திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் முக்கிய உத்சவங்கள் தவிர பல நாட்களிலும்
பெருமாள் புறப்பாடு உண்டு. பஞ்ச பர்வம் எனும் : மாசப்பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, மற்றும் ஏகாதசி (2) நாட்களில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருள்கிறார்.
இவற்றுள் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் அமாவசை அன்றும் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளுகிறார். சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள். அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும். பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி கோஷ்டியில் சேவிக்கபடுகிறது. 19/09/2010 அன்று பெருமாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
No comments:
Post a Comment