Tuesday, November 30, 2021

Thirumangai Mannan Sarrumurai 2021

திருமங்கை மன்னனின் சாற்றுமுறை வைபவம் கார்த்திகையில் கார்த்திகை நாள்.  இந்த வருடம்  19.11.2021 அன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி -  தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.   


Kaliyan was born in Thiru Kuraiyulur, 2 km from Thiruvali-ThiruNagari near Sirkazhi.  At the time of his marriage with Kumudavalli   – one of the ‘wedding’ conditions  was  to feed 1008 Vaishnavites every day.  By divine grace, Kaliyan turned Thirumangai Azhwar, which gets enacted on day 8 Kuthirai vahana purappadu at Thiruvallikkeni.  He was to categorically direct us on the greatness of chanting Ashtaksharam of Sriman Narayana.

சோழ நாட்டில் உள்ள திருவாலி-திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் ஒரு கார்த்திகைத் திங்களில் கார்த்திகைத் திருநாளில் - திருமாலின் வில்லான ஸார்ங்கத்தின் அம்சமாய் தோன்றியவர். சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் திருவெண்காட்டில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்குறையலூர்.  இவரது இயற் பெயர் 'நீலன்'.  சோழநாட்டில் குறுநில மன்னராய் விளங்கினார்.  நீலனின் படைத்தளபதிகளாக, இவரது சீடர்களாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் :  நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான் போன்றவர்கள்.

கலியன் என்றால் அவரது குதிரை 'ஆடல்மா' என்னும் குதிரையும், 'அமரிற் கடமா களியானை' என்னும் யானையும் மற்றும் அவரது சிஷ்யர்களும்  நினைவுக்கு வரக்கூடும். குதிரை சங்க இலக்கியங்களிலும், மன்னர் காலத்திலும்,  புராணங்களிலும் சிறப்பாக கருதப்பட்டு உள்ளது.  குதிரை, புரவி தவிர ~ மா, பரி, மான், இவுளி, கலிமா - இதனது வேறு பெயர்கள்.   திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.   ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.  ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கவிலோக திவாகரன், ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் எனும் பல பெயர்கள்  உண்டு.

ஆழ்வார் குமுதவல்லியை     மணம்முடிக்க ஆசைப்பட்டார்.  குமுதவல்லி "பஞ்ச ஸம்ஸ்காரமும், ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டினாலின்றி நான் உங்களைக் கணவராக ஏற்க மாட்டேன்" என்று கூற - அதன்படியே   ஓர் ஆண்டு முழுவதும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுதூட்டி, தன்னிடம் இருந்த பொருள் அனைத்தும் தீர்ந்த நிலையில் வழிப்பறித்து பொருளீட்டத் தொடங்கினார். அவ்வாறு வழிப்பறிக்க திருமணங்கொல்லையில் திருவரசின் மேலே பதுங்கி இருந்தபோது வயலாளி மணவாளன் பிராட்டியோடு மணவாளக்கோலத்தில் திரளோடு வர, அவனை வளைத்துத் துணிமணிகளைக் கவர்ந்து அறுகாழியையும்  வாங்கினார். அவ்வமயம் அவரை ஆட்கொண்ட எம்பெருமான் அவரது செவியில் திரு எட்டெழுத்தாகிய திருமந்திரத்தைச் சொல்லித் தந்து இவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.  


கலியன் அவதாரஸ்தலத்தில் கையில் வேலுடன் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வார் சோழநாட்டுத் தலமான தில்லை சித்திரகூடம் (சிதம்பரம்) சென்று மங்களாசாசனம் செய்து, காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) எல்லையில் நுழையும்போது, அவருடைய தொண்டர்கள் "நாலுகவிப் பெருமாள் வந்தார்' என்று விருதுகூறிச் செல்ல, சைவம் தழைத்தோங்கிய சீர்காழி (தோணிபுரம்)யில் திருஞானசம்பந்தரின் சீடர்கள் "விருது கூறலாகாது' என்று கூறி, திருமங்கையாழ்வாரை திருஞானசம்பந்தரிடம் அழைத்துச் சென்றனர். திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரிடம் ""நாலுகவிப் பெருமாள் என்று கூறப்படுவது உண்மையெனில், ஒரு குறள் பாடும்'' என்றார். (நாலுகவி-ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி).  திருமங்கையாழ்வாரும் ""ஒரு குறளாய் இருநிலம் மூவடி வேண்டி'' எனத் தொடங்கி பத்துப் பாசுரங்களில் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான சீர்காழியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளுக்குப் பாசுரமிட்டார்.  இதனால் மகிழ்ந்த திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வாரை "பரகாலன்' என்று அழைத்து,  வேல் ஒன்றை அளித்தார். திருமங்கையாழ்வார் கையில் உள்ள வேல் பற்றி  .. ..   திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு  நம் ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள் அருளிய  வடிவழகு சூர்ணிகை: - 

அணைத்த வேலும் -தொழுத கையும் -அழுந்திய திருநாமமும்

ஓம் என்ற வாயும் -உயர்ந்த மூக்கும் -குளிர்ந்த முகமும்

பரந்த விழியும் -பதிந்த நெற்றியு- நெறித்த புருவமும்

சுருண்ட குழலும் -வடிந்த காதும் -அசைந்த காதுகாப்பும்  .. .. ...

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் ‘நாராயணா என்னும் நாமம்’.  

Thirumangai Azhwar was a  vivid versatile personality – a great poet, efficient in horse riding and warfare, exceptional faith on his Lord, travelled very widely the length and breadth of the country  and did most mangalasasanam of divyadesangal.  Kaliyan has many names -  Arulmari, Kaliyan, Parakalan, Arattamukki, Adayarseelam, and Thirumangai Mannan. He was passionate about anything he pursued,  be that bewitching damsel Kumudavalli nachiyar, feeding Srivaishnavaites  or building temples. 

ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், கலியனது பங்கு அதீதம்.  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல்  என 1137 பாசுரங்கள் நமக்கு அளித்துள்ளார்.  சிறிய திருமடல், பெரிய திருமடல் எனும் இரண்டு படைப்புகளிலும் தன்னைத் தலைவியாக 'பரகால நாயகியாய்'  உருவகித்த நிலையில் அவர் பாடல்களைப் புனைந்துள்ளார்.  

Sensing his final days, Alwar reached Thirukkurungudi, did kainkayram to Vadivazhagiya Nambi and attained lotus feet of our Emperuman from there.  Among dense fields, his thiruvarasu now stands testimony that ‘the abode of Lord – Vaikundam’ is calling distance from here.  

"நம்மை உய்விக்கும் - நலம் தரும் சொல் - நாராயணா என்னும் நாமமே'' என அறுதியிட்டு உரைத்த திருமங்கை மன்னன் தாள்கள் பணிவோம்.

வாட்கலியன்  பரகாலன் மங்கையர்கோன் வாழியே .. .. ..

Here are some photos from that grand purappadu of Sri Parthasarathi Emperuman and Kaliyan on sarrumurai day at Thiruvallikkeni divyadesam on 19.11.2021. 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
30.11.2021.
 

PS :   Tamil tinseldom certainly was far different last century, and 80 years ago, came this film –  Thirumangai Alwar with Kothamangalam Seenu in lead.  He was a versatile actor well versed in Carnatic music.  The film’s music was by SN Ranganatha Rao and the song ‘Booloka Rambai ivalo !’ sung by Kothamangalam Seenu was a super hit.  Kothamangalam Seenu’s original name was VS Srinivasan,  born in Vathirairuppu.  He debuted in film Sarangadhara, released in 1935.  At a time dominated by Thiyagara bagavathar and PU Chinnappa, Seenu  acted in Pattinathar and Vipra Narayana. His songs in Shantha Sakkubai, released in 1939, became very popular.  His last film 'Thulasi Jalandar'  released in 1947;  though he lived for another 50 years, he did not act in any films after that.














 

Monday, November 29, 2021

Karthigai Hastham - Thiruvallikkeni Sri Varadharaja Perumal 2021

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

[ அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] - திருவள்ளுவர் வாய்மொழி ! 

நல்லொழுக்கம் என்பது ஒரு குணவியல்பு பண்பு;     ஒருவனுக்கு நல்லொழுக்கம் என்பது விதைக்கு பாய்ச்சும் நல்ல பசுமையான நீரைப் போன்றது ஆகும். நீரின் தன்மை விதைக்குள் சென்று வளர்ந்து நல்ல மரமாக வளரும். அதுப்போல் நல்ல குணங்கள் பழக்கவழக்கங்கள் நன்னடத்தைகள் ஒருவருள் வளர்ந்து உயர்ச்சி தரும். அறம் தனை நிலைநாட்ட உதவும். துன்பமான நேரங்களிலும் தவறான பாதையில் செல்வது தவறு என்று நம்மை அதில் இருந்து விலக்கி நல்வழியில் செலுத்தும் நல் ஒழுக்கம்.  இறுதியில் பல தடைகள் வந்தாலும் இன்பமே பயக்கும்.  

தனிப்பட்ட நல்லொழுக்கங்கள், தனிநபர் மற்றும் கூட்டு நல்வாழ்வை முன்னெடுப்பவைகளாக இருக்கும் பண்புக்குரிய மதிப்பீடுகள். நல்லொழுக்கத்திற்கு எதிர்ச்சொல் தீயொழுக்கம்.  நிகோமேச்சியன் நன்னெறியில், அரிஸ்டாடில் நல்லொழுக்கத்தை ஒரு பண்புக்கூறின் பற்றாக்குறை மற்றும் மிகையளவுக்கிடையிலான ஒரு சமநிலைப் புள்ளியாக விவரிக்கிறார். மிகச் சிறப்பான நல்லொழுக்கப் புள்ளி, துல்லியமாக நடுவில் அமைந்திருப்பதில்லை, ஆனால் ஒரு தங்க இடைநிலையில் இருக்கிறது, சிலநேரங்களில் ஒரு உச்சநிலையைக் காட்டிலும் மற்றொரு உச்சநிலைக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு, துணிவின்மை மற்றும் அசட்டு தைரியத்துக்கிடையில் இடைநிலையாக இருப்பது வீரம், சுய-விருப்பமின்மை மற்றும் வீண் தற்பெருமைகளுக்கிடையில் இடைநிலையாக இருப்பது உறுதியான நம்பிக்கை ! கஞ்சத்தனம் மற்றும் ஊதாரித்தனத்துக்கிடையில் இடைநிலையாக இருப்பது தாராளகுணம் !!.  

Of all the philosophies, axioms and pearls of wisdom – people talk about being good to others.  In every society, there are good and bad people – good and bad things .. .. – primarily something which we want to happen, and some which should not be happening !!   The words "good" and "bad" are basic determinants  about value or ethics.  They are often used in different ways to talk about things, people, ideas, or actions as being either good or bad. Many questions about the concepts of "good" and "bad" are studied by philosophers.  There are many different perceptions / yardsticks  about what is good or bad, or about what the two words really mean. These differences can often be seen in different cultures and religions.  

Some philosophies would drive that sometimes even bad occurrences could be good – towards warding off a bigger evil.  We use the good-or-bad dichotomy to categorize nearly everything in our lives -- events, people, food, decisions, even world history. To some, these are  false distinction and a trap that only causes psychic pain. Good things are constantly being born out of the seemingly bad, and vice versa. Often, it seems, it's just a matter of time until an event or decision from one category leads directly to one in the other. It's a dangerous oversimplification to believe that some people are innately ‘good’ while others are innately ‘evil’ or ‘bad.’ This misleading concept underpins the justice system of many countries — ‘bad’ people commit crimes, and since they are intrinsically ‘bad’, they should be locked away so that they can’t harm us with their ‘evil’ behavior. This concept has also fuelled wars and conflicts throughout history, and even in the present day. It makes groups believe that they are fighting a just cause against an ‘evil’ enemy and that once the ‘evil’ people have been killed, peace and goodness will reign supreme.  

There are religions that preach harmony and peace while some have always modeled on conversions and wars.  Human nature is infinitely more complex than simple definitions of ‘good and bad’.  In  human beings, ‘good’ and ‘evil’ are fluid. People can be a combination of ‘good’ and ‘bad’ qualities. Some people who behave cruelly and brutally can be rehabilitated and eventually display ‘good’ qualities such as empathy and kindness.   

‘Good’ can be understood to mean  a lack of self-centredness. It means the ability to empathize with other people, to feel compassion for them, and to put their needs before your own. It means, if necessary, sacrificing your own well-being for the sake of others’. It means benevolence, altruism and selflessness, and self-sacrifice towards a greater cause — all qualities which stem from a sense of empathy. It means being able to see beyond the superficial difference of race, gender, or nationality and relate to a common human essence beneath them.   

To us life is simple – be selfless, be kind, help others, be involved in kainkaryam to Emperuman and bow to those doing kainkaryam.    A Vaishnavaite simple is one who sympathises and feels the pain of others and does all that is possible towards alleviating pain and suffering of human-beings.



தமிழ் தலைவன் என்ற புகழ் பெற்ற ஸ்ரீபேயாழ்வார் நமக்கு உரைக்கும் பாசுரம்.  ஏ, உலகத்தார்களே !  .. ..   ‘எது நல்லது, எது தீயது‘ என சஞ்சலத்துடன் விவாதித்துக்கொண்டே  வாழ்க்கையை வீணாக்காதீர் !!  எம்பெருமானிடத்தில் ஈடுபடுவது நன்று !  ஸம்ஸாரத்தில் ஆசை கொண்டிருப்பது தீது' என அறிந்து எம்பெருமானின் தாள் பணியுங்கொள் என உரைக்கின்றார் பேயாழ்வார்.  இதோ இங்கே மூன்றாம் திருவந்தாதியில் இருந்து ஒரு பாசுரம் : 

அதுநன்று  இதுதீதென்று   அய்யப்படாதே,

மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற

பொன்னங்கழலே தொழுமின், முழுவினைகள்

முன்னங் கழலும் முடிந்து.  

அது நல்லதோ? இது கெட்டதோ? - எது சரியானது, என சந்தேகத்துடன் விவாதங்கள் செய்து, மனத் தெளிவு இல்லமால், கவலைப்படுவதை நிறுத்திவிட்டு,  தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த  எம்பிரான் ஸ்ரீமந்நாரணனின் ஸர்வஜந ஸாதாரணமான விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே  வணங்குவீராக !  அப்படி வணங்குபவர்க்கு,  எம்பெருமானின், திருப்பாத கமலங்களை நினைத்த க்ஷணமே, முழு வினைகளும், செய்த பல பாவங்களும், உருமாய்ந்து  ஒடி சென்று நம்மை விட்டு அகலும்.  

இன்று கார்த்திகை ஹஸ்தம் .. .. .. சாதாரணமாக ஹஸ்த நக்ஷத்திரத்தன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீவரதராஜ பெருமாள் புறப்பாடு உண்டு.  இன்று எப்படியுமே - அநத்யயன காரணத்தால் புறப்பாடு கிடையாது. தடைகள் எல்லாம் நீங்கி, எம்பெருமானின் திருவீதி புறப்பாடு மற்றும் அனைத்து கைங்கர்யங்களும் சிறப்புற நடந்து நாம் அனைவரும் இன்புற எம்பெருமானை வேண்டுவோம்.  

இங்கே  திருவல்லிக்கேணியில் ஸ்ரீவரதராஜர் உத்சவத்தில் நான்காம் நாள் சேஷவாஹனத்தில் (22.5.2016) புறப்பாடு கண்டருளிய படங்கள் சில.  திருவல்லிக்கேணியில் நித்ய கருடாரூடனாய் சேவை சாதிக்கும் தேவாதிராஜன் - அழகான உத்சவர் ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் திருவடி பணிந்து தீயவை எல்லாம் அகல வேண்டுவோம்.  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
29.11.2021.









Sunday, November 28, 2021

ThirukKarthigai purappadu 2021 - chokkappanai @ Thiruvallikkeni divyadesam

கார்த்திகை தீபத்திருநாள் சிறப்புற கொண்டாடப்பட்டது.  அன்று திருமங்கையாழ்வார் சாற்றுமுறையும் கூட.  நம் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கோபுரவாசல் தாண்டி எழுந்தருளி - திருக்கோவிலில் வாசலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.  திடீரென பனைஓலைகளான ஒரு உயரமான ஏற்பாட்டை கண்டு சிலருக்கு இது என்ன என்ற கேள்வி எழுந்து இருக்கலாம்!!


Those of us interested in Cricket would have observed for sure – ‘palm trees’.   Palms are symbolically important in the Caribbean, appearing on the coats of arms of several Caribbean nations and on the flag of the West Indies cricket team. It is stated that there are about  191 genera and 2339 species of Arecaceae, the palm family.  Ever imagined a beach without the beautiful palm tree? .. .. the  air that we breathe and that surrounds us is full of millions of interesting compounds. Some of these compounds can be harmful to our health and some of them can affect things like weather and climate,” explains an atmospheric chemist at the University of Cambridge.  The Arecaceae are a botanical family of perennial climbers, shrubs, acaules and trees commonly known as palm trees (owing to historical usage, the family is alternatively called Palmae.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்  நல்ல மரங்கள், மனிதகுலத்தின் வளர்ச்சியோடும் வாழ்க்கையோடும் பின்னி பிணைந்து இருப்பன.  நெடிய மரங்கள் என்றாலே "பனையும் ! தென்னையும் !!". கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் 'சடாயு உயிர் நீத்த படலத்தில்' :

நீண்டேன் மரம் போல, நின்று*     ஒழிந்த புன் தொழிலேன்;

வேண்டேன், இம் மாமாயப்*   புன் பிறவி வேண்டேனே! *     மாண்டேனே அன்றோ !

ஜடாயு போரிட்ட இடத்தில் உள்ள தடயங்களை கண்டு ஸ்ரீஇராமபிரான்  -  இத்தகு செயல்களுக்குக் காரணமான நான்) இறந்தவனையே ஒத்தவனல்லவா? (அவ்வாறு இறக்காமல் இருப்பதற்குக் காரணம்); மறையோர் குறை முடிப்பான் – வேதத்தில் வல்ல முனிவர்களது குறைகளை நீக்குவதான; விரதம் பூண்டேன் - விரதத்தைக் கைக் கொண்டுள்ளேன்; அதனால் உயிர் பொறுப்பேன் - அதனால் உயிரை (உடலில்) கொண்டவனாகி; நீண்டேன் - வாழ் நாள் நீட்டிக்கப் பெற்றுள்ளேன்; மரம்போல நின்று .. .. .. என்பதாக !!  

பண்டைய தமிழகத்தில்  வேந்தர்தம் குலமரபுச் சின்னங்களாக இருந்தவை மரங்கள்.  சேரன் (பனை), சோழன் (அத்தி), பாண்டியன் (வேம்பு) என ! .  பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். பழங்காலத்து மொழி இலக்கண, இலக்கியங்கள் ஓலைப்படுத்தப்பட்டதனால் நமக்கு வந்து சேர்த்தன - அதில் முக்கிய பங்கு -பனை ஓலைக்கே!'. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.





இன்று 19.11.2021  கார்த்திகையில் கார்த்திகை நாள் -  கார்த்திகை தீப நன்னாள். திருமங்கைமன்னன் சாற்றுமுறை.   திருவல்லிக்கேணிவாசிகள் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர்.  இன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மற்றும் கலியன் - கோபுரவாசலை கடந்து 36 கால் மண்டபத்தில் எழுந்தருளி -  தீமை எல்லாம் ஒழிய சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.  

The other significance of the purappadu was lighting of ‘chokkapanai’ - on Thirukarthigai day, in the open space in front of Sri Parthasarathi temple, suddenly palm leaf structure was spruced up.

19.11.2021 அன்று திருக்கார்த்திகை தீபம். திருக்கோவில், சுற்றுக்கோவில் சன்னதிகள் அனைத்திலும் திருவிளக்கு ஏற்றப்படுகின்றது. ஒவ்வொரு திருக்கார்த்திகைக்கும் ஸ்ரீபார்த்தசாரதி புறப்பாடு உண்டு.  நாம் சிறப்பாக கொண்டாடும் தொன்மையான திருவிழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இவ்விழாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு  இனிய கொண்டாட்டங்கள்  நடைபெறும்.  கார்த்திகை விளக்கீடு’ என இலக்கியங்கள் போற்றும் தீபத்திருவிழாவில், பனைமரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.  பனை மரத்தை இலக்கியங்கள் - , `பூலோக கற்பகவிருட்சம்’ என்று போற்றுகின்றன.   

              கார்த்திகை புறப்பாட்டின் போது சொக்கப்பனை கொளுத்துதல் உண்டு. இது காய்ந்த பனை ஓலைகளால் ஆனது.  நகர்ப்புறத்தில் இதன் நடுவே தீபாவளி பட்டாசுகளையும் சொருகி வைப்பர்.     பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. ஒரு தாவரத்தின் எல்லா பாகங்களும் பயன் தருவது பனைக்கு உள்ள சிறப்பு. பஞ்சங்களில்  பனங்கிழங்கு உணவாக பயன் பட்டிருக்கிறது. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.  

On this glorious day, Sri Parthasarathi Emperuman in His resplendent splendour bedecked with ornaments came out and Thirumangai Azhwar preceded Him.  He came to the 36 pillared mantap, presented maryathai for Swami Nammalwar and then lit chokkapanai.  Iramanusa noorranthathi was rendered by Divyaprabandha goshti – so what a great day as thousands had great darshan of Emperuman.






Amidst all fears and apprehensions – there is hope ! .. on Thirukarthigai day, we light ‘chokkappanai’ – one of dried leaves – with wishes that all misgivings, difficulties will vanish like ash.  

                சிறப்பு  "சொக்கப்பனை ".. .. .. காய்ந்த பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்து கோவில்களின் முன்னால் கார்த்திகை பண்டிகையன்று கொளுத்துவார்கள்.  இம்மரம்  திருக்கார்த்திகை தினத்தில்  ஆலயத்தின் முன்பெ  வெட்டவெளியில் நடப்படும் - பனை ஓலைகளைப் பிணைத்துக் கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பில் நடுவே பட்டாசு மத்தாப்புகளும்  கூட இடம் பெறும். 

கற்பகத் தருவான பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றன. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்து விட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.  

இவ்வருஷம் திருக்கோவிலுக்கு முன்பு உள்ள வெட்டவெளியில்  36 கால் மண்டபத்துக்கு, ஸ்ரீஆண்டாள் நீராட்ட மண்டபத்துக்கு இடையில் வழக்கத்தை விட சிறிய சொக்கப்பனை ஏற்பாடானது. திருக்கார்த்திகை புறப்பாட்டின்  போது எடுக்கப்பட்ட "சொக்கப்பனை " படங்கள் இங்கே.  

தீபத் திருவிழா அன்று  திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றுவார்கள். எல்லா வீடுகளிலும்  அகல் விளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள்.   சில கிராமங்களில், கார்த்திகைத் திருநாளில் மகளிர் விளக்குகள் பல ஏற்றி வானத்து விண்மீன்கள் போல ஊரெங்கும் ஒளிரச் செய்வர். சிறுவர்   சுளுந்தைச் சுற்றித் தீப்பொறிகள் சிதறும்படி செய்து மகிழ்வர்.

Chokkapanai   symbolizes burning of bad behavior and unwanted elements ~ the lamps symbolize blossoming knowledge.  திருக்கார்த்திகை சொக்கப்பனை தீ  போல துன்பங்கள் ஓடட்டும் ! விரைவில் திருக்கோவில்கள் திறக்கப்படட்டும்.  மக்கள் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் விளைந்து, நல்லனவும் இனியனவும் நடக்கட்டும்.  

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் பாதமே கதி 

 

~adiyen Srinivasa dhasan
[Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
28.11.2021.