உன்னதமான அவதார புருஷர் இராமர் அவதரித்த நாள் இந்நன்னாள்.
சார்ங்கம் என்னும் வில்லும், வளைந்துள்ள வலம்புரியும், கொல்ல வல்ல சக்கரமும், கதையும், நாந்தகம் என்னும் வாளும், காற்றைப் போன்ற விரைவையுடைய கருடனும் ஆகிய இவையெல்லாம் ஒரு சேர பெற்ற மகான் ஸ்ரீராமபிரான்.
ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.: ஓர் இல் - ஒரு மனைவி, ஒரு சொல் – வாக்குத்தவறாமை; ஒரு வில் - குறி தவறாத ராமசரம். 'ராமன்' என்றாலே தானும் ஆனந்தமாக இருந்து மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனைவிதமான துக்கங்கள் வந்தபோதிலும் மனத்தைத் தளரவிடாமல், தர்மத்தையே ஆனந்தமாக அனுசரித்துவந்தவர் ஸ்ரீராமபிரான்
சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனத்தின் சஞ்சலங்கள் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இதனால் மனத்தில் எப்போதும் ஆனந்தம் லேசாக இருக்கும். ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது மிகவும் முக்கியம். அது இறைவனாகவே இருந்தாலும், அவன் மனித உருவில் வந்தாலும் என்பதைத்தான் ராமாயணம் வலியுறுத்துகிறது.
வானகமும் வானவரும் வாழவும், நானிலமும் நானில மக்கள் வாழவும், துன்பம் துயரம் அயர்வு ஆகியன நீங்கி நலம் பெருகித் தொண்டர்கள் மனமகிழவும், இந்நன்நாளில் ஸ்ரீ ராம பிரானின் பெயரை உச்சரித்து அவரது தாள்களை நாடினால் நலம் பெறுவது திண்ணம்.
அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்
ஸ்ரீ ராமரைப் பற்றி மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி. இரண்டாம் பத்தி - குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி முதல் பத்து - "கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம்" என்ற பாசுரத்தின் விளக்கம். கடைசி பத்தி "வன் பெரு வானகமுய்ய அமரருருய்ய " என்பதன் விளக்கம்.
ReplyDelete