Tuesday, February 28, 2017

Sri Parthasarathi Theppam day 3 2017 : ஸ்ரீபார்த்தசாரதி "சிகத்தாடை"

Today 28th Feb 2017  is the third day of Theppothsavam – the first three days are dedicated to Sri Parthasarathi.  This morning Sri Parthasarathi had Thirumanjanam in Theppam itself –  and hence had purappadu in the morning to the Thirukulam of which I am making  a separate post.  In the oncoming days, there would the float festival, a day each for Sri Azhagiyasingar, Sri Ranganathar, Sree Ramar and Sri Varadhar. 


To those who worship Him daily too – He looks refreshingly fresh and different everyday.  Today, the added attraction was the kireedam (crown)  called ‘Sigathadai’.  On the Crown, reams of jasmine flower are tightly rolled and it is closed with ‘pure white silk’.  It was a great darshan to behold for the eyes of Bakthas.


தெப்போத்சவத்தில் முதல் மூன்று நாள்களும்       ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் எழுந்து அருள்கிறார்.  நாளை முதல் ஸ்ரீ அழகியசிங்கர்ஸ்ரீரங்கநாதர்ஸ்ரீராமர்,      ஸ்ரீ வரதர் தெப்போத்சவம் கண்டருள்வர்.    இன்று தெப்பத்தில் இருந்து இறங்கி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.   அற்புதமான சாற்றுப்படியில்  ஸ்ரீ பார்த்தசாரதி மிக அழகுற மிளிர்ந்தார்.  "சிகத்தாடை" எனும் தலைக்கிரீடம் ராஜாக்கள் அணியும் கொண்டை போல அழகு மிளிர்ந்தது. கிரீடத்தின் மீது பல முழங்கள் மல்லிகை பூ சாற்றிஅதன் மீது வெள்ளை பட்டு உடுத்தி தயாரான கிரீடம் அணிந்துஎங்கள் பெருமாள் சிறப்புற வீதி புறப்பாடு  கண்டு அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:   




தெப்பம்பற்றி - கம்பரின்  இராமாவதாரத்தில்- அயோத்யா காண்டம் வனம்புகு படலத்தில், அண்ணல் இராமபிரான் யமுனை ஆற்றை  கடந்தது பற்றிய காப்பிய வரிகள் ஈர்த்தன*

வாங்கு வேய்ங் கழை துணித்தனன் மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து,   அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல்;    தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி இரு கையால் நீந்தி,.

இளையோன் ஆன இலக்குவணன்,  வளையும் தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மானைக் கொடிகளைக் கொண்டு உயர்ந்த தெப்பம் ஒன்று அமைத்து -  அதன்மேல் திரண்ட தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப - அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி – கடந்தானாம்.


அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 





Monday, February 27, 2017

Thiruvallikkeni Sri Parthasarathi Theppothsavam (2) 2017

Thiruvallikkeni Sri Parthasarathi Theppothsavam (2) 2017

கம்ப ராமாயணத்திலே ~ யுகபுருஷன் ஸ்ரீராமன், குகனிடம் நட்பு பாராட்டி, படகில் கங்கையை கடந்தது ஒரு சிறப்பு அத்தியாயம். 

'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார்.

பண்பில் சிறந்த ஸ்ரீராமன், குகனிடம் -  ‘நனி கடிது விடு’ (மிக வேகமாக நாவாய்களைச் செலுத்து) என்றுகூற; உடம்பும்  உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால் உடைய குகனும்;  ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை ஆற்றின்மீது   பெரிய ஓடத்தை  விரைந்து செலுத்த; அந்நாவாய் விரைவாக சென்றது - இளைய அன்னப்பறவை நீரிற்மீது சென்றது போல  செல்ல; அந்த புனிதாற்றின்  கரையின்கண் நின்றவர்களாகிய வேதியர்கள்  துன்பமடைந்து;   நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.

Back at Thiruvallikkeni divyadesam ~ those attached to Sri Parthasarathi were treated to a stunning darshan on the occasion of day 2 of Theppothsavam.  Only those who witnessed can feel that ! எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு…… there are thousands of names for  Emperuman – the ordinary mortal has nothing else to do than know the wisdom that we must chant His many other names, worship in many shrines, which itself will secure us a place by His side alongside those noble souls in heaven, says Boothath alwar whose Irandam Thiruvanthathi was recited in goshti today



ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன் தன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து*
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்*
பணியமரர் கோமான் பரிசு.

Here are some photos today’s purappadu [day 2 – 27th Feb 2017]. It is only day of Theppothsavam – chinna maada veethi purappadu.



Adiyen Srinivasa dhasan.









Sunday, February 26, 2017

Thiruvallikkeni Theppothsavam 2017 : ஸ்ரீராமனுக்காக, குகன் கொணர்ந்த நாவாய்களின் அழகு


A ship or a boat is a contraption  that can float and move on the ocean, a river, or any waterbody, either through its own power or using power from the elements (wind, waves, or Sun). Plain steel would sink in water immediately, as would a wrecked steel ship !

The reason that a ship floats is that it displaces a lot of water. The displaced water keeps pushing  the ship upwards – this force is called the buoyancy force. The more water that is displaced, the stronger the buoyancy force is which pushes the object up. Any object dipped  into water experiences two forces: the gravity force which pulls it down due to its weight, and the buoyancy force which pushes it up. If these forces are equal, then the object floats. This is about the divine float – the Theppam for Lord Sriman Narayana

ஸ்ரீராமனின் காதை  "இராமாயணம்" ஒரு அற்புத காவியம்.  கம்ப நாட்டாழ்வான் - கங்கைகாண் படலத்திலே - ஸ்ரீராமனுக்காக, குகன் கொணர்ந்த நாவாய்களின் அழகை இவ்வாறு விவரிக்கிறார்.

நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன-கலந்த எங்கும்,-
அங்கொடு, இங்கு, இழித்தி ஏற்றும் அமைதியின், அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன

பெண்கள் நடைபோன்ற நடையையும்;  அன்னப் பறவைகள்  நாணப்படும்படியான நீரிற் செல்லுதலும் உடைய, நாவாய்;  அக்கரையில் உள்ளாரை   இக்கரையில்  ஏற்றி இறக்கும்தன்மையினால்; தேவருலகமாகிய அவ்வுலகத்தோடு;   இவ்வுலகில் உள்ளாரை ஏற்றிச்செல்லும் புண்ணியம் பெற்றவையாக, பெருங்கடல் போன்ற புண்ணிய கங்கை நதியிலும் கூட இடமில்லையோ எனும்படி எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தனவாம். 



              In the divyadesam of Thiruvallikkeni, the tamil month of Masi has special significance.  On the Full moon [Pournami day and Magam Nakshathiram] Sri Parthasarathi Swami visits the shores of Marina, famously known as Masi Magam.   Perhaps this is the time that signifies the onset of summer and it is time for cooling the Lord.  On Masi New moon [Amavasyai] starts the float festival at Thiruvallikkeni.   The tank of Sri Parthasarathi Swami is famous ~ it is  ‘Kairavini Pushkarini’… the pond of Lily – ‘allikkeni’ from which the place itself derives its name (~ and my blog is titledKairavini Karaiyinile literally meaning on the banks of holy Kairavini, the temple  tank).  The tank has added significance attributed to the birth of “Yathi Rajar” – Swami Ramanujar due to the penance undertaken by Kesava Somayaji and Kanthimathi ammal. Pushkarinis were developed closely associated with temples. The water from the tank was once used daily for thirumanjanam and all other religious functions of the Lord. The conclusion of Brahmotsavam would be by ‘thirthavaari’ the sacred bath at the tank.

Every year there is the ‘theppam’ – the float festival. A floating structure gets spruced up, made of drums, timber and ornated beautifully. Perumal comes  to the temple tank in purappadu and is placed majestically inside the float. The beautifully lit theppam is dragged around in water. Devotees in hundreds converge, sit everywhere on the steps of the temple tank to have darshan of the Lord on theppam. In olden days, the shops springing up for the occasion were of added attraction.


The annual float festival of the Sri Parthasarathy Swamy temple starts every year on Maasi Ammavasai day and is a 7 day affair.  In my young days, the tank was much bigger and would brim with water – so the size of the float also used to be much bigger. Now a days,  the float  is much smaller in size, the grandeur of the festival has only increased though.

This year the Theppa Utsavam began today on 26th Feb 2017  and here are some photos taken during the Theppam. 

Adiyen Srinivasadhasan.











Saturday, February 25, 2017

Thirukachi Nambigal Avathara Sthalam at Poonamallee

Today evening was seeing photos on Facebook – Mr Rajagopalan Madhavan had posted some good photos of Acharyar Thirukachi Nambigal Uthsavam – a couple of photos attracted me … for I had read about that particular place in a blog post.

'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள்.   திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆசார்யர் ஆவார்.  இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டு,  வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி.

இந்த பதிவு ஒரு  மகிழ்சி அளிக்கும் விஷயம் பற்றியது.

சுஜாதா தேசிகன் என்பவர்  2004 முதல் தமிழ் வலைத்தளம் அமைத்து எழுதி வருபவர்.  மிக்க புகழ்மிகுந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர்.  அவரது 'திருக்கச்சி நம்பிகள்' பற்றிய பதிவு 2010 வருடம் எழுதப்பட்டது.  ஆர்வத்தை தூண்டும்படி எழுதியுள்ளார். அவரது  முழு பதிவை இங்கே படிக்கவும் :- Kachi Nambigal avatharasthalam

தேசிகன் - ஆசார்யர் அவதார ஸ்தலத்தின் அப்போதைய அவலநிலை பற்றி எழுதியிருந்தது மட்டும் கீழே மறுபதிவு செய்துள்ளேன்..  
.. ..
கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார். 

நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.

“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.

“நம்பி வீடு”
“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.
“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.
அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.

நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.
“உரமா ?”
“ஆமங்க வியசாயத்துக்கு”
அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.

“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”
“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”

திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.

திரு தேசிகன் -  நிச்சயம்  தேங்காய் உடைக்க வேண்டும்.  இது யாருடைய  முயற்சி; யாரெல்லாம்  இதற்கு வ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். நிச்சயம் பெரு முயற்சி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை.    இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார்.  அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர்  திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது.  மகிழ்சியாக உள்ளது. 


ஆசார்யன் திருவடிகளே சரணம்.

The post referred is Sujatha Desikan’s post on Acharyar Thirukachi Nambigal written way back in 2010.  Upon searching for Acharyar Avatharasthalam, with none providing details [locals too were not aware !!] – he found it near a Vinayagar temple, occupied by somebody and had lamented that only God can save and restore the place.  The photos by Madhavan show Acharyar visiting the same Avatharasthalam this year.  For sure, this is made possible by great efforts by some group of people.  It does makes the believers, followers of Srivaishnava Acharyargal happy.  [that portion of Desikan’s search reproduced alongwith photos of Mr R Madhavan]


அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார்

Friday, February 24, 2017

Masi Thiruvonam 2017 purappadu at Thiruvallikkeni

Today  24th Feb 2017 is  Masi Thiruvonam.  On every Thiruvonam day, at Thiruvallikkeni there will chinna mada veethi purappadu of Sri Parthasarathi.  Here are some photos taken during today’s purappadu.


திருவோணத்தில் அவதரித்த பொய்கையாழ்வார் எளிமையான வார்த்தைகளில் நாம் எம்பெருமானை அடைய அளித்த அற்புத வரிகள் :

எளிதில் இரண்டு அடியும்  காண்பதற்கு*, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, - களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.

நம் எம்பெருமான் ஸ்ரீமன் நாரயணன் -  அஹங்காரத்தாலே அடிபணியாதிருந்த இரணியனை தொலைத்து, தனது பக்தன் ப்ரஹ்லாதனுக்கு அருள்புரிந்தவன்.  அவ்வாறு சிறப்பு வாய்ந்த அவனது உபய பாதங்களை அடைவதற்கு எளிதான உபாயம் - நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய திருநாமங்களை, கலக்கம் இல்லாமல் உள்ளம் தெளிந்து - எப்போதும் அவற்றை எண்ணி உச்சரிப்பதே !!


Poigaialwar shows the easy way of reaching the Lotus feet of Sriman Naryaana by advising us :

0 Heart, don’t ever have any confusion ! – Sriman Narayana killed the pride-ridden Hiranya, for the sake of devout Prahalada.  Think of that Lord who took form of Narasimha to get rid of the enemy of Baktha Prahlada; chant thy name always – and there is no other easier recipe for reaching the most benevolent Lord Sriman Narayana.

After the purappadu,  Sri Poigai Azhwar, Sri  Pillai Logachar and Sri Vedanthachar were seated near Sri Parthasarathi and there was goshti of ‘Muthal thiruvanthathi’ given to us by Poigaippiran. 


Adiyen Srinivasa dhasan.







Sunday, February 19, 2017

நாகத்தணையரங்கம் பேரன்பில்: Thiruvanbil Sri Sundararaja Perumal Thirukovil

Thiruvanbil Sri Sundararaja Perumal Thirukovil

கங்கையில் புனிதமாய் காவிரி நடுவிலே உள்ள அற்புத திவ்யதேசம் திருவரங்கம்.  பொன்னி எனப்படும் காவேரி ஆறு பாயும் பகுதிகள் எல்லாம் வளமாக இருந்தவை.  பொன்னிப்படுகையிலே வளர்ந்த சோழ நாடு வலிமையுடன் திகழ்ந்தது.  சோழர்களின் கொடி புலிக்கொடி; . சோழர்களின்  மலர் ஆத்தி.  "சோழ வளநாடு சோறுடைத்து !"  : என்றார் ஒளவையார்;  சோறு என்பதை அறிவுவளம் என்றும் கூறுவர். பிற்காலங்களில் பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது.  நிற்க !! இது சரித்திர பதிவல்லவே !!

கோவில் என்றாலே நம் திருவரங்கம் ~ இங்கே பள்ளிகொண்டு அருள்பாலிக்கும் திருவரங்கனை சேவித்தபின், அருகிலுள்ள திருவெள்ளறை, திருக்கோழி (உறையூர்); திரு அன்பில், திருப்பேர்நகர் (கோவிலடி, அப்பகூடத்தான்) திவ்யதேசங்களையும்; குணசீலம் போன்ற அபிமான ஸ்தலங்களையும்  சேவிப்பது ஸ்ரீவைஷ்ணவர்கள் இயல்பு.

ஸ்ரீரங்கத்தில் இருந்து லால்குடி மார்கத்தில் இருக்கும் 'திரு அன்பில்' ஒரு அற்புத திவ்யதேசம்.  இந்நாளில் சிறிய ஊராக காணப்படும் அன்பிலில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள் திருக்கோவில் நூற்றாண்டுகள் முன்பு, பெரிய கோவிலாக, நிறைய சுற்றுக்களுடன் இருந்ததாக கூறப்படுகிறது.  இன்றைய நிலையில், பல திருக்கோவில்கள் போலவே, நிறைய நிலங்கள் சொத்துக்கள் இருந்தும், கோவிலுக்கு பெரிய வருமானம் இல்லாததாகவும், இதனாலே, பிரம்மோத்சவம் போன்ற சிறப்பு உத்சவங்கள் நடைபெற இயலாததாகவும் அறிகிறோம். 



 திருமழிசைப்பிரான்  - 'நான்முகன் திருவந்தாதியில் : 

நாகத்தணைக்  குடந்தை  வெஃகா  திருவெவ்வுள்*,
நாகத்தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்  பாற்கடல்  கிடைக்கும் ஆதி  நெடுமால்*,
அணைப்பார் கருத்தனாவான்.  :  -  என மங்களாசாசனம் செய்துள்ளார்
எம்பெருமான் - திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சில :  திருக்குடந்தை,  திருவெஃகா, திருவெவ்வுள் (திருவள்ளூர்), தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில் நாகத்தணையிலே கிடந்தருள்வது அவர்தம் பக்தர்கள் இதயத்திலே புகுவதற்க்காக  *  அணைப்பார் கருத்தனாவான் – “ என்பது : எப்போதும் எம்பெருமானோடு அணைந்தேயிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர், அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்திலே), பரம சௌலப்யனான ஸ்ரீமன் நாராயணன் எப்போதும்  பொருந்தினவானாக, ஆவான். (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய உரையில் இருந்து)

Kaliyan says of the Lord reclining on the serpent (Adisesha) in Thirukudanthai,  Thiruvekka, Thiru Evvul (Thiruvallur); the holy Thiruvarangam, Thiruppernagar (koviladi aka Appakudathan); Thiru Anbil and Thirupparkadal ~ Sriman Narayana happily reclines on Adisesha in the eternal Ocean of Milk ~ the timeless, limitless, eternally bountiful Lord is reclining only to easily get into the heart of His devotees.   – at ThiruVanbil, He gives darshan as the most beautiful Sundara Rajar (Vadivu Azhagiya Nambi).

இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருக்கோவிலிலே ரூபராஜன் எனும் வடிவழகிய நம்பியான சுந்தர்ராஜனை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.  கோவிலில் நுழைந்ததும் திரு ஆராவமுதன் பட்டர் வரவேற்று கணீர் குரலில் திருத்தலப்பெருமைகளை விளக்கி, சயனித்த திருக்கோலத்தில் இருக்கும் பெருமாளின் பாதரவிந்தங்களையும், தல வரலாற்றில் ப்ரம்மாவின் செருக்கை போக்கியதையும், மண்டூக மகரிஷி விமோச்சனம், வால்மீகி முனிவருக்கு அருளியது, ஆழ்வாரின் பாடல், என அனைத்தையும்  - இனிமையாக விளக்கினார்.  இத்திருத்தலத்தில் உத்சவர் சுந்தரராஜ பெருமாள், உபயநாச்சிமார், அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் ஆண்டாள் சேவை சாதிக்கிறார். சயனித்துள்ள பெருமாளின் திருவடிகளிலே ஸ்ரீதேவி, பூமாதேவி பிராட்டியரும், நாபிக்கமலத்தில் பிரம்மாவும், உள்ளனர். சுந்தரவல்லி நாச்சியாருக்கு தனி சன்னதி உள்ளது.

18.2.2017 அன்று பெருமாளுக்கு தங்க கருட சேவை நடை பெற உள்ளதால், திருக்கோவில் கோபுரங்கள், மின்விளக்குகளுடன் பரிமளித்தன. இக்கோவில் குறித்து பல கல்வெட்டுகள் உள்ளனவாம்.  திவ்யதேசங்களில் (இந்த ஆராவமுதன் போன்ற) பட்டர்கள், கைங்கர்யபரர்களின் உகந்த கைங்கர்யத்தால், பழமையும் பெருமையும் வாய்ந்த திருக்கோவில்களில் நித்ய ஆராதனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதுபோன்ற கைங்கர்யங்களில் ஈடுபட்டு உள்ளவர்களை ஆதரித்தால் (அவர்களை நம்மால் முடிந்த அளவு சிறப்பாக) நம் சம்ப்ரதாயம் மேலும் சிறப்புற விளங்கும்.  இது ஒவ்வொரு ஸ்ரீ வைணவனின் கடமையாகும்.

From Srirangam divyadesam, one travels around 45 minutes in Lalgudi route to reach Anbil divyadesam.  One can also reach through Kallanai, proceed on route Thirukattupalli – reach Thiruppernagar, have darshan at divyadesam, cross Kollidam river (now there is a new broad bridge) and reach Anbil. 

Anbil is a village near Lalgudi, located on the banks of the Kollidam river, in Tiruchirappalli district. Anbil has had its share in the politics of Tamil Nadu and has temples (besides the divyadesam) of  Mariamman and Sathyavageeswarar. Anbil is considered as three separate villages by the Government of India as of the 2011 Census, namely Jangamarajapuram, Mangammalpuram and Keelanbil.

The beautiful Srivaishnava shrine, in its present form appears a small one – understand that it earlier had many rounds of fortification and had so much of landed property, which like many other temples are not yielding the revenue.  The temple is believed to have been built by the Medieval Cholas of the late 8th century AD, with later contributions from Vijayanagar kings and Madurai Nayaks. The copper plate inscriptions from Anbil indicate generous contribution by the Chola kings to the temple. The rajagopuram, the temple's gateway tower, is east facing and has a 3-tier structure.

Later day  King Sundara chola was a devotee and upon his war victories,  donated immense wealth to this temple. His prime minister Anirudha Brahmarayar is believed to be from Anbil.   The temple is located on the Northern bank of the river Kollidam, at a distance of 25 km (16 mi) from Trichy.

The presiding deity as sung by Thirumazhisai Alwar is in reclining posture on Adisesha.  Inside the sanctum sanctorum, His consort  Sridevi and Bhoomadevi are doing service at His thiruvadi while  Brahma is present from his Thirunabi.  The Uthsavar is the Smiling beautiful Ruparajar – Vaidvu Azhagiya Nambi – Sundara Raja perumal.  Besides the ubayanachimar, there is Andal in seated posture.  Thayar is Sundaravalli thayar in a separate sannathi.

Legend has it that Sage Durvasa once came to meet Mandaka Rishi but had to wait long as the latter was in deep meditation, under the river. Durvasa, who is known for his instant anger, cursed Mandaka Rishi turning him into a frog.  Mandaga’s curse was cured by Sri Sundararajar and this place is also known as Mandaka(Frog) Puri.

At every divyadesam, the antiquity, sampradhayam and rituals are taken care by the few exceptionally devoted people who live and do kainkaryam to Lord without thinking of any recompense.  Here it is Anbil Aravamudha battar who does great kainkaryam and it is the duty of all Srivaishnavaites to support people like him and ensure that our tradition is preserved.  Understand that for lack of revenue, annual Brahmothsavam has stopped for years and the battar is striving hard to make that happen.

Here are some photos of the divyadesam.

Adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
19th Feb 2017.

Sri Sundraraja perumal photos credit : Sri Aravamudhan battar