To search this blog

Friday, July 2, 2021

Aani Revathi - Sri Ranganathar - அல்லாது செய் நீதி யாரொடும் கூடுவதில்லை

We start with a Thirukkural today  .. ..  குறள் 371:

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி.

பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

Today 2nd July 2021  is Revathi in the month of Aani – in normal times, there would be chinna mada veethi purappadu of Sri Ranganathar.  Today being a Friday too, there would be ulpurappadu of Srimannathar and Sri Vedavallithayar.

For a Srivaishnavaite, the requirements are simple but specific.  One need not be materialistically rich, one need not possess properties in abundance but should reside in a divyadesam like Thirumala, Thiruvarangam, Thirukachi, Thiruvananthapuram, Thirukurungudi, Thiruvallikkeni or a place associated with our Acaryas like Thirunarayanapuram.  When one owns a measurable piece of land in a place associated with Emperuman, at least for some other purpose, one would be forced to visit the place quite often and have darshan of Emperuman under that pretext.  If one is associated with those doing kainkaryam at various divyadesams, the possibilities of darshan of Emperuman increases manifold.    




கொலை, களவு, காமம் ஆகிய தீய விருப்பம் மூன்றும் தளர்ச்சியுற்ற உடலிலே தோன்றுவன. பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன. வெஃகுதல் (விரும்புதல்), வெகுளுதல், மயக்கம் இம்மூன்றும் உள்ளத்தில் தோன்றுவன. இந்த வகைகளில் தீவினை தோன்றும். இந்தத் தீவினையின் தன்மையை உணர்ந்தோர் தீயவற்றில் மனத்தைச் செலுத்த மாட்டார். தீயவற்றில் மனத்தைச் செலுத்துவாராயின் விலங்கு, பேய், நரகர் என்னும் பிறப்புகளை எடுத்துக் கலக்கமுற்றுப் பிறவிதோறும் துன்புறுவர். - மணிமேகலையில்  விளக்கப்படும்  கோட்பாடு.  திருவள்ளுவரின் திருக்குறளில் ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து பாடல்களில் தீவினையின் சக்தியை  ஓதுகிறார்.



இம்மையிலே வினைப்பயன் வலியது.   எம்பெருமான்  அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் ஈட்டினாலும்,  கொண்டவனுக்கு அதனால் எந்த பலனும் இராது !  அதைக் காப்பாற்றுதலும் கடினம்.   எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. தமக்கு உரிய பொருளை  வேண்டாமென்று  விலக்கினாலும்  - அது அவர் தமே நிலைத்து இருக்கும்.





எப்போதும் நல்வினை நற்பயனையும், தீவினை தீய பயனையும் அளித்தே தீரும். "ஆயிரம் பசுக்களிலும் கன்று தன் தாயைத் தேடி அடைவது போல், முன் பிறப்பில் செய்த செயல் செய்தவனைப் பின்பற்றுகிறது'' என்று மகாபாரதம் கூறுகிறது.இன்று குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி பாசுரம்:

தீதில் நன்னெறி நிற்க  அல்லாது செய்

நீதி யாரொடும் கூடுவதில்லை யான்

ஆதி ஆயன் அரங்கன்  அந் தாமரைப்

பேதை மாமணவாளன்றன் பித்தனே.

வாழ்க்கையில் பல்வேறு வாய்ப்புகள் நேரலாம் ... நல்வழியில் அல்லது தீவழியில் செல்லலாம்.  மேம்போக்காக - தீவழி எளிதாகவும் நிறைய பொருள் அளிப்பதாகவும் தெரியலாம் !  குலசேகரர் சிறந்தவர் -  குற்றமற்ற நல்வழி இருக்க -  அவ்வழியே ஏகாமல் - அல்லாது செய்வார்  அதாவது, நல்வழிக்கு எதிர்த்தட்டானவற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு, யான் சேர்வதில்லை, சேரவும் மனம் இழைவதில்லை.   உலகங்கட்கு  முதல்வனாய்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாக  அவதரித்து ஸர்வஸஞ்லபனாய் அழகிய தாமரைப் பூவில் அவதரித்த  பிராட்டியின் வல்லபவனான ஸ்ரீரங்கநாதன் திறத்தில் ஆசைப்பட்டு பித்தனாக இருக்கிறேன். அது எமக்கு உகந்தது என்கிறார் ஆழ்வார் தமது பாசுரத்தில்.

As guided by Sri Kulasekara Azhwar on this holy Revathi day, we pray our Emperuman Sri Ranganathar for the welfare of the society, goodness of the people, eradication of dreaded Corona and other diseases.  Here are some photos from REvathi purappadu at Thiruvallikkeni divyadesam on 18.9.2016

~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2nd July 2021`. 










No comments:

Post a Comment