Thursday, June 4, 2026

Allikkeni Mapillai Battar Swami - Ratha Sapthami 2001 ~~~ !!!

 

Sri Parthasarathi Perumal - Ratha Sapthami 2001.

[a good 25 years ago !]  -  repost

 

Thiruvallikkeni will always remember this great kainkarya sriman,

Sri Venkatakrishna Battachar fondly known as Mappillai battar ..

 

 

Sri Varadha Rajar Thiruther 2026

Thiruvallikkeni Sri Varadha Rajar  Thiruther 2026


Thiruther is a grandeur occasion ~ thousands of devotees assemble at Kanchipuram to have a glimpse of Sri Devathi Rajan on thiruther.  

இன்று 3.6.2026 திருக்கச்சி தேவாதிராஜரின் திருத்தேர் வைபவம்.  காஞ்சி மாநகரத்திலே முன்பெல்லாம் திருத்தேர் திரும்புகைக்கு நாட்கள் கூட ஆகுமாம்.  இப்போது இயந்திரங்கள், மனிதர்கள் உதவியுடன் பெருமாள் தேர் புறப்பாடு சில மணி நேரங்களில் முடிந்து விடுகிறது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் காண வருகை தருகின்றனர்.  காஞ்சியில் தேரன்று பொது விடுமுறை அளிக்கப்படுகின்றது. 

 இன்று ஒரு நகைச்சுவையுடன் ஆரம்பிப்போம் (என் அப்பா என் சிறுவயதில்  சொன்னது!)  - கச்சி மூதூர் திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்கள், பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் நடக்கும்.  ஒரு மழை நாளில் சிலருக்கு சரியாக உணவு கிடைக்காததால் பசி !  -   அவர்கள் திண்ணையில் அமர்ந்திருக்க, அவ்வழி சென்ற ஒரு பக்தன் - கோவில் கோபுரத்தை கண்டு இரு கை உயரே தூக்கி "கஞ்சி வரதப்பா'; "கஞ்சி வரதப்பா';  என அகவ, திண்ணையில் இருந்தவன் - (உணவு கஞ்சி) எங்கே வரதப்பா ?  என வினவினான் !! 

'தேரு வருதே'  - திரும்பி படிக்கவும் ..  இது -   மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) - பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். 

தேர் (திருக்கோவில் உத்சவங்களில் திருத்தேர்) - பண்டைய காலத்தில் இருந்தே மக்களை கவர்ந்து வந்துள்ளது.  மஹாபாரதத்தில் காணப்படும் ‘’ரத, கஜ, துரக, பதாதி’’ என்னும் நால்வகைப் படைகளைக் மிக விவரமாக குறிப்புட்டுள்ளனர்.  பாரதப்போர் தனிலே,  இருதரப்பின் பெரிய மற்றும் அற்புதமான படைகளும்,  தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானைகளும், தேர்களும், மின்னலுடன் கலந்த மேகங்களைப் போல, அபரிமிதமாக நின்று கொண்டிருந்த தேர் படையணிகள் நகரங்களைப் போலத் தோற்றமளித்தனவாம்.  

Today, 3.6.2026   is day 7 of Sri Varadharajar   Brahmothsavam – and it was thiruther.  At Thiruvallikkeni  the grand big  Thiruther [chariot] rolls twice – one for Sri Parthasarathi and again for Sri Thelliya singar ….. one will realise its grandeur that of rolling juggernaut, if one were to stand near as the 8 or 9 feet wheel rotates by.  Thiruther is a grand occasion of togetherness of people.  Today it was siriya thiruther for Sri Varadhar ~ at Kanchi the events are much bigger – have heard till a decade or so ago, it would take days for the thiruther to return and it would be a holiday in Kanchi district on the occasion.  

Chariots are impressive  - On screen,  we have seen many – one got enamoured by the scene of Arjuna wading through the forces in Mahabaratha  - those chariots were quite attractive.  Ratha is not only fleet-footed mode during war, it symbolizes energy and zeal to move forward.  It was on the chariot steered by Lord Krishna, Geethopadesam occurred to Arjuna, the mighty warrior.  The rath itself according to legend was given by Agni.  The battle formation was unconceivably bigger ~ by some accounts an Akshauhini is described as a formation consisting of 21870 chariots, 21870 elephants, 65160 cavalry and more than a lakh of infantry.

In Greek mythology, Chariots were not just a means of transportation; they were symbolic and played a significant role in various myths and legends. Chariots were often associated with deities, notably those connected with the sky, sun, and moon, and were drawn by mythical creatures or powerful animals. 



The word "chariot" comes from the Latin term carrus through French chariot, a loanword from Gaulish karros. In ancient Rome a biga described a chariot requiring two horses, a triga three, and a quadriga four. In ancient Greek religion and mythology, Helios is the god who personifies the Sun.   Helios is often depicted in art with a radiant crown and driving a horse-drawn chariot through the sky. He was a guardian of oaths and also the god of sight.   The Roman Emperor Julian made Helios the central divinity of his short-lived revival of traditional Roman religious practices in the 4th century AD.

Phaethon is the son of Helios who, out of a desire to have his parentage confirmed, travels to the Sun god's palace in the east. He is recognised by his father and  he asks for the privilege of driving his father’s  chariot for a single day. Despite Helios' fervent warnings and attempts to dissuade him, counting the numerous dangers he would face in his celestial journey and reminding Phaethon that only he can control the horses, the boy is not dissuaded and does not change his mind. He is then allowed to take the chariot's reins; his ride is disastrous, as he cannot keep a firm grip on the horses. As a result, he drives the chariot too close to the Earth, burning it, and too far from it, freezing it. 






தமிழ் எழுத்தாளர்களில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி.  மூதறிஞர் ராஜாஜியின் வலது கரமாகவும் திகழ்ந்தார். சோழர்கள் மற்றும் பல்லவர்களின் பொற்கால ஆட்சியை வாசகர்களின் மனத்தில் நிழலாட வைத்த வரலாற்றுப் புதினங்களான "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்', "பார்த்திபன் கனவு' போன்றவை அவரது சிறந்த பங்களிப்புகளாகும். தலைமுறை கடந்தும் தமிழர்களை இந்த வரலாற்றுப் புதினங்கள் ஈர்த்து வருகின்றன.  சிவகாமியின் சபதம். 12 வருடங்களாகக் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.  முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். 

சிவகாமியின் சபதத்தில் - கச்சி மூதூர் விவரிக்கப்படும் பல இடங்களில் இங்கே ஒன்று :  பரஞ்சோதி, ஏகாம்பரநாதர் கோயில் சந்நிதிக்கு வந்ததும் அந்தத் திவ்விய சந்நிதியின் மகோந்நதமான தோற்றத்திலிருந்தே அதுதான் ஏகாம்பரர் கோயிலாயிருக்க வேண்டுமென்று பரஞ்சோதி ஊகித்து தம்முடைய ஊகம் சரிதானா என்று மாமல்லரை வினவினார். "  கொஞ்சம் ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். காஞ்சியின் இருதய ஸ்தானத்தை நன்றாய்ப் பார்க்கிறேன்" என்றார் பரஞ்சோதி.  கோயிலுக்குள்ளே ஒரு தீப வரிசைக்குப்பின் இன்னொரு தீப வரிசையாக முடிவின்றி ஜொலித்துக் கொண்டிருந்த அலங்கார தீபங்களையும் கோயிலுக்கெதிரே கம்பீரமான தேர் நின்ற நாற்சந்தியையும் தேரடியிலிருந்து நாலாபக்கத்திலும் பிரிந்து சென்ற தேரோடும் வீதிகளையும், குன்றுகளைப் போலப் பலவகைப் புஷ்பங்கள் குவிந்து கிடந்த கடைகளையும், தேங்காயும் கதலியும் மலை மலையாகக் குவிந்து கிடந்த கடைகளையும், அற்புதமான சிற்பத்திறமுடைய தூண்களின் மேலே அமைந்த நூற்றுக்கால் மண்டபங்களையும் பரஞ்சோதி பார்த்துவிட்டு, "ஆஹா! புலிகேசியின் காதலுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை!" என்றார்.  

அன்றே காஞ்சி நகரத்து வீதிகளும், திருக்கோவில்களுக்கு, தேர்களும் (மன்னர் தம் தேரும் - திருக்கோவில் திருத்தேர்களும்) சிறப்புற இருந்துள்ளன.   பல்லவர் சிறப்பு -கற்தேர்கள்.  கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மாமல்லபுரத்திலே தனிப் பெரும் கற்பாறைகளைக் குடைந்தும், புராணச் சிறப்புடன் சிற்பங்களைச் செதுக்கியும், ஒற்றைக் கல் கோயில்களாக்கியும் பல்லவர்கள் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.  இங்கே சிறப்பு பஞ்ச பாண்டவர் ரதங்கள்.  

There have always been evidences that our ancestors were advanced and lived a sophisticated yet contented life .. .. the slow unearthing of evidence only confirms their superiority ..   

Here are some photos of Sri Varadhar purappadu to thiruther through Kairavini kulakkarai  and thiruther purappadu at Thiruvallikkeni in the evening. 

adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 







Thirukachi Arulicheyal Goshti 2026

 


Thirukachi DEvathirajar Vaikasi Brahmothsavam day 6 2026

Upadesa Rathinamalai goshti .. .. …


Wednesday, June 3, 2026

Thiruvallikkeni Sri Varadharajar thirutherukku !!

 

திருவல்லிக்கேணி ஸ்ரீ கஜேந்திர வரதர்

திருத்தேருக்கு குளக்கரை புறப்பாடு

கண்டருளி எழுந்தருளல்

https://youtu.be/CUx8iK0yl_A



Tuesday, June 2, 2026

Thirukachi Sri Devathirajar mandagappadi 02062026

 

Thirukachi Sri Devathirajar mandagappadi 02062026

https://youtu.be/qNThdnO0_ok



 

Thirukachi Devathi Rajan - Sri Venugopalan Ekantha Sevai 2026

 

Thirukachi Sri Devathi Rajan

Vaikasi Brahmothsavam day 6- Sri Venugopalan thirukkolam

Ekantha Sevai



Thirukachi Upadesa Rathinamalai Goshti 2026

 

Thirukachi Sri Devathi Rajan brahmothsavam 6 - 2026.

Upadesa Rathinamalai goshti

: https://youtu.be/W2OV2tvOQY8



 

Thirumylai Sri Madhava Perumal kovil pillar

 


தூவலம் புரியுடைய திருமால் தூயவாயில் குழலோசை வழியே !! ~ Thirumylai Sri Madhava Perumal thirukovil pillar

Monday, June 1, 2026

Sri Varadharajar Sesha vahana purappadu 2026

 

Sri Varadharajar Sesha vahana purappadu 2026





Sri Devathi Rajar Brahmothsavam is grandly being conducted at Perumal Kovil (Thirukachi aka Kanchipuram).  Today 31.5.2026 is day 4 of the uthsavam – Sesha vahanam.  

Kanchipuram, is Saptapuri, one of the  seven holiest cities, - mokshapuri, the city of  salvation. One of the country’s oldest continuously inhabited cities, Kanchipuram was called the city of a thousand temples, and it has more than a hundred even today. While it will take an eternity to explore all of Kanchi’s temples we would immediately tend to associate the city with Pallava kings.  

The Pallava dynasty existed from 275 CE to 897 CE, ruling a significant portion of southern India also known as Tondaimandalam. They gained prominence after the downfall of the Satavahana dynasty.   Most of the history that we read in schools was about   the reign of Mahendravarman I (600–630 CE) and Narasimhavarman I (630–668 CE).  During their reign, they remained in constant conflict with both the Chalukyas of Badami in the north, and the Tamil kingdoms of Chola and Pandyas in the south. The Pallavas were finally defeated by the Chola ruler Aditya I in the 9th century CE. 

The Pallavas are famous for  their patronage of architecture, the finest example being the Shore Temple, and grand architectural masterpieces at Mamallapuram. Kancheepuram served as the capital of the Pallava kingdom. The dynasty left behind magnificent sculptures and temples, and are recognised to have established the foundations of medieval South Indian architecture. They developed the Pallava script, from which Grantha ultimately took form. This script eventually gave rise to several other Southeast Asian scripts such Khmer. The Chinese traveller Xuanzang visited Kanchipuram during Pallava rule and extolled their  rule.  

Of the many temples of Kanchi, the  majestic Vaikunta Perumal Temple dedicated to  Sriman Narayana, is believed to have been built by the Pallava king Nandivarman II. What’s unusual about this temple is that there are three sanctums one on top of the other. Lord Vishnu is depicted in seated, reclining and standing postures in the lowest, middle and upper levels respectively.  The central shrine is surrounded by a passage whose walls are covered with incredible relief panels and inscriptions about the Pallava dynasty until the ascent of Nandivarman II to the throne, including the empire’s ongoing conflict with their rivals, the Chalukyas.  

Moving away from the History that was read in school books, here is something extracted from the book “Pallavas “ by G Jouveau – Dubreuil, Doctor of Univ of Paris,  Professor, College, Pondicherry, published in 1917 priced at Rs.2/-  .. .. … 

                      The record found at Mayidavou is written in Prakrit.  There are also 2 other records of same kind – but the other Pallava records are in Sanskrit.  One of these two records that of Hirahadagalli is dated in the 8th year of tehr eign of Sivaskanda varman, King of Kanchi, who is of the Pallava dynasty and Bharadvaja gotra and who by this document confirms a gift made by his father Bappa-deva.  

The Penugonda plates (GO no. 920, 4.8.1914) mention two Pallava kings Simhavarman and Skandavarman, but the age of these plates is not known.  Then there is the authentic Vayalur inscription which is engraved on a cubical pillar of the Pallava style and runs round it in the form of a helix.  It begins with the well known series of names : Brahma, Angiras, Brihaspati, Samyu, Bharadwaja, Drona, Asvathaman, Pallava, Asoka, Harigupta, Aryavarman and then two or 3 names hardly legible and then Kalinda, Byamalla, Ekamalla .. .. after this last name begins a series of 36 names.  

The last few names are too well known to us : Nandivarman, Simhavarman, Mahendravarman, Narasimha varman, Parameswara varman. The existence of a King called Virakurcha is proved by the plate discovered at Darsi.  The existence of a king by name Skandasishya is established by the Tirukkalukkunram inscription.  

Dr Fleet has assigned the date of about 500A.D to the Penugonda plates, which is the date we give to (26) Skandavarman, son of (25) Simhavarman who crowned King Madhava II alias Simhavarman.  The name Simhavarman given to a king of the Western Ganga dynasty shows that Aryavarman, who had been crowned by the Pallava king had married his daughter and his son Madhava II received the name of his grandfather, the pallava king Simhavarman.    The Vayalar inscription enables us to believe that Penugonda plates belong to 500 A.D.  

The Velurpalaiyam plates say of Simhavishnu – he quickly seized the country of Cholas embellishd by the daughter of Kavira [ie., the river Kaveri] whose ornaments are the forests of paddy (fields) and where (are found) brilliant groves of areca (palms).  From this it would appear that the Chola country did not belong to the Pallavas before Simhavishnu and it was he who conquered it.  

Moving away from the heavy dose of history, Sri Varadharajar uthsavam is on at Thiruvallikkeni too following Thirukachi and today is day 4 – there was Sesha vahana purappadu in the evening in which it was Nanmukhan thiruvanthathi of Thirumazhisai azhwar.  






எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனது பரத்துவத்தை அறுதியிட்டு உரைப்பவர் பக்திசாரர்.  இதோ இங்கே திருமழிசைப்பிரானின் நான்முகன் திருவந்தாதி பாசுரம் :  

தமராவார்  யாவருக்கும் தாமரை  மேலாற்கும்

அமரர்க்கும் ஆடரவர்த்தாற்கும் - அமரர்கள்

தாள்  தாமரை  மலர்களிட்டிறைஞ்சி, மால்வண்ணன்

தாள்தாமரை   அடைவோமென்று. 

எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனே மிகவும் உயர்ந்தவன்.  அந்த கரியமேனியனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளில்  பல்வேறு மணம் கமழும் புஷ்பங்களை ஸமர்ப்பித்து வணங்கி  அத்திருவடித் தாமரைகளையே  அடைவோமென்று பக்தராயிருக்குமவர்கள் -  திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்,  ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும், நித்யஸூரிகளுக்கும் மற்றுமெல்லார்க்கும்  மேற்பட்டவராவர். அத்தகைய எம்பெருமானை அனுதினமும் வணங்குவோர்க்கு எல்லா நலன்களும் தானே அமையும்.

Here are some photos of Sri Varadharajar Sesha vahana  purappadu on day 4 of Devathirajar uthsavam at Thiruvallikkeni this day.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
31.5.2026

PS: 2022 post of mine reproduced with photos of date







 

Grazing deer ~ Kannan Kuzhalinosai ... . Periyazhvaar pasuram

 

Grazing is primarily the practice where livestock (like cows, sheep, and goats) feed on wild vegetation, especially grass, in an outdoor area.  Deer also graze grass. Both deer and cattle are ruminants with four-chambered stomachs (rumen, reticulum, omasum, abomasum) and chew cud, but they differ significantly in dietary specialization and digestive efficiency: 

Deer's small rumen and faster digestive turnover mean fibrous grass doesn't stay long enough to break down completely. They need concentrated nutrients from browse and forbs, not the structural carbohydrates in mature grass. 

Cattle are built to extract nutrients from tough grass through longer retention and larger fermentation capacity, while deer are optimized for quickly processing high-quality, low-fiber foods. 

Moving away here is an interesting Pasuram from Periyazhwar Thirumozhi.

 


மேய்கை (Meykai) என்பது தமிழில் மேய்ச்சல் அல்லது grazing என்ற பொருளைத் தரும் சொல்லாகும்.

பெரியாழ்வார் தமது பிரபந்தம் - மூன்றாம் பத்து ஆறாம் திருமொழியில் தேவர்களுக்கெல்லாம் தேவனான கண்ணன் எம்பெருமான் வேணு கானத்தை இசைக்க, அதைக் கேட்டு பேரின்ப அதிர்ச்சியையும், பேரானந்தத்தையும் அடையும் தேவர்கள், முனிவர்கள், ஆயர்பாடி ஜனங்கள், பசுக்கள், பறவைகள், மரங்கள், எப்படி தன்னிலை இழந்து, தங்கள் தொழில்களையும், செயல்களையும் மறந்து செயலற்று பிரமித்து நின்றார்கள் என்பதை அத்யற்புதமாக விவரிக்கின்றார். 

 

திரண்டெழு தழை மழை முகில் வண்ணன்

செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே

சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்

ஊதுகின்ற குழலோசை வழியே

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து

மேய்ந்த புல்லுங் கடை வாய் வழி சோர

இரண்டு பாடுந் துலங்காப் புடை பெயரா

எழுது சித்திரங்கள் போல நின்றனவே

 

காளமேகம் போன்ற வடிவுடைய கண்ணபிரானின் குழலோசையைக் கேட்டதும்  மான் கூட்டங்கள் அறிவிழந்து மேய்ச்சலை மறந்தன.  மதிமயங்கி மேய்ப்பதை மறந்து, ஏற்கனவே வாயில் கவ்வின புல்லும் வாயின் ஓரமாக வெளியே நழுவி விழ, முன்  பின் பக்கங்களில் அடி வைத்து நகராமல், சுவரில் எழுதின சித்திரம் போல் அசையாமல் நின்றன! செயலற்று நின்றன என்கிறார் பெரியாழ்வார்.

 
Picture of grazing deer with grass in mouth !
 
Regards – S Sampathkumar
1.6.2026