Sri Azhagiya Singar Aani Brahmothsavam day 4 – Chandra Prabhai pathi ula
Friday, June 30, 2023
Sri Thelliya Singar Suryaprabhai 2023
Sri
Azhagiya Singar Aani Brahmothsavam day 4 – Suryaprabhai purappadu
Thiruvallikkeni–
arulicheyal goshti - Nanmukhan thiruvanthathi
Thursday, June 29, 2023
Allikkeni Azhagiya Singar (H)amsa vahanam 2023
Thiruvallikkeni
Aani brahmothsavam 2023
Hamsa
vahanam – Sri Azhagiya Singar
Straight looking
at you !!
29.6.2023
Sri Azhagiya Singar new Venkatadri kondai 2023
திருவல்லிக்கேணி ஆனி ப்ரஹ்மோத்ஸவம் –
ஸ்ரீ
அழகிய சிங்கர் ஹம்ச வாஹன பத்தி உலா 29.6.2023
புது வெங்கடாத்திரி கொண்டை அணிந்து சேவை அளிக்கும் தெள்ளியசிங்கர்.
Sri Azhagiya Singar Garuda Sevai 2023
Sri Azhagiya Singar Garuda Sevai 2023
ஸ்ரீமன் நாரணனே நமக்கு என்றென்றும் அழியாத நிதி. அவன் திருவடி நீழலில் உள்ளோர்க்கு எந்த தீங்கும் நடக்காது என்பது திண்ணம்.
Brahmothsavam is a grand festivity – each day it is different Vahanam, and Perumal has classy alankarams … on Garuda vahanam day, thousands gather early in the morning to catch glimpse of the Lord as he comes out of the gate (Gopura vasal darsanam).
Today is day 3 of Sri Azhagiya Singar Aani
brahmothsavam at Thiruvallikkeni and it was Garuda sevai for Thelliya
Singar. Being Swathi thirunakshathiram
in the month of Aani, it is sarrumurai vaibhavam for Sri Periyazhwar.
Here is a short video taken this morning .. : https://youtu.be/HSNnACGvbk0
More photos to follow !!
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.6.2023
Wednesday, June 28, 2023
Sri Azhagiya Singan pathi ula 2023 - பயிலும் சுடரொளி மூர்த்தி
பயிலும் சுடரொளி மூர்த்தி - ஸ்ரீஅழகியசிங்கன்
__________ is a cyclic monoterpene ketone that is bornane bearing an oxo substituent at position .. .. wonder what ?!?!?
Lamps provide light ! - An electric light, lamp, or light bulb is an electrical component that produces light. It is the most common form of artificial lighting. Lamps usually have a base made of ceramic, metal, glass, or plastic, which secures the lamp in the socket of a light fixture, which is often called a "lamp" as well. The electrical connection to the socket may be made with a screw-thread base, two metal pins, two metal caps or a bayonet mount.
An electric bulb refers to an
electric lamp which consists of a translucent or transparent glass housing, also known as a light bulb. This simple device
has been used for the purpose of illumination for more than a century.
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை, .... .. ..
எம்பெருமான் எத்தகையவன் ? - ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி வரிகளில் - அவன் மிக்க தேஜஸ்ஸையே விக்ரஹமாக உடையவன், சுடர் என்றும் ஒளி என்றும் தேஜஸ் மிக்கவன், சுத்த சத்வமாய் ஸ்வரூப ப்ரகாசகமான விக்கிரஹத்தை உடையவன் - இதோ இங்கே எங்கள் எம்மிறை எம்பெருமான் இமையோர்க்கு நாயகன் திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கனின் திவ்யஸ்வரூபம்.
முதல் வரியில் சொல்லப்பட்டது "கற்பூரம்". கற்பூரம்
எனும் சொல்லின் ஆங்கிலச் சொல்லான Camphor எனும் சொல் , பிரெஞ்சு சொல்லான camphre என்பதிலிருந்து
வந்தது. இந்த பிரெஞ்சு சொல் இடைக்கால லத்தீன் சொல்லான camfora என்பதிலிருந்தும், அதே
போல அரபிய சொல்லான kafur என்பதிலிருந்தும், சம்ஸ்கிருத சொல்லான கற்பூரிலிருந்தும் பெறப்படுகிறது
கீழே கற்பூர ஒளி, மேலே மின்சார விளக்கு ஒளி - மின்னுவதோ அவன் திருமேனி
எழிலே !! திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனின் எழில் மிகு திருக்கோலம்
- ஆனி
ப்ரஹ்மோத்சவத்தின் 2ம் நாள் மாலை - சிம்ஹ வாகனத்துக்கு எழுந்து அருளும் பத்தி
உலா.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.6.2023
Thiruvallikkeni Narasimhan - Thelliyan - நரசிங்கமதாய உருவே !
நரசிங்கமதாய உருவே !
திருவல்லிக்கேணியில் நடைபெற்று வரும் ஆனி ப்ரஹ்மோத்சவத்திலே இன்று 28/6/2023
இரண்டாம் நாள். காலை சேஷ வாஹனம்.
மாலை சிம்ஹ வாஹனம் ! - ஸ்ரீநரசிம்மனுக்கே சிம்ம வாகனமா !!
யோகோ
யோகவிதாம் நேதா பிரதான புருஷேஸ்வரஹ
நாரஸிம்ஹ வபுஹ ஸ்ரீ மான் கேசவ புருஷோத்தம
எம்பெருமான் நாரணன் எத்தகையவன் ? - பக்தனுடைய பயத்தைப் போக்க அவன் விரும்பிய காலத்திலே திவ்ய நரசிம்ஹ உருவத்தைக் கொண்டவன் .. .. ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவன் - அழகிய கேசாதிபாசங்களை உடையவன் - திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கன்.
எல்லா ஜீவராசிகளினதும் இருதயத்தில் ஈஷ்வரன் நியமித்து நடத்துபவனாய் இருக்கிறான். யோகத்தினால் (சித்தத்தினால்) அறியப் படுபவர். யோகவித்தைகளியின் தலைவர், இயற்கையின் மாயை, அதனுள் வாழும் ஜீவராசிகளின் தலைவர். திருமகளை திருமார்பில் கொண்டவர். நரனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தை பக்தனுடைய துயர் தீர்ப்பதற்காக,அவன் பயத்தை போக்குவதற்காக அவன் வேண்டிய போது எடுத்தவர். .எந்த நேரத்திலும் அடியார்களின் விண்ணப்பத்திற்கிணங்க உதித்து அருள் புரியும் நம் திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கனை தொழுவோம்.
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
28.6.2023
Tuesday, June 27, 2023
Sri Azhagiya Singar PUnnai kilai vahanam 2023 - பன்மணி முத்து அசைந்தாட, இன்னிசை ஒலிப்ப !!
Sri
Thelliya Singar, the divine flautist
2023- பன்மணி முத்து அசைந்தாட, இன்னிசை ஒலிப்ப !! - *நாகத்தணையான் குழலூத அமரலோகத்தளவும் சென்றிசைப்ப*
Tamanu oil is extracted from the nuts of Calophyllum inophyllum (Tamanu
Tree). The oil is primarily used in skin care treatment. Tamanu oil contains
essential fatty acids and minerals that help recover skin from different
degrading conditions and also helps in curing acne, scars and even join pains.
The major constituents of tamanu oil are linoleic acid, oleic acid, stearic
acid, and palmitic acid of which linoleic acid and oleic acid consit more than
60% by volume. The tamanu oil market is experiencing higher demand rates
annually primarily from the western population. The tamanu oil market is
expected to be driven by the growing influence of natural remedies through
traditional medicines globally. Wonder what ! – read on !!
Call it
Dilo or Tamanu . .. .. on the evening of day 1 of Aani Brahmothsavam- 27.6.2023, – it is Punnai
Kilai Vahanam with Sri Azhagiya Singar portraying His avatar as Sri
Krishna, the Divine Flautist.
Unlike Ramavathara, Lord Krishna exhibited
glimpses of divinity many a times... as he grew up in Vrindavanam, people
were attracted to Him with boundless devotion longing for the Lord, longing to
hear His melodious flute; yearning to get near and be with Him. It
was not the earthly love but the infinite devotion to the Lord ~ the
Punnaikilaivahanam depicts his iraasaleelai with gopikas.
This International Day of
Forests promotes education to Learn to Love Forests. It underscores the
importance of education at all levels in achieving sustainable forest
management and biodiversity conservation. Healthy
forests mean healthy, resilient communities and prosperous economies. Trees
remove pollutants and fine particulates from the air, reduce noise pollution
and act as buffers to keep residential areas quiet and serene. Some of the regular ones that we can perhaps identify is -
the Neem (Azadirachta indica), Tamarind (Tamarindus indica) & Calophyllum inophyllum – what - to those regular temples, it
is the common Punnai tree. We have grand punnai vahana purappadu on day 1 evening of
Brahmothsavam at Thiruvallikkeni as also on the day after Sree Krishna Jayanthi
- it is the subject matter of this post.
Popularly known in our old
Tamil folklore as the 'Tree that cures' or as
the 'Tree that protects', the Punnai tree's
population along our coastal and river belts has been dwindling in the last
three decades owing to its rich timber value. Scientists have now begun
repopulating this tree for its biofuel and healing properties. The
bio-fuel produced from Punnai tree can run a machine like a pumpset or even a
generator, say researchers.
Sri Periyazhwar describes
the birth and the growing up of Lord Sri Krishna at Gokul, Vrindavan and other
places - in his Periyazhvar thirumozhi that starts with Pallandu,
pallandu to Perumal – he is wonderstruck at this miracle that occurred in this
mother earth – amidst young cowherds grazing the calves, the Lord reclining on
serpent played His flute and that resonance took all of them to high
heaven. Even the Gods forgot to partake of the fire oblations and went
down in groups to ayarpadi, the place of cowhereds to get drenched in the sweet
mellifluous music that pierced their ears, they followed Govindha wherever He
went.
ஸ்ரீஅழகியசிங்கர் ப்ரம்மோத்சவத்தில், முதல் நாள் மாலை
- ஸ்ரீக்ருஷ்ணாவதார நாயனாக அற்புத சேவை அளிக்கும் - புன்னைகிளை
வாஹனம். வேய்ங்குழல் ஊதும் கண்ணனாக 'புன்னைக்கிளை வாஹனத்தில் " குரவை ஆய்ச்சியர்களோடு
விளையாடும் திருக்கோலம்." புன்னை மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன்
இலைகள் சற்று பெரியதாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். புன்னைமரத்தின் அறிவியற் பெயர்: calophyllum inophyllum : calophyllum என்பதன்
பொருள் அழகான இலை. இன்று அழகிய சிங்கர் வேய்ங்குழல் வாய் வைத்து, குரவையாச்சியர்
கவர்ந்த திருக்கோலத்தில் புன்னைக்கிளைகளில் அமர்ந்து அற்புத சேவைசாதித்தார். பெரியாழ்வார் தனது பாசுரங்களில், கண்ணனின் குழலோசையை :
புவியுள் நான்
கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து
அவையுள்* நாகத்தணையான்
குழலூத அமரலோகத்தளவும் சென்றிசைப்ப*
அவியுணா மறந்து வானவரெல்லாம்
ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி*
செவியுணாவின் சுவைகொண்டு
மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.
~ என சிலாகிக்கிறார். கண்ணபிரான் வளர்ந்த புண்ணிய பூமியான கோகுலத்திலேயும்
விருந்தவனத்திலேயும் , நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தைச் உரைக்கிறேன் கேளுங்கோள்
- சிறந்த பசுக்களை மேய்த்து வரும் இடைப் பிள்ளைகள் திரண்டிருக்கின்ற
குழுமத்திலே, சேஷசாயியான கண்ணபிரான் மிக இனிமையாக தன் புல்லாங்குழல் இசைக்குமளவிலே,
அந்த ஆசையானது தேவலோகம் வரைக்கும் பரவி, அங்கேயும் வியாபிக்க அந்த இசையில் கட்டுண்ட
தேவர்களனைவரும் ஹவிஸ்ஸு உண்பதை கூட மறந்தொழிந்து, பூவுலகத்திலே இடைச்சேரி நிறையும்படி
வந்து சேர்ந்து நெருங்கி தங்கள் செவிகள் நிறைவு பெறுமாறு அந்த வேய்ங்குழலின்
இனிய ரஸத்தை உட்கொண்டு மனங்களித்து பசுக்களை மேய்க்கும் கோவிந்தனான கண்ணபிரானை பின்
தொடர்ந்தோடி ஒரு க்ஷணகாலமும் அவனை விடமாட்டாதிருந்தனராம்.
Here are some photos of the grand purappadu of Sri Azhagiya Singar this night at Thiruvallikkeni divyadesam today.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.6.2023
Monday, June 26, 2023
Aani Brahmothsavam Ankurarpanam 2023 - यस्य द्विरदवक्त्राद्याः पारिषद्याः परः शतम् ।
Aani
Brahmothsavam Ankurarpanam 2023 - यस्य द्विरदवक्त्राद्याः
पारिषद्याः परः शतम् ।
Brahmothsavam
is a very happy occasion – devotees
assemble in large numbers, do service to Lord in every possible manner.
At Thiruvallikkeni, there are two grand brahmothsavams [Chithirai for Sri
Parthasarathi and Aani for Sri Azhagiya singar)
உத்சவங்கள் ஆனந்தத்தை
தர வல்லன ! - தொண்டிலே ஈடுபடும் அனைவர்க்கும் மட்டுமல்ல ! - உத்சவ நாயகனான எம்பெருமானுக்கும்
கூட ஆனந்தமே ! நாளை முதல் திருவல்லிக்கேணியில் ஸ்ரீ அழகியசிங்கர் ஆனி ப்ரஹ்மோத்ஸவம். ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்வைபவம்,
பத்தாம் நாள் த்வாதச ஆராதனை, வெட்டிவேர் தேருடன் முடிவடையும். பின்னர் பத்துநாள் விடையாற்றி
உத்சவம். உத்ஸவ துவக்கம் செல்வர் புஷ்ப பல்லக்கு, அடுத்த நாள் அங்குரார்ப்பணம்
- சேனை முதலியார் புறப்பாடு - உத்சவ முதல் நாள் கொடியேற்றம்.
यस्य द्विरदवक्त्राद्याः पारिषद्याः परः शतम् ।
विघ्नं
निघ्नन्ति सततं विष्वक्सेनं तमाश्रये ॥ २॥
yasya dviradavaktrādyāḥ pāriṣadyāḥ paraḥ śatam .
vighnaṃ nighnanti satataṃ viṣvaksenaṃ tamāśraye
I bow obeisance and worship the one by whose quick
commands function the entire Universe right from the Nityasuris .. .. I
pray the one who always removes obstacles and impediments (in
performing ones duties) - I bow to such a one â Vishwaksena.
Today is Angurarpanam of Aani Brahmothsavam for Sri Thelliya Singa Perumal and from tomorrow on there would be
grand 10 day Brahmothsavam.
சேனை (பெயர்ச் சொல்) : = படை -
பண்டைய காலத்தில் பல படைகள் ஒன்றிணைந்தது சேனையாகும். சேனை என்ற சொல்லுக்கு அடிச்சொல் சேர்தல், கூடுதல்
என்பதாகவும் கொள்ளலாம். சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் அல்லது
பிற பொருளிற் பல எண்ணிக்கை என்றும் கொள்ளலாம். போர்தனை வெல்ல பெரிய சேனையும்,
ஆயுதங்களும், சிறந்த சேனாபதியும் அதி அவசியம்.
சேனைத்தலைவர் (சேனைக்குடையார், சேனையார், சேனை முதலியார், சேனைக்குடியர், சேனை
குல வேளாளர்) என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளதாக அறிகிறோம். சேனைத்தலைவர்
- ஒரு சிறந்த போராளியாக, மதி வியூகம் அமைக்க தெரிந்த படைத்தலைவர் - மன்னனது சபையில்
முக்கிய ஆலோசகர். தவிர இப்பதவி வகிப்போர் - நிலச்சுவான்தார்களாக, பண்ணையார்களாக,
ஆயுதம் செய்யும் கலை அறிந்தவர்களாக, வணிகர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்
காலத்தில் இவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதாக சில குறிப்பேடுகள் இயம்புகின்றன.
படையின் எண்ணிக்கையை விட, போராளிகளின் குணமாக உற்சாகம் இருக்குமேயானால்,
அதுவே நிச்சயம் வெற்றியின் அடையாளம் ஆகும். அவ்வாறு ஊக்கப்படுத்தி, சரியான உத்திகளை
தரும் பொறுப்பில் இருப்பவர் படை தளபதி. மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.
அதில் கவுரவர்கள் சார்பில் தலைமையேற்ற நான்கு பேரை முன்னிலைப்படுத்தி நான்கு பருவங்கள்
பிரிக்கப்பட்டன. மகாபாரதத்தில் அவை பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய
பருவம். பீஷ்மர் முதல் 10 நாட்களும், துரோணர் 5 நாட்களும், கர்ணன் 2 நாட்களும், சல்லியன்
ஒரு நாளும் தலைமையேற்றனர். கௌரவர் பக்கம் பதினொரு அக்ஷௌஹிணி சேனை இருந்தது. பாண்டவர்களிடமோ
ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டுமே இருந்தது. 21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள்,
109350 காலாட்படையினர் கொண்டது ஒரு அக்ஷௌஹிணி. திருஷ்டத்யும்னன் எனும்
இணையற்ற போர் வீரன் - பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனுக்குப் மகனானவன்,
குருச்சேத்திரப் போரின்போது பாண்டவர்களுடைய தலைமைப் படைத்தலைவனாகப் வெற்றிக்கு காரணமானவன்.
நமக்கு போரோ, வணிகமோ, பிற பொருட்செல்வமோ முக்கியமல்ல - எம்பெருமான்
மட்டுமே முக்கியம். அவர்தம் திருவீதி புறப்பாடுகளை முக்கியமாக உத்சவ புறப்பாடுகளை அதிலும்
அதி முக்கியமாக - ப்ரஹ்மோத்சவ வைபவங்களை விரும்பி எம்பெருமானை சேவித்து அருள் பெறுவோம். திவ்யதேசங்களில்,
ப்ரஹ்மோத்சவத்திலே - முதல் புறப்பாடு - அங்குரார்ப்பணம் தான் - அன்று எம்பெருமான் புறப்பாடு
கண்டருள மாட்டார் .. .. நம் சம்பிரதாய ஆசார்யர் சேனை முதலியார் எனும் விஷ்வக்சேனருக்குத்தான்
புறப்பாடு !!
திவ்ய தம்பதிகளின் ஸேநாதிபதியானவரும், ‘யஸ்யத்விரத வக்ராத்யா .. ..
.. விக்னம் நிக்நந்தி விஷ்வக்ஸேனம் தாமஸ்ரயே' என்று ஸ்ரீ விஷ்ணு
ஸஹஸ்ரநாமத்தின் ச்லோகத்தில், “நம் விக்நங்களை (தடைகளை / கஷ்டங்களை) விலக்கிக்
கொடுப்பவரான விஷ்வக்ஸேநரை ஆஸ்ரயிக்கிறேன்” என்று வணங்கப்படும் ஸேனை முதல்வரை வணங்கி
நம் கவலைகள் தீர்வோம்.
யஸ்யத்விரத வக்ராத்4யா: பாரிஷத்3யா:
பரஷ்ஷதம் |
விக்4னம் நிக்4னந்தி சததம்
விஷ்வக்சேனம் தமாஷ்ரயே ||
நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது;
பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில்
நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு
உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து,
தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள்
என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர்
என வாழையடி வாழையாக வந்த மரபு.
எம்பெருமான், பெரிய பிராட்டி தாயாரை தொடர்ந்து நம் ஸத்ஸம்பிரதாயத்தில்
ஆசார்ய பரம்பரையில் மூன்றாவதாக இருப்பவர் சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்சேநர். இவர் எம்பெருமானின் படைகளுக்கு தலைவராக
இருக்கிறார். ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள் அனைவரையும்
அந்த அந்த செயல்களில் நியமிப்பவராக உள்ளார். இவரே
நித்ய சூரிகளில் ஒருவராக, ஸேநாதிபதியாக, எம்பெருமானின் அதீநத்திற்குட்பட்ட நித்யவிபூதியையும்,
லீலாவிபூதியையும் தன் மேற்பார்வையில் பார்த்துக்கொள்பவராக இருக்கிறார். ஸேனை
முதல்வர், ஸேநாதிபதி, வேத்ரதரர், வேத்ரஹஸ்தர் என்று பல திருநாமங்கள் கொண்டவர். சூத்ரவதி
என்று இவருடைய திவ்ய மஹிஷியின் திருநாமம். எம்பெருமானின் சேஷ ப்ரசாதத்தை முதலில்
கொள்பவராதலால், இவருக்கு சேஷாஸனர் என்ற திருநாமமும் உண்டு. விஷ்வக்சேனர்
அவதரித்த திருநக்ஷத்திரம்: ஐப்பசி, பூராடம்; இவர் அருளிய சாஸ்திரம்: விஷ்வக்ஸேன
ஸம்ஹிதை.
அங்குரார்ப்பணத்தன்று துளசி செடி அல்லது நல்ல மரங்கள் அடியில் இருந்து
அடிமண் சேகரிக்கப்பட்டு, பாலிகையில் நவதானியங்கள் சேர்த்து, - சந்நிதி
யாகசாலை - தேவதைகள் ஆஹ்வாஹனம் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணியில் சேனைமுதலியார்
புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபேயாழ்வார் சன்னதியில் புற்று மணல் வைபவம் திருக்கோவில்
பட்டாச்சார்யர்கள் வெள்ளி மண்வெட்டி கொண்டு மண் சேகரிக்கப்பட்டு, திருக்கோவில் கைங்கர்யபரர்கள்
யாகசாலைக்கு ஏளப்பண்ணி கொண்டு வருகிறார்கள்.
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.6.2023