Tuesday, July 27, 2021

Jai jai Vittala Panduranga ! – Jayahari Vittala Panduranga ! @ Thiruvallikkeni

The holy Thiruvallikkeni has many famed and ancient places .. .. nearer the Gangaikondan mantap [TP koil St – Singarachari St junction] is the vegetable market, from nearer – Venkatachala chetty  street leads to PyCrofts Road (now Barathiyar Salai) – Adyar Anand Bhavan junction.  This is no post on Thiruvallikkeni streets, shops or roads .. ..but on a beautiful small temple on this street !


Miles away in Maharashtra is - Pandharpur is a well known pilgrimage town, on the banks of Chandrabhaga River in Solāpur District.  The Vithoba temple attracts more than  a million Hindu devotees  during the major yātrā (pilgrimage) in Ashadh (June–July).  Here is located the famed Vittala Rukmini temple where the  Bhakti Saint, Chaitanya Mahaprabhu,  spent a period of 7 days in city.    

Of the many forms of worshipping the divine, the nama-sankeerthana is a divine poetical way of singing and extolling the deeds of Lord and pray unto Him for goodness.  Vithoba, [also Vittala, Panduranga] is worshipped as manifestation of Sriman Narayana, in His avatar Krishna. Vithoba is often worshipped with hands on hips often with Rukmini.  



The parabrahma of Pandharpur is worshipped and lovingly called by his devotees with many names in different course of the time, like Pandharinath, Pandurang, Pandhariraya, Vithai, Vithoba, Vithumauli, Vitthal gururao, Pandurang, Hari etc.   The Great Saint poet Tukaram defines the word Vithoba in one of his abhangas that stands for ‘Knowledge’ + Thoba Stands for ‘form’ Thus Vithoba stands for the ‘form of ultimate Knowledge’ or ‘idol of ultimate Knowledge’.  Vithoba incarnation occurred on Shravan vadha ashtami at the end of Dwaparyuga.   So devotees (varkari) of Vithoba never leave Pandharpur on Wednesday even now.

Vittala is Universal and is the Most Benevolent God – Vittal is munificent to downtrodden – the  sculpture at Pandharpur  is self made up of sand stone. He has cap just like crown on his head.  Thirumukham of Shri Vitthal is long, cheeks are bulky, his eyes are looking horizontally straight. He wear’s Makar kundale in his ear. A Kaustubhmni is there around his neck like necklace.   Shri Vitthal keeps His both hands on His waist. In his right hand he has a Kambal and in left hand he has Shankha.  



Here is a devotionally appealing bhajan – “Jai Jai Vittala Panduranga” sung by – Sri Vidyabhushana from the Album “Bhajan Vidya”:   https://www.youtube.com/watch?v=_UXsZ7GHkYk




~ at Thiruvallikkeni is this century old bhajan mandala temple of Sri Pandurangar.  This temple is known as  Sri Ragumayi samedha Sri Pandurangan thirukovil.  Here are some photos of the temple at Venkatachala chetty  Street, Thiruvallikkeni.  There is another temple for Vittala at Thiruvatteeswararpet too.

Jai jai Vittala Panduranga ! – Jayahari  Vittala Panduranga !!

adiyen dhasan – Srinivasan Sampathkumar
27th July 2021. 










Monday, July 26, 2021

Sri Azhagiya Singar ~ எனக்கெளியன் எம்பெருமான் இங்கு.

 

Rolls Royce has launched a new brand ‘Cullinan’ – it is available in India too – priced at Rs 6.95 crore (ex-showroom). It is based on the carmaker’s aluminium space frame architecture, called ‘The Architecture of Luxury’. The Cullinan is powered by a 6.75-litre V12 petrol engine that makes 571PS/850Nm. Power is sent to all four wheels of the SUV via a four-wheel-drive system, which is a first for Rolls-Royce. Since it is a Rolls-Royce, the list of features it gets is endless. It is equipped with night vision and vision assist, including daytime and night-time wildlife & pedestrian warning, alertness assistant (a 4-camera system with panoramic view, all-round visibility and helicopter view), active cruise control, collision warning, cross-traffic warning, lane departure and lane change warning, 7x3 high-resolution head-up display and WiFi hotspot. 

.. .. .. what attracted me is an article titled ‘This $465,000 Rolls-Royce Cullinan is an unexpected lesson in simplicity’ !!!!! கிட்டத்தட்ட 7 கோடியில் எளிமையா !!!!



திருவல்லிக்கேணி ஒரு புண்ணிய பூமி - இந்த  சிறப்பான திவ்யதேசத்தில் வாழும் நாம் புண்ணியம் செய்தவர்கள்.  மிக அழகான திருக்கோவில் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு கிழக்கு வாசல் - திரு அழகியசிங்கப்பெருமாளுக்கு மேற்கு வாசல். நரசிம்ம அவதாரமே உக்கிரத்தின் வெளிப்பாடு - எனினும் இங்கு மூலவர் யோக நரசிம்மராகவும் உத்சவர் மிக அழகிய தெள்ளியசிங்கன் ஆகவும் நம்மை அழைத்து  அருள் தந்து ஆள்விக்கிறார்.

வாழ்க்கை மிக மாறிவிட்டது.  சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகள் முன் நம் பள்ளி நாட்களில், உடைகள் மிக குறைவாகவே இருக்கும் !  .. அதிலும் பாதி பள்ளி சீருடைகள்.  குடும்பங்களில் மூத்த பிள்ளைக்கு வாங்கப்படும் ஆடைகள், இளைய பிள்ளைக்கு உபயோகப்படுத்தப்பட்டன. அந்த குடும்பம் என்பதில் விளக்கம் விவரமானது.  அப்படி பழைய உடைகள் / பழைய புத்தகங்கள் கூட சந்தோஷத்துடன் ஏற்கப்பட்டன.  அதன் பிறகு அந்த ஆடைகள் நைந்த துணியாகி வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அப்படியல்ல. விரைந்து வளரும் பொருளாதார வளா்ச்சியும் நடுத்தர வா்க்கத்தின் பெருக்கமும் அதிக நுகா்வுக்கு வழிவகுக்கின்றன.

நாம் அனைவருமே சராசரியாக நமக்கு தேவைக்கு மேல் ஆடைகளில் செலவழிக்கிறோம்.  ஒரு வாடிக்கையாளா் 2000-ஆம் ஆண்டில் வாங்கியதை விட 75  சதவீதம் அதிக ஆடைகளை 2019 -ஆம் ஆண்டில் வாங்கினார்கள் என்கிறது ஒரு தரவு. தேவை அடிப்படையில் ஆடைகள் வாங்குவது என்ற நிலை மாறி தற்போது ஆா்வ அடிப்படையில் வாங்குதல் என மாற்றம் கண்டுள்ளது. அன்றைய நுகர்வோர் தர உத்தரவாதம் கொண்ட ஆடைகளை வாங்கினா். இன்றைய நுகர்வோர்  குறைந்த விலையில் புதுப்பாங்கான ஆடைகளை  விரும்புகிறார்கள்.  இவ்வாறாக ஆடைகள் அதிகமாக அதிகமாக,  அந்த ஆடைகளை உபயோகிக்கும் காலஅளவு  குறைந்துவிட்டது. 

எளிமையாக வாழ்தல் கடினமா !  .. சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளதா ? எளிமை என்பது ஏழ்மை அல்ல.  எளிமையில் சாதாரணம் இருக்கும். எளிமையின் வேர்கள் எஃகு போன்றன. எளிமையில் அன்பு வெளிப்படும். எளிமையாக இருப்பது வேறு எளிமையாககாட்டிக் கொள்வது  வேறு!  உண்மையான எளிமையாளர்கள்  பேச்சில் பணிவு இருக்கும் செயலில் நிதானம் இருக்கும். எதிலும் அவரிடம் சுயநலம் இருக்காது.  எளிமை அனைவருக்கும் இருப்பதை பகிர்ந்தளிக்கும்.

Simplicity is the state or quality of being simple. Something easy to understand or explain seems simple, in contrast to something complicated.  Something is simple or complex depending on the way we choose to describe it. In some uses, the label "simplicity" can imply beauty, purity, or clarity. In other cases, the term may suggest a lack of nuance or complexity relative to what is required. .. here is something excerpted from the article titled ‘This $465,000 Rolls-Royce Cullinan is an unexpected lesson in simplicity’

Of all the things I expected from the 2021 Rolls-Royce Cullinan Black Badge – an SUV with a near half-million-dollar price tag – a reminder of the value of simplicity was not among them. Launched in 2018, the Cullinan is as luxurious, as excessive, and as attention-grabbing as you’d think, particularly in Black Badge form. Look beyond the glitter, though, and there’s something more important there too.

Simple doesn’t have to mean basic, and clearly simple doesn’t necessarily mean cheap. The 2021 Cullinan starts at $388,000 (plus $2,750 destination and $2,600 “gas guzzler” tax) but, with extras like the striking Galileo Blue paintwork, this particular Cullinan Black Badge is a heady $465,300 all-in. And yet, there’s simplicity there too. Of a different sort to a base-spec mass-market SUV, where simple means the absence of features, sure, but simplicity nonetheless. In Rolls-Royce’s world, it’s about keeping the annoyance of complexity at arm’s length. The luxury of not having to sweat the small stuff. In a Cullinan, the doors close themselves when you press a button. It seems lavish at first, and then you ask yourself why pulling a heavy, safety-regulation-reinforced door closed manually ever seemed acceptable. The 10.25-inch touchscreen isn’t some vast, attention-stealing display, and you can hide it behind a motorized screen and do just fine. Rolls-Royce’s crisp 12.3-inch digital instrumentation doesn’t try to serve up every possible map, and engine graphic, and animation; it just tries to give you the cleanest possible dials.  The air conditioning system is monstrously potent, cooling the cabin in record time, but its knobs and buttons are the epitome of simplicity. Rolls-Royce’s 8-speed transmission silently surveys the road ahead, using GPS to make sure it’s never caught unawares of which ratio to slip into, but you’d never guess how smart it is from the simple, slender stalk behind the wheel.





எளிமையை சிறப்பிக்கும் , ஸ்வாமி நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி பாசுரம் இங்கே :

உணர ஒருவர்க்கு  எளியனே? செவ்வே,

இணரும் துழாய்  அலங்கல் எந்தை,-உணரத்

தனக்கெளியர்  எவ்வளவர் அவ்வளவனானால்,

                                   எனக்கெளியன் எம்பெருமான் இங்கு.                

எம்பெருமான் மிகவும் சௌலப்யன்.  அவனது திருமேனியில் திருத்துழாய் எப்போதும் தவழும். அப்படி, அவரது திருமேனியின் ஸம்பந்தத்தாலே,  மேன்மேலும் தழைத்தோங்குகின்ற திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமான் தனக்கு அடிமைப்பட்டவர்கள்,  தன்மேல் எவ்வளவு அன்பு உடையவர்களோ, தானும் தன்னை அவ்வளவு தன்னை தந்து அருள்பவன் .  தன்னிடம் சரண் அடைபவர்களின் எல்லா நலனுக்கும் தானே பொறுப்பு ஆகி, அவர்களுக்கு அருள் தந்து, காத்து அருளும் அற்புதன். அத்தகையான எம்பெருமானை சரண் அடைந்தபின், நம் போன்ற பக்தர்களுக்கு எவ்வித கவலையுமே  இல்லை.

Reminiscing the good olden days, here are some photos of day 6 morning purappadu of  Sri Azhagiya Singa Perumal during Aani brahmothsavam at Thiruvallikkeni divyadesam on 3.7.2012.

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
26th July 2021.










Sunday, July 25, 2021

Sri Azhagiya Singar Garuda Sevai ~ நாடிநாடி நரசிங்காவென்று

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் எளியன்   .. .. தன் பக்தர்களை ஓடோடி வந்து காப்பவன்.  நற்பயன் பெற நாம் என்னென்ன செய்ய வேண்டும் ? -  திவ்யதேசத்தில்,  வசிக்கும் நாம் ஒன்றுமே செய்யவேண்டாம் .. .. எம்பெருமானை நினைத்து, அவன்தம் பெருமைகளை நாம சங்கீர்த்தனம் செய்து, அவன் உறையுமிடங்களுக்கு சென்று, அவர்தம் அர்ச்சாவதார திருமேனியை கைகூப்பி வணங்கினாலே போதுமானது. 



அவ்வாறு திருத்தலங்களுக்கு செல்லும்போது எம்பெருமானுக்கு உகப்பான புஷ்பங்கள், பழங்கள் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள் ! - எம்பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்யுங்கள் ! - அவன் உகக்கும் அவர்தம் அடியார்க்கு - பாகவதர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகள் செய்வோம் .. ..

திருவல்லிக்கேணி ஒரு புண்ணிய பூமி - இவ்வளவு சிறப்பான திவ்யதேசத்தில் வாழும் நாம் புண்ணியம் செய்தவர்கள்.  மிக அழகான திருக்கோவில் - ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு கிழக்கு வாசல் - திரு அழகியசிங்கப்பெருமாளுக்கு மேற்கு வாசல். நரசிம்ம அவதாரமே உக்கிரத்தின் வெளிப்பாடு - எனினும் இங்கு மூலவர் யோக நரசிம்மராகவும் உத்சவர் மிக அழகிய தெள்ளியசிங்கன் ஆகவும் நம்மை அழைத்து  அருள் தந்து ஆள்விக்கிறார்.

இன்று நரசிம்ம அவதார சாராம்சம் - சிறுவர்களுக்காக (விஷயம் தெரிந்த பெரியவர்கள் அருள் கூர்ந்து இந்த அடியேனின் வார்த்தைகளில் உள்ள பிழைகளை பொறுத்தருள்க !) எம்பெருமான் ஸ்ரீமன் நாரணணின்  திருவவதாரங்களில் நரசிம்ஹ அவதாரம் பெருமை பெற்றது.    இந்த அவதாரத்தின்போது  பெருமாள் சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் தூணிலிருந்து வெளிப்பட்டு தன பக்தனை காத்து அருளினார்.  

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்ஷன் எனும்  இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.  மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதாரமாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

முன்னொரு காலத்தில் அரக்கர்தம் ராஜ்ஜியத்தில் நன்மை குறைந்து தீமைகள், கொடுமைகள் மலிந்து தலை தூக்கி ஆடின.  அரக்கன்  அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்று  ஆணையிட்டு,  இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் கொடூர செயல்கள் பல புரிந்தனர்.  ஹிரண்யகசிபு யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் பெற, அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்தான்.   உருக்கி வார்த்த பொன்மேனியுடன் காட்சி தந்த  பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே, உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக் கூடாது.  எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியா தபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத் தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக் கும் பெருமையை நான் அடைய வேண்டும் அன்று அவரிடம் வரம் பெற்றான். 

வலிமைகளை நன்மைக்கு பயன்படுத்த வேண்டும் - ஆனால் அவனது அரக்க குணம் தலை தூக்கி அவனை கெட்ட வழியில் செலுத்தியது.  தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான்.  மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார்.

பிரகலாதன் அரக்கனுக்கு மகனாக வந்து பிறந்தான் - பெரிய பக்தனாக திகழ்ந்தான்.  எவ்வளவு சொல்லியும் எம்பெருமான் வழிபாட்டை நிறுத்தாததால்  சினம் வெகுண்ட ஹிரண்யகசிபு - தனது  மகனையே கொல்ல ஆணைகள் பிறப்பித்தான். பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும்  ஸ்ரீமன் நாரணன்  தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் மகனையும் எம்பெருமானையும்  தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள்  ஸ்ரீமன் நாராயணன்  எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார்,  தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று உரைக்க, 

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ   - பரிபூரண நம்பிக்கையுடன்,  நாரணன் எங்குமுளன் என உரைதான். ஆழ்வார் பாசுரத்தில் உள்ளது போல, அளந்திட்ட அத்தூணை அவன் தட்ட, அங்கேயே எம்பெருமான்  சிங்க உருவாக - ஆளரியாக  நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.  நரசிங்காவென்று வாடிவாடும் ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானுக்குத்தான் உதவவேணும், மற்றையோர்க்கு எளிதில் உதவிடுவான் என்பதில் ஐயமில்லை.. .. இதோ அவ்வெம்பெருமானையே நினைந்து உருகிய ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம். :

ஆடியாடி  அகம்  கரைந்து*, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி*, எங்கும்

நாடிநாடி   நரசிங்காவென்று,

வாடிவாடும்  இவ்  வாணுதலே !!

இப்பாசுரத்தில் நம்மாழ்வார் - பராங்குச நாயகி பாவத்தில் - ஒளிபொருந்திய நெற்றியையுடையளான இப்பராங்குச நாயகி பலகாலும் ஆடி, மனமுருகி,  எம்பெருமானை உகக்கும் பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி, கண்களில் நீர்நிரம்பப் பெற்று, எவ்விடத்தலும் - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து  நரசிங்கா,  நரசிங்கமூர்த்தியே! என்று கதறி அவன் வரவை எதிர்கொண்டு மிகவும் வாடுகின்றால்.  தன் பக்தர்களுக்கு இரங்கி அவர்தம் குரலுக்கு உடனே பறந்து ஓடி வரும் எம்பெருமான் நம் கோரிக்கைகள் அனைத்துக்கும் செவி சாய்த்து நம்மை காத்து அருள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.   

Reminiscing the good olden days, here are some photos of the grand Garuda Seva for Sri Azhagiya Singa Perumal during Aani brahmothsavam at Thiruvallikkeni divyadesam on 20.6.2013.

adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
25th July 2021.












Saturday, July 24, 2021

Swami Aalavanthar sarrumurai 2021 - "Aa muthalvan ivan" !!

இன்று (24.7.2021) ஆடி  மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**   இன்று நம் சம்பிரதாய ஸ்தாபகர் -   ஓராண் வழி ஆச்சார்யர்களில் பிரபலர் ஸ்வாமி  ஆளவந்தாரின் சாற்றுமுறை.  ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், நமக்கு அளித்த அற்புத காவியம் "ஸ்தோத்ர ரத்னம்" - நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைத்துள்ள  பழமையான க்ரந்தம் இதுவே. .. ..    இன்று  திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ஜ்யேஷ்டாபிஷேகமும் கூட.

 


சோழர்  குலம்  (Chola dynasty) என்பது  பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் முக்கிய வீர மன்னர் பரம்பரை.  நெற்பயிர்கள் அதிகமாக விளைந்த நாடு  எனவே 'சோழ வளநாடு சோறுடைத்து’  என்பது பழமொழி.  சோழ அரச பரம்பரையில், அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன்   புகழ் பெற்ற மன்னர்.  இவர் இடைக்கால சோழ அரசர்.  இவ்வரசு பரம்பரை :   விசயாலய சோழன்; ஆதித்த சோழன்; பராந்தக சோழன் ; கண்டராதித்தர்; அரிஞ்சய சோழன்; சுந்தர சோழன்; ஆதித்த கரிகாலன்; உத்தம சோழன்; இராசராச சோழன் (மாமல்லன்); இராசேந்திர சோழன்..

                                           மதுரையும், ஈழமும் வெற்றி கொண்ட  கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். இவர் இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது .  பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்  பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.  போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான்.  இவ்வரசன்  தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான். 

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகச் சோழன் சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன்கூரை வேய்ந்து வரலாற்றுப் புகழ் பெற்றவனும் முதலாம் பராந்தகச் சோழன் தான். சோழசிகாமணி, சூரசிகாமணி முதலிய பெயர்களோடு விளங்கிய இவன், வீர நாராயணன் என்னும் பெயரையும் பெற்றிருந்தான்.  1011 - 1037 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ஏரி, 16 கிலோ மீட்டர் நீளமும் 4 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. தொடக்கத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த ஏரியில் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது. 

அமரர் கல்கி தனது “பொன்னியின் செல்வன்” நாவலின் கதையை, அப்போதைய சோழ சாம்ராச்சியத்தின் நிலையை, சுவையோடு தொகுத்தளிக்க ‘வந்தியத்தேவன்’ என்கின்ற கதாபாத்திரத்தை கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தார்.  அக்கதாபாத்திரத்தின் போக்கிலேயே நம்மை காஞ்சி, கடம்பூர், குடந்தை, திருவையாறு, தஞ்சை, திருப்புறம்பியம், பழையாறை, கோடிக்கரை, இலங்கை, மாதோட்டம், அனுராதபுரம், தம்பள்ளை, நாகைப்பட்டினம் என ஒவ்வொரு இடமாகத் தரிசிக்கச் செய்தார்.   இன்றைய தமிழகத்திலே, சித்திரை வெயிலிலும், வற்றிப்போன காவிரிக் கரையோரத்தில் தாமரையும் அல்லியும் மண்டிக் கிடக்கும் இரண்டு மூன்று குளங்கள் மிச்சம் இருக்கின்றனவென்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், நீர் மேலாண்மைக்குப் பெயர்போன சோழ தேசம் எவ்வாறு இருந்திருக்கும் என்பது ஒரு இனிமையான கற்பனை.    அதன் உண்மை பிரதிபலிப்பு தான் வீராணம் ஏரி !!

 

நாதமுனிகள் இல்லாமலிருந்தால் நமக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைத்திராது. சுவாமி நாதமுனிகள் தான் நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர்.    ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார்.  நாதமுனிகள் வடநாட்டில் கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.  நம்முடைய தர்சனத்தில்ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர்.  

ஸ்ரீ நாதமுனிகளும் ஆளவந்தாரும்   ~ அவதார ஸ்தலத்தில் 

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில உள்ள கோவில் ஆளவந்தாரின் திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். 

வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற  ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில்,  மணக்கால் நம்பி  அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற  தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.  ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு,   நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.  அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக  ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.   

ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு     'ஆ முதல்வனிவன்'  என  ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.  இராமானுஜர் ஆளவந்தாரை சந்திப்பதற்க்காக  திருவரங்கம் அடைந்தபோது, ஆளவந்தார் எம்பெருமான் திருவடியை அடைந்து விட்டார் என்பது வருத்தம் தரும் விஷயமே. ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட. ஒவ்வொரு வருடமும் ஆடி  மாதம் உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.  இவர் அருளிச் செய்த நூல்கள் " எட்டு"   -   இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம்,  ஆகமப்ராமாண்யம், சதுஸ்லோகி என்னும் வடமொழி நூல்கள்.   

ஆளவந்தார் தம் பக்தி மிகுதியுடன் எம்பெருமானை ஸ்தோத்திரம் செய்யும் பாசுரம் ஒன்று இங்கே : - அவர்தம் ஸ்தோத்ர ரத்னம் கிரந்தத்தில் இருந்து : - லோக விஷயங்களில் தமக்கு இருக்கும் வெறுப்பை கூறி - அவற்றை தம்மிடம் இருந்து நீக்கி ரக்ஷித்து அருள வேணுமென்னு பிரார்திக்கின்றார்.

ந தேஹம் ந ப்ராணாந்ந ச ஸுகம் அேஷாபிலஷிதம்

ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ேஷத்வ விபவாத் |

பஹிர்பூதம் நாத! க்ஷணமபி ஸஹே யாது ததா

விநாம் தத்ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபனம்  இதம் || 

எம்பெருமானே ! பரம்பொருளே !  -   உன் விஷயமான கைங்கர்யச் செல்வத்துக்கு வெளிப்பட்டிருக்கும் என்னுடைய தேஹம், ப்ராணன், எல்லோராலும் விரும்பப்படும் சுகங்கள், என்னுடைய ஆத்மா ஆகிய எதுவாக இருந்தாலும் அவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; இவை எல்லாம் ஒழியட்டும். மது என்னும் அரக்கனைக் கொன்ற என் ஸ்வாமியே! இது உண்மை; இதுவே என் ப்ரார்த்தனை என்பது ஆளவந்தாரின் அற்புத பிரார்த்தனை.

Last year (2020) there was no purappadu due to Covid and sadly this year 2021 too – there would be no veethi purappadu.  Reminiscing the glorious olden days here are some  photos of Swami Aalavandhar from the purappadu at Thiruvallikkeni on 25.7.2010 taken with Canon Powershot A1100 IS. 

~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.07.2021


PS 1 :
ஸ்தோத்ர ரத்னம் பாசுர விளக்கம் : நன்றி:  divyaprabandham.koyil.org

PS 2 :  horsemen do interest us – Vallaravayan Vanthiyathevan was a famous horseman in Ponniyin selvan – one may not immediately recognize the other horseman at  Godavari in Andhra Pradesh – in case if you would be interested, do read this post :  https://www.sampspeak.in/2021/07/horsemen-lake-and-more.html