Wednesday, July 27, 2011

Thiruvaadi Pooram Uthsavam aarambam at Thiruvallikkeni - July 2011


Aadi is a great month for Srivaishnavaites, for in this month falls the birth day of Andal – the only female saintess Azhwar in our Sampradhayam.  Goda devi  was born at Srivilliputhur  in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadi puram’. 

Goddess   Andal was a treasure-trove infant, obtained in the Tulasi garden, in the premises of the temple of Sri Vadanathrasayee.   She was found by Periyazhwar whose birth celebrations recently occurred in ‘Aani Swathi’.

Andal composed two works  unique in their literary, philosophical, religious, and artistic content.  One is  Tiruppavai, a poem of thirty verses in which Andal imagines herself to be a cowherd girl during the incarnation of Lord Krishna. This is recited in all temples especially during the month of Margazhi.  The second is the Nachiyar Tirumozhi, comprising of 143 verses.

This year Thiruvadipuram falls on 17th day of Aadi, Tuesday – 2nd August 2011.  The 10 day Thiruvadipura Uthsavam commenced on 24th July 2011.  Here are some photos taken during the purappadu on that day

Regards – S. Sampathkumar.

  ****************************************************************************************************
திருவாடிப்பூரம்  ஆண்டாளின் திரு அவதாரத்தால் சிறப்பு பெற்றது.  பூமிப்பிராட்டியின்  திரு அவதாரமான கோதை என பெயர் பெற்ற ஆண்டாள் கலி பிறந்து தொண்ணூற்று எட்டாவது நள வருடத்தில் சுக்ல பக்ஷம் பஞ்சமி  திதி கூடிய பூர நக்ஷத்ரத்தில்  அவதரித்தார். 

பொங்கும் பரிவாலே  என பெருமாளிடத்தில் அதீத ப்ரீதி  காட்டிய  வில்லிபுத்தூர் பட்டர்பிரான்  என்கிற விஷ்ணுசித்தர் ஆழ்வார்களிலே  பெரியாழ்வார்  எனப் பெயர் பெற்ற மெய்யடியார் நந்தவனத்திலே துளசிச் செடியின் அருகே  இவரை  கண்டு எடுத்தார்.

கோதை என்றால் தமிழில் மாலை; வட மொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள்.  தனது பாமாலை களாலும்  பூமாலை களாலும்  பெருமாளை பாராட்டியதால் 'சூடிக் கொடுத்த நாச்சியார்" என பெயர் பெற்ற இவர் 'திருப்பாவை 30   பாடல்களையும்  நாச்சியார் திருமொழி  143  பாடல்களையும் " அருளிச் செய்தார். 

தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறு பெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் நடைபெறுகிறது.

இவ் உத்சவம் ஞாயிறு 24/07/2011  அன்று துவங்கியது.  திருவல்லிக்கேணியில் சாயம் ஆண்டாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.  அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :-

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 












Friday, July 22, 2011

Sri Parthar Aadi masa pravesam 2011

Dear (s)

Sunday, 17th July 2011 was Dakshinayanam and the birth of Aadi maasam.  Here are some photos of majestic Lord Parthasarathi taken during the chinna maada veedhi purappadu on that day

Adiyen Srinivasa dhasan






Sunday, July 17, 2011

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் - the riches of Lord Padmanabhaswami

An article on the riches of Thiruvananthapuram Padmanabha Swamy in today’s (17 07 2011)  Dinamalar worth reading and circulating to your friends : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276610

ஈடு இணையற்ற பக்திக்கு எடுத்துக்காட்டு:  
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள்

திருவனந்தபுரத்து பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிக்க முடியாத அளவு, விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. திருவனந்தபுரம், தொன்று தொட்டே புகழ் வாய்ந்த நகரமாக இருந்தது என்பது, "அந்தமிழ் புகழ் அனந்தபுரம்' என, நம்மாழ்வார் பாடியுள்ளதில் இருந்தே அறியலாம். இங்குள்ள திருமால் கோவிலையும், பெருமாளையும், "அனந்தபுர நகர் ஆதி அம்மான்' என்று அவர் கூறுகிறார். அனந்தபுரம் என்பது ஊரையும், நகர் என்பது விண்ணகரம் என்றும், ஆதி என்பது பெருமாளையும் குறிக்கும். இங்கு உறைகின்ற திருமால், "பாம்பணையில் பள்ளிகொண்ட பரமமூர்த்தி' என,ஆழ்வார் பாடுகிறார்.

முதன் முதலில் சேரமான் பெருமாள் என்ற பட்டம் பூண்ட பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர அரசர், கி.பி., 1050ல், பத்மநாப சுவாமி கோவிலுக்கு திருப்பணி செய்வித்தார். ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இக்கோவிலோடு தொடர்பு கொண்டவர். முகுந்த மாலை என்ற பதிகத்தை இயற்றியிருக்கிறார். எளிமையான அமைப்புடன் இருந்த கோவிலை, கேரள கலை மரபுப்படி 12ம் நூற்றாண்டில் ஆண்ட வேனாட்டு அரசர், 1325லிருந்து 1355 வரை ஆண்ட வீர கோதை கேரள வர்மன் என்பவர் புதுப்பித்துக் கட்டினார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. 1168ல் ஆண்ட வீர ஆதித்ய வர்மன் என்பவர், இக்கோவிலுக்கு அருகிலிருந்த, மித்திரானந்தபுரம் கோவிலை கட்டி, பத்மநாப சுவாமி கோவிலின் இணைக் கோவிலாக மாற்றினார். பத்மநாபர் கோவில் ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்தது. தெப்பக்குளம், 25,700 சதுர அடி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோவிலினுள்ளே கிருஷ்ணன் கோவில், நரசிம்மர் கோவில், அய்யப்பன் கோவில் ÷க்ஷத்திர பாலன் கோவில், முதலிய கோவில்களும் உள்ளன. பண்டைக்காலம் தொட்டே பத்மநாப சுவாமி கோவிலில், சேர அரசர்களுடைய குலதெய்வமாக திகழ்ந்துள்ளது.

பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானம், அதன் மேல் விமானம், அதற்கு முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபம், மடப்பள்ளி திருச்சுற்று மண்டபம், அபிஸ்ரவண மண்டபம், கோவிலைச் சுற்றி ஆயிரம் விளக்குகள் இருக்கும் மரச்சட்டங்களுடன் கூடிய விளக்கு மாடம் மற்றும் கோவிலின் உட்பகுதி முதலிய அனைத்துமே, ராம மார்த்தாண்ட வர்மா, 1459லிருந்து 1461 வரை திருப்பணி செய்வித்தார்.அதாவது, இன்றுள்ள பத்மநாப சுவாமி கோவிலின் பெரும்பாலான பகுதிகள், கி.பி., 1460ல் தோற்றுவிக்கப்பட்டவை. இதற்கடுத்து, 1481ல் வீரகோதை மார்த்தாண்ட வர்மா, இங்கு மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்தார். பரணித்திருநாள் ஜெயசிம்ம தேவர் என்பவர், 1486ல் பல சமுதாய சீர்த்திருத்தங்கள் செய்து கொடுத்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த பாண்டிய மன்னர், பராக்கிரம பாண்டிய தேவர், பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஒரு நிலம் தானமாக கொடுத்திருக்கிறார். கோவிலின் திருச்சுற்று சுத்தம்பலம் மடப்பள்ளி முதலியவற்றுக்கு கருங்கல் தரை பரவப்பட்டது. பல திருவாங்கூர் மன்னர்கள் தாங்கள் செய்த சிறு பிழைக்கு, தண்டமாக பொருட்களும் கொடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய கி.பி., 1499ல், ஒரு போரில் ஏற்பட்ட பிழைக்காக, பன்னிரெண்டு வெள்ளிக் கலசங்களையும், சில கல் சிற்பங்களையும் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். 1500ல், கோவிலுக்குள், தைத்த துணிமணிகளை அணிந்து வரக்கூடாது என்று ஓர் ஆணை பிறப்பித்தார்.அதன்படி, கடந்த 500 ஆண்டுகளாக இம்மரபு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1532ல் திருப்பாபூர் மூத்த திருவடி, கோவிலில் இருந்த விலை உயர்ந்த அத்தனை ஆபரணங்களுக்கும் ஒருவிவரப் பட்டியல் தயாரித்தார். பின்பு கி.பி., 1686ல், ஒரு பெரும் தீ, கோவிலில் பரவியதால், குறிப்பாக, அபிஸ்ரவண மண்டபம், நரசிம்ம சுவாமி கோவில் முதலியவற்றில் இருந்த பகுதிகள் தீக்கு இரையாயின. அப்பொழுது விமானத்தின் கூரைப் பகுதி எரிந்து, மூலவர் மேல் விழுந்தது. மூலவர் உருவம் மரத்தால் செய்யப்பட்டிருந்தாலும், அது எவ்வித சேதமும் இன்றி தப்பியது.
அரசர் வகுத்த வழிமுறைகள்: கார்த்திகை திருநாள், ரவிவர்ம ராஜா, இந்த தீக்கிரையான பகுதிகளை புதுப்பித்து, சாந்தி அபிஷேகம் செய்வித்தார். இதுபோன்ற கோவில் பற்றிய செய்திகள் எல்லாம், ஆயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, பத்மநாப சுவாமி கோவிலில் இன்று வரைகட்டுக் கட்டாக வைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு மொத்தம் உள்ள சுவடிகள் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும். இவற்றுக்கு சுருணை என்று பெயர். இவற்றில் சில படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் என்ற தலைப்பில், அஸ்வதி திருநாள் கவுரி லக்ஷ்மிபாய் எழுதியுள்ள, சிறப்பான புத்தகம், பாரதிய வித்யா பவன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 1425ல், வீர ரவிவர்மர் என்ற மன்னர், பத்மநாப சுவாமி கோவில் உட்புறத்தில் ஒரு ஆவண காப்பகத்தை கட்டி, அவற்றுள் கோவில் ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை வைக்க ஏற்பாடு செய்தார். 1486ல், இரு வகையான கணக்கர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவர், கரணக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார். அவர், சட்டப்பூர்வமான ஆவணங்களை பாதுகாக்கவும், தயாரிக்கவும் அமர்த்தப்பட்டார்.மற்றவர் பண்டாரக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார். 
இவர், கோவிலுக்கு கொடுக்கப்படும் தங்கம், பணம், விலை உயர்ந்த அணிகலன்கள் முதலியவற்றின் பட்டியல் தயாரிக்கவும், கணக்கு எழுதவும், பாதுகாக்கவும் அமர்த்தப்பட்டார். இவை எல்லாம் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே, நம் அரசர்கள் வகுத்த வரன்முறைகள்.இப்பெரும் சொத்துக்கள் யாரைச் சேர்ந்தவை என்பதில், விவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் அவரவர் மனம் போனபடி எழுதப்பட்டுள்ளனவே தவிர, சட்டத்தின் நோக்கில் ஆய்ந்து எழுதப்பட்டவை அல்ல. ஒருவர் இவை நாட்டுக்கு சொந்தமானவை, ஆதலின் அரசே எடுத்துக் கொண்டு மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என, மிகவும் ஆடம்பரமான விளம்பரத்துடன் கூறியிருக்கிறார்.
இவற்றை அரசு என்ற போர்வையில், அரசியல்வாதிகள் அபகரித்து பயனற்றதாக செய்து விடுவர். எப்படி இருப்பினும், இக்கருத்து சட்டத்திற்கு விரோதமானது. மற்றொரு கருத்து, இது, திருவிதாங்கூர் மன்னருக்கு சொந்தமானது என்பதாகும். இதுவும் சட்டத்திற்கு புறம்பானதால் ஏற்புடையது அல்ல.மன்னருக்காக யாரும் இச்செல்வங்களை கொடுக்கவில்லை. மூன்றாவது கருத்து, இவை, கோவிலுக்கு சொந்தமானவை. இக்கருத்தும், பொதுப்படையாக கூறப்பட்டுள்ளதே ஒழிய, சட்ட நுணுக்கங்களுக்கு ஒத்து வரவில்லை. அதற்கு காரணம், கோவில் என்ற சொல்லின் விளக்கத்தை பொருத்ததாகும். கோவில் என்றால், பொதுவாக, "தெய்வம் உறைகின்ற இடம்' என்றுதான் கூறுவர், ஆதலின் இச்செல்வங்களை கோவிலாகிய இடத்திற்கு கொடுக்கவில்லை.இவை, அனைத்து கோவில்களில், இரத்தினப் பண்டாரம், பொற் பண்டாரம் என்பதைப் போல, கோவில் பண்டாரத்தில் இருக்கின்றன. ஆதலின், இக்கோவிலில் உறையும் தெய்வத்திற்குத்தான், பக்திப் பெருக்கினாலே கொடுத்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. இவற்றை காணிக்கை என்றும் அழைப்பது மரபு. 
பண்டைய காலத்திலிருந்து இந்திய நாட்டில் இவற்றை கோவிலில் உறையும் தெய்வத்திற்கே கொடுத்ததாக பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் கூறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் கி.மு., இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் உள்ளன.பழங்கால மரபு: தமிழகத்திலும், பல்லவர் காலம் தொட்டு இதுபோன்ற மரபை காண்கிறோம். திருத்தணி மலைமேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபராஜித பல்லவன், ஒன்பதாம் நூற்றாண்டில், தான் கொடுத்த தானத்தை செப்பேடுகளில் எழுதும்போது, "திருத்தணி மலைமேல் பிராணார் சுப்பிரமணியருக்கே நீரோடு அட்டிக் கொடுத்தேன்' என்று தானே கூறுகிறான். இதையே சமஸ்கிருத பகுதியில், "மலைமேல் மாகேஸ்வரனாகிய குமாரனாகிய ஷண்முகனுக்கு பொன் கலசத்திலிருந்து நீர் வார்த்துக் கொடுத்தேன்' என்று கூறுகிறான். தஞ்சை பெருங்கோவிலை கட்டிய ராஜராஜன், "தஞ்சாவூர், நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ராஜராஜேஸ்வரமுடையாருக்கு நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லில் வெட்டுக' என்று எழுதியிருக்கிறான். இங்கு கற்கோவிலாக ராஜராஜேஸ்வரத்தையுடைய தெய்வத்திற்கு நான் கொடுத்தேன் என்பது பொருள். இதிலிருந்து கோவில் வேறு, தெய்வம் வேறு சட்டப்படி குறித்துள்ளான். கேரள தேசத்திலும் இதே மரபுதான் கடைபிடிக்கப்பட்டது. "திருவல்லவாழ்' அப்பனுக்கு கொடுத்தது போன்ற குறிப்புகள் இதையே குறிக்கின்றன. இதுபோல இந்து கோவில்களாகட்டும், பவுத்த கோவில்களாகட்டும், சமண கோவில்களாகட்டும் கோவிலில் உடைய தெய்வத்திற்கு என்பதுசட்டப்படி பொருந்தும்.

இவ்வாறு கூறுவதால் என்ன சிறப்பு எனில், இவ்வரும் செல்வங்களை கோவிலாகிய இடத்திற்கு கொடுக்காமல், அங்கு உறைகின்ற தெய்வத்திற்கு பெரும் பக்தியுடனும், மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் கொடுத்தேன் என்பது பொருள். இது, நம் நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே பின்பற்றும் மரபு.இதில், மற்றொரு இடரும் ஏற்படக் கூடும். எங்கும் நிறைந்திருக்கும் சர்வேஸ்வரன் ஆகிய தெய்வத்திற்கு, நிலம், பணம், அணிகலன்கள் முதலியவற்றை உடைமை ஆக்கிக்கொள்ள உரிமையுண்டா என்பது கேள்வி. இதன் அடிப்படையில் கடந்த 200 ஆண்டுகளாக இந்திய நாட்டில் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் தெய்வத்திற்கு பொருள் கொள்ளும் உரிமை உண்டு என, தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

லண்டனில் நடந்த பத்தூர் நடராஜர் வழக்கில் இக்கேள்வி எழுந்தது. அதை ஆய்ந்து தீர்ப்பளித்த லண்டன் ஐகோர்ட் நீதிபதி தமது தீர்ப்பில், இந்திய சட்டப்படி தெய்வத்திற்கு பொருள் உடைமை கொள்ளும் உரிமை உண்டு. ஆதலின், பத்தூர் கோவிலுக்கு இந்நடராஜர் உரியதாகும். ஆதலின் இச்சிலையை அக்கோவிலுக்கே கொடுத்து விடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். ஆதலின், திருவனந்தபுரம் கோவிலில் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து செல்வங்களும், பத்மநாப சுவாமிக்கே சொந்தம். இவற்றை வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ, தம் இச்சைப்படி செலவழிக்கவோ முடியாது. குறிப்பாக, இக்கோவிலிலேயே பண்டாரக் கல்லறையில் இவை கிடைத்தது இதை உறுதி செய்கிறது.

அனந்த பத்மநாப சுவாமியை தங்கள் குல தெய்வமாகக் கொண்டு, பத்மநாப தாசன் என்ற பெயரோடு, காலங்காலமாக இவற்றை நேர்மையாக பரிபாலித்து, காத்து, இன்று வரை தந்துள்ள திருவனந்தபுரத்து மன்னர்களுக்கு, இந்திய நாடே தம் வணக்கத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டும், இச்செல்வங்களை இப்போதுள்ள முறைப்படியே பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருப்பதும், இந்திய மக்களின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இது, இந்து அரசர்களின் ஈடு இணையற்ற தெய்வ பக்திக்கும், தியாகத்திற்கும் பிரதிபலிப்பதாகத் திகழ்கிறது.-டாக்டர் இரா.நாகசுவாமி -

Jaggi Vasudev on the adminisration of Hindu Temples - Today's Dinamalar

மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:


அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?
ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா? நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.
அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.
என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.
பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!



பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்? அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.


எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம். கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!


Dinamalar : 17th July 2011 :  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=276611

Thursday, July 14, 2011

Lord Koodal Azhagar Thirukovil at Madurai and Ashtanga Vimanam

Recently went to Madurai and had the fortune of worshipping Koodal AzhagarMadurai is known as Koodal Nagar and this temple, one amongst the 108 Sri Vaishnava Divyadesam is located very close to the Bus stand / Railway Station.   Lord is known as Koodal Azhagar and consort is Maduravalli thayar.

The vimana here is renowned as Ashtanga vimana 125 ft high with kalasam of 10 ft.  It has 3 stages.  The vimanam which can be seen from many parts of Madurai can be seen in proximity as there are steps leading to this inside the temple and devotees are allowed to go up and see the vimanam as also have darshan of Lord Suryanarayanar and Lord in reclining posture.  Here are some photos.

The façade of the temple


The dwajastham from outside the temple

Vimanam from the inside corridor

The back side of the sanctum sanctorum



Closer looks of the Ashtanga vimanam

The main gopuram from top

The broad corridor from top

The vimanam as seen from the hotel



சமீபத்தில் மதுரை செல்லும் வாய்ப்பு கிடைக்க பெற்றேன்.   பாண்டி  நாட்டு  தலை நகரமாக விளங்கிய கூடல் மாநகரில் பஸ் ஸ்டாண்டு / இரயில் நிலையம் அருகிலேயே  " கோழியும் கூடலும் கோவில் கொண்ட " என மங்களாசாசனம்  செய்யப்பெற்ற  திவ்யதேசம் அமைந்துள்ளது.  இத் திருத்தலத்தில்தான்  பெரியாழ்வார் திருப்பல்லாண்டு அருளிச் செய்தாராம். 

காலை  06/30 ணியளவில் கோவில் சென்றதால் அதிக மனிதர்கள் இல்லாமல்  மூலவரை நன்கு சேவிக்க முடிந்தது.  மூலவர் பிரம்மாண்டமாய் வீற்று இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உத்சவர் அழகுற அவரருகே எழுந்து அருளி உள்ளார்.  சன்னதி நல்ல வெளிச்சத்துடன் மூலவரை நன்கு சேவிக்க ஏதுவாய் அமைந்துள்ளது.  சன்னதி சற்றே மேடான பகுதியில் அமைந்து உள்ளது.  சுற்றி அழகான பிரகாரம் உள்ளது.  திருச்சுற்றில் திவ்ய தேச எம்பெருமான் படங்கள் அழகுற மிளிர்கின்றன.  அடுத்த பிரகாரத்தில், சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.  அவரை தரிசித்து மேலும் இடப்புறம் சென்றால் தாயார் தனிக்கோவில் நாச்சியார் ஆக எழுந்து அருளி உள்ளார். மதுரவல்லி தாயார் என திருநாமம். வெளிப்பிரகாரத்தின்  மறுபுறத்தில் ஆண்டாள் சன்னதியும் நந்தவனமும் உள்ளன.

இத் திருத்தலத்தில் அஷ்டாங்க விமானம் வெகு பிரசித்தி.  இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவம் என வழங்கப்படுகிறது.  மதுரையின் பல இடங்களில் இருந்தும் இந்த உயர்ந்த விமானம் சேவை ஆகிறது.

கோவிலுக்குள் படிகள் வாயிலாக மேல் தளத்துக்கு சென்று இந்த விமானத்தை சேவிக்க வழி உள்ளது.  விமானத்தின் முதல் தட்டில் நின்ற திருக்கோலத்தில் சூர்யநாராயணரும், அடுத்த தளத்தில் சயனித்த திருகோலத்தில் பள்ளிகொண்ட பெருமாளும் எழுந்து அருளி உள்ளனர். இவை வர்ணம் பூசப்பெற்ற திருமேனிகள்.

ஆழ்வார் எம்பெருமானார் திருவடிகளே சரணம்

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

Monday, July 11, 2011

பெரியாழ்வார் சாற்றுமுறை. Periyaazhwaar Satrumurai at Thiruvallikkeni 2011

நேற்று - ஞாயிற்று கிழமை 10-07-2011 -   'நல்லானியில் சோதி நாள்" - பெரியாழ்வார் சாற்றுமுறை.    பெரியாழ்வார் வெள்ளி யானை வாகனத்திலும் ஸ்ரீ அழகியசிங்கர் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டு அருளினர்.  
பெரியாழ்வாரது   இயற்பெயர் விஷ்ணுசித்தர்.  தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில்  வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் முகுந்த பட்டர் என்பவருக்கும்- பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர். இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.  வடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் என்று வழங்கப்படும் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சார்த்தி கைங்கர்யம் செய்து வந்தார்.

பாண்டிய மன்னன்  வித்வான்களைத் திரட்டி  பரம்பொருள் யாது என்று நிரூபணம் செய்ய ஒரு போட்டி ஏற்பாடு  செய்து அதற்குப் பரிசாக ஒரு பொற்கிழியைக் கட்டி வித்வான்களை அழைத்து சபை கூட்டினான்விஷ்ணு சித்தர்  ஸ்ரீமன் நாராயணின்  கடாட்சத்தால்  ஸ்ரீமந் நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என  பர தத்துவத்தை  நிர்ணயம் செய்ய கிழி தானாக இவர் முன்னால் தாழ்ந்ததாம் இதைக் கண்ட அரசனும் வித்வான்களும் ஆழ்வாரை வணங்கி, அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டு களிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டு பரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை

பெரியாழ்வார் இயற்றியவை "திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்".  வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கு எல்லாம் சுருக்காய் என திருப்பல்லாண்டைப் பற்றி மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்.   ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எப்போது சேவிக்கப் பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12  பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461  பாசுரங்கள்*

ஆழ்வார்  பெருமாளைக் கண்ணுற்றதும் அவருக்கு ஒரு குறைவும் வரக்கூடாது என்று அவரது திருமேனி  அழகும் அவரது செல்வங்களும் என்றென்றும் பல்லாண்டு  வாழ வேண்டும் என மங்களாசாசனம் செய்ததே திருப்பல்லாண்டு!  விஷ்ணு சித்தர்  'பெரியாழ்வார்' ஆனதை நம் ஆச்சார்யர் மணவாள மாமுனிகள்  தமது உபதேச ரத்தின மாலையில் ’  இவ்வாறு அழகுற நவில்கிறார் .
மங்களா  சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு  தானன்றி   பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டாபிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்
பெரியாழ்வார் பாடிய படியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனைவரும் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனை நமோநாராயணாயவென்று பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவது  நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும்.

 திருவல்லிகேணியில் திருவீதி புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே


அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.

Gopura vasalil Periyaazhwaar


Gopura vaasalil Azhagiya singar Garuda sevaiyil

 Azhagiya singar kudaiyudan

Gangaikondan mandapathil Perumal



Gangaikondan mandapathil Aazhwaar.


10th July 2011 was a very significant day – The Sunday saw the festivity of celebrations of ‘birth celebrations of Periyazhwaar’.

In Triplicane, there was the veedhi purappadu [procession] of Periyaazhwaar in yaanai vahanam and  Lord  Azhagiya Singar atop the Garuda vahanam. 

Periyaazhwaar was born as ‘vishnu chithar’ at Sri Villiputhur.  He was doing floral service to the Lord Vada Bhathrasayee.  With the blessings of Lord, he proved before the Pandya King, the uniqueness of Sriman Narayanan.  He was honoured by the King and was taken around atop bridled elephant.  To honour him Lord Sriman Narayanan alongwith Pirattiyar appeared on Garuda vahanam and Vishnu Chithar instead of asking for favours as would do any normal human being, started singing paeans in a manner that he sought that HIS wealth and other blessings should remain as they are without diminishing in any manner.  Such was his devotion that he was called ‘Periyaazhwaar’ –the big among all others. 

His renditions are “Thirupallandu” and “Periyazhwaar Thirumozhi”.  Though they were not the ones made first, in Sri Vaishnavism, they are considered to be the initial ones in ‘Naalayira Divyaprabandham’ compiled by Sriman Naathamunigal and everytime ‘Naalayira Divyaprabandham’ is rendered, it begins with ‘Thirupallandu’ only. 

Posted above are some photos taken during the purappadu yesterday at Thiruvallikkeni

Adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]