Friday, September 25, 2009

மெரினா என்ற குறு நாவல்

சுஜாதாவின் இந்த குறு நாவல்  மிக   மிக விறுவிறுப்பானது.  ஒரு பணக்கார அப்பனின் தறுதலை பிள்ளை நடந்து கொள்ளும் விதம் பற்றிய கதை இது.

கதையின் பெரும் பகுதி ஒரு பின்னிரவில் மெரினா கடற்கரையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி பற்றியது.  பணக்கார பசங்களின்  பொழுது போக்குகளை அழகாக விவரித்து கதை பின்னி இருந்தார்.

எல்லா கொலை கதைகளையும் போல கடைசியில் யார் கொலையாளி என்பதல்ல இக்கதையின் முடிச்சு.............

இறுதியில் கொலையே நடக்கவில்லை.  போலீஸ் தான் பணம் பிடுங்க கொலை ஜோடித்ததாக முடிச்சு  அவிழும்.  இந்த எதிர் பாராத திருப்பத்துடன் கதை முடிந்து விடாது. 

அந்த மகன் தான் பண்ணிய வேறொரு தவற்றிற்காக கைது செய்யப்படுவது ஆகே தனக்கே உரிய பாணியில் கதையை சொல்லி இருப்பது வேறு எவராலும் இயலாதது.

1 comment:

  1. நான் படிக்காத மிகச் சில சுஜாதா கதைகளில் இது ஒன்று. தீபாவளிக்கு வரும்போது ஹிக்கின் பாதம்ஸில் வாங்கிவிடுகிறேன்.

    ReplyDelete