திருமலையில் சிறப்பு வைபவம் -
திருமலை அனந்தான்பிள்ளை
திருவவதார மகோத்சவம் :
Thirumalai Ananthan Pillai Uthsavam at
Thirumala 2012
This is a Post about
the 958th Birth celebrations of Thirumalai Ananthan Pillai
held at Thirumala Tirupathi on 26th Feb 2012.
Sure you would have
had darshan of Lord Venkateswarar – Tirupathi Balaji so many times – have you
not noticed the ‘crowbar’ kept at the Main entrance to the temple and do you
know its legend.
Of the many
divyadesams sung by Azhwaargal, Thirumala occupies a very prominent
position. Our Acharyan Emperumanaar
(Udayavar, Ramanujar, Bashyakarar……….) did many service to the Lord here and
Udayavar was instrumental in many of the religious practices being established
in Thirumala. One of his disciples is ‘Thirumalai
Ananthazhwaan’ who was very attached to Ramanujar. Ananthazhwaan was born in 1053 near Mysore in
a village called ‘siruputhoor’. When
Udayavar was rendering kalakshepam on Thiruvaimozhi, (the verse – sindhu poo
magizhum Thiruvengadathu – meaning the place replete with flowers), Udayavar
asked whether anybody would do the pushpa kainkaryam at Thirumala. Remember, Tirupathi was a very dense jungle
ridden with wild animals with adverse weather.
Ananthazhwaan readily came forward and said that he would go, if
Udayavar so desires. Udayavar was so
elated that he praised Ananthazhwaan as the real man and till date, his
descendents have the name ‘Thirumalai Ananthanpillai’ meaning manly.
Legend has it that Ananthazhwaan
was organizing ‘a flower garden’ – he was constructing a lake for supply of
water on the hills – an extremely arduous work.
Lord Balaji in one of His Thiruvilayadals, came to the place and tried
helping him. Wrongly assuming the person
as hindering the work, Ananthazhwaan threw the crowbar at the Lord (without
knowing Him); later realised his folly and got the Divine Blessings of
Lord. This is the crowbar now seen at
the entrance of the Temple of Supreme Lord Thiruvengadam Uaiyaan.
Thirumalai
Ananthazhwaan continued his floral and other services to Lord Srinivasar for
many years. The Vigraham of Sri
Ramanujar that we worship inside the Sri Vari Temple was installed by him.
The garden created by
Ananthazhwaan is now known as ‘Puraisaivari Thottam’. It lies on the back side of the temple near
Chinna Jeeyar Mutt and one can reach this place through the Thirumala Library also. Now there is a beautiful brundavanam at
this place maintained by the descendents of Thirumalai Ananthazhwaan. The lake created by him now stands
majestically as ‘Ramanuja lake” replete with water on the hill !! Twice in a year, Sri Malayappar visits this place and honours
Ananthazhwaan now in the form of Magizha maram.
‘Sri Venkatesa Ithihasa maala’ is considered the best amongst the many
works of Thirumalai Ananthazhwaan
For the past few
years, anniversary Uthsavam of Sri Ananthazhwaan is being celebrated at his
place at Thirumala. It is being organized
by his descendents, well supported by Thirumala Tirupathi Devasthanam. Almost a decade back, when it was organized for
the first time, the place wore not so great looks, but over the years has been
improved and maintained so well that it is a fitting tribute to Thirumalai
Ananthazhwaan who did yeoman service to Lord Srinivasar.
This year it was 958th
Birth day celebrations very well organized. His Holiness Thirumalai Periya Kelviappan
Swami, His Holiness Thirumalai Ilaiya
Kelviappan Swami, His Holiness
Sriperumpudur Ethiraja Jeeyar Swami, His Holiness Sriperumpudur Embaar Jeeyar
Swami, HH Thirukovalur Emperumanaar Jeeyar Swamigal were among those present. Besides there were hundreds of Kalakshepa
Athigarigal, Athyapakars from various
divyadesams, Ubaya Vedantha periyavargal and many youngsters who participated
in the ‘Thiruvaimozhi Goshti’. There were
kalakshepams by renowned experts also.
This year, a lifesize statue of - Swami Ananthazhwaan
was unveiled by TTD.
Let us worship the
feets of Thirumalai Ananthazhwaan who was renowned for his knowledge, devotion,
steadfastness and more good qualities.
Some photos taken
during the celebrations are also attached. For more photos see :
*********************************************************************************************
திருமால் தன் அடியார்களை காப்பதற்கு எழுந்து அருளி இருக்கும் திவ்யதேசங்களில்
தலையானது "திருமலை" என போற்றப்படும் "திருவேங்கடம் -
திருப்பதி"- குளிரருவி வேங்கடம்; விரிதிரை வேங்கடம் என
மிகுந்த அருவிகளை உடையதாக புகழப் படுகிறது. இப்படி பல சிறப்பு வாய்ந்த
திருவேங்கடத்தில், சமீபத்தில் நடந்த 'திருமலை
அனந்தாழ்வானின்' 958வது
திருவவதார மகோத்சவம் பற்றிய பதிவு இது : திருமலை திருப்பதியில் பல முறை
வரிசையில் பல மணி நேரம் நின்று பெருமாளை தரிசித்து இருப்பீர் - பிரதான வாசலில்
நுழையும் போது - ஒரு கடப்பாரையை எப்போதேனும்
கண்ணுர்றீர்களா ?
காசினியோர் தாம் வாழ கலியுகத்தே வந்துதித்த ஆச்சார்யர் 'நம்மிராமானுஜர்'
! இவரது சிறப்பு வாய்ந்த சிஷ்யர் - 'திருமலை
அனந்தாழ்வான்'. அனந்தாழ்வான் மைசூர் பகுதியில்,
காவிரிக் கரையினில் சிறுபுதூரில் 1053 ம்
ஆண்டு அவதரித்தார். இவர் இராமானுஜர்
இடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எம்பெருமானார் திருவாய்மொழிக்கு அர்த்தமருளிக்
கொண்டு எழுந்து அருளி இருக்கும் போது, "சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து" எனும் பாடலுக்கு இணங்க புஷ்ப
மண்டலமான திருமலையில் திருநந்தவனம் அமைத்து புஷ்பங்களால் திருமாலை கட்டி
கைங்கர்யம் புரிய ஆரானும் உண்டோ! என வினவ, தேவரீர் நியமித்தால்
அடியேன் கைங்கர்யம் செய்கிறேன் என அனந்தாழ்வான் தெண்டன் சமர்ப்பித்தாரம்.
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, திருமலை அடர்ந்த காடு,
வன விலங்குகள் திரியும் கடினமான குளிர் பிரதேசம். இக்கடின தேசத்தில்,
கைங்கர்யம் செய்ய முன்வந்த அனந்தாழ்வானை,
எம்பெருமானார் பாராட்டி, 'நீரே ஆண் பிள்ளை'
என ஆச்சர்யிக்க, இன்றும் இவரது வம்சத்தினர்,
'திருமலை அனந்தான்பிள்ளை ' என பெயர் பெற்று விளங்குகிறார்கள்.
அனந்தாழ்வான் தனது பத்தினியுடன் திருமலையில், நந்தவனம் அமைத்து, அதை பராமரிக்க, ஒரு ஏரி வெட்டிக்கொண்டு இருந்தபோது,
திருவேங்கடமுடையான் திருவிளையாடலை தனது கைங்கர்யத்துக்கு விக்னம் என
தவறாக கருதி, தன் கையில் இருந்த கடப்பாரையை வீச, அது திருவேங்கடமுடையான் திருமுகத்தில் பட்டதாம்; பின்பு அனந்தாழ்வான் உண்மையை உணர்ந்து பெருமாளிடம்
பிரார்த்தித்து, அருள் பெற்றார். இந்த கடப்பாரையே,
இன்றும் திருமலை திவ்யதேசத்தில், காணப்பெறுகிறது. !!
திருமலையில் இவர் பல வருடங்கள் சிறப்புற கைங்கர்யங்கள் செய்தார். திருமலை
கோவிலில் உள்ளே சேவை சாதிக்கும் 'பாஷ்யகாரர் ' விக்ரஹம்
அனந்தாழ்வான் பிரதிஷ்டை பண்ணியது ஆகும். அனந்தாழ்வான் நந்தவனம் அமைத்த இடம் இன்று 'புரசைவாரி
தோட்டம்' என போற்றப்படுகிறது. இங்கே அனந்தாழ்வான் இப்போதும் மகிழ மரமாக சேவை
சாதிக்கிறார். இப்போது இவ்விடம் அழகிய பிருந்தாவனம் ஆக உள்ளது. இங்கே அவர் அமைத்த 'இராமானுஜர் ஏரி' ஏராளமான தண்ணீர் உடன் உள்ளது. திருமாளிகையின் உள்ளே, அனந்தாழ்வான் , அவரது பத்தினி, திருக்குமாரர்கள் சிற்பங்கள் உள்ளன.
இந்த புரசைவாரி தோட்டத்துக்கு வருஷம்தோறும் மலையப்பர் எழுந்து அருளி, அனந்தாழ்வான்
அடையாளமான மரத்துக்கு பெருமாளின், பூமாலை
திருவஸ்த்ரங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவரது படைப்புகளில் முதன்மையானது 'ஸ்ரீ வெங்கடேச இதிஹாசமாலா'
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருமலை அனந்தாழ்வானின் 958வது
திரு அவதார மகோத்சவம் 26/02/2012 அன்று சிறப்பாக
கொண்டாடப்பட்டது. சில வருடங்கள் முன்பு [2004ல்] திருமலை அனந்தான்பிள்ளை வம்சத்தினர் , திருமலை
திருப்பதி தேவஸ்தானம் ஆதரவுடன் அவரது திருஅவதார உத்சவம் நடத்தினர்.
அது முதல் ஒவ்வொரு வருடமும் இந்த உத்சவம் பொலிவுடன் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த
இடம் சாதரணமாக காணப்பட்டது. இப்போது இவ்விடம் மிக நன்றாக பராமரிக்கப் படுகிறது.
இவ்வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியில் - திருமலை பெரிய கேள்வி அப்பன் ஜீயர்
சுவாமிகள், திருமலை இளைய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் எதிராஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர்
எம்பார் ஜீயர் சுவாமிகள், திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர்
சுவாமிகள்; ஏராளமான உபய வேதாந்த விற்பன்னர்கள்; காலக்ஷேப அதிகாரிகள்; பல்வேறு திவ்யதேச அத்யபகர்கள்
என பலர் எழுந்து அருளி இருந்து - திருவாய்மொழிகோஷ்டி, நிறைய காலக்ஷேபங்கள் என இவ்விழா பரிமளித்தது. இவ்வருடம் புரைசைவாரி தோட்டவாயிலில், திரு
அனந்தாழ்வானின் ஆளுயர திருவுருவ சிலை திறக்கப்பட்டது.
ஞானம், பக்தி, வைராக்கியம், குருபக்தி எனும் நற்குணங்கள் அனைத்தும் திளைத்து விளங்கப்பெற்ற
அனந்தாழ்வான் எனும் மகாசார்யரை வணங்குவோமாக !!
At the entrance and inside the Brindavanam of Ananthazhwaan
unveiling of Statue and below the statue of Ananthazhwaan as rendering floral kainkaryam
His Holiness Jeeyars and the goshti
the lake above and Ananthazhwan as inside the thirumaligai
series of kalakshepams commencing. and maryathai to the maghizha maram