ந்தோம்.  கொஞ்சம் தலை அணைகள், பாய்கள், போர்வைகள், நோட்டு புத்தங்கள், மளிகை பொருள்கள், வாளிகள் போன்றன அளித்தோம். இந்த ஆஸ்ரமத்தின் முகவரி தகவல் தொடர்புக்கு : 
ஸ்ரீ சாரதா சேவாஷ்ரம், பதிவு எண்:  751/IV-2006,
No. 1/3 வடக்கு மாட வீதி,
மண்ணிவாக்கம் (சிவன் கோயில் அருகில்)
சென்னை 600048 P: 044 2275 0012; M 99402 08225.

எங்களது வாழ்வில் இந்த நாள் ஒரு இனிய நாளாக இருந்தது. நீங்களும் உங்களுக்கு எளிதான சமயம், இந்த ஆஸ்ரமத்துக்கு சென்று இல்ல குழந்தைகளோடு சேர்ந்து இருந்து மகிழ்வீர்.

இந்த ஆஸ்ரம் பற்றிய மேலும் விவரங்கள் அறிய, தயைகூர்ந்து இந்த வலை மனைக்கு செல்லவும்.  :  http://sreesaradasevashram.blogspot.com/


அன்புடன் : ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.