Saturday, August 28, 2010

Thiruvallikkeni Pavithrothsavam - 2010

திருவல்லிக்கேணி திவ்ய ஸ்தலத்தில் நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம். திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருகோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சர்யர்களால் யாக யக்னங்களும்,
அத்யாபகர்களால்  திவ்யப்ரபந்த திருவாய்மொழி கோஷ்டியும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய பவித்ர மாலை சாற்றப்படுகிறது.

சனிக்கிழமை 21/08/2010 அன்று பெருமாள் புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே. மழை தூறல் காரணமாக பெருமாளுக்கு போர்வை போர்த்தி இருந்த அவசரமும் சேவிக்கலாம்.

திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி வலையில் தேடியதில் படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)

அடியேன் : சம்பத்குமார்






*********************************************************************************************




Wednesday, August 18, 2010

Dusi Mamandur Sri Lakshmi Narayana Perumal Samprokshanam


Dear (s)

Thondai mandalam is famous for its temples - among the 108 Sri Vaishnavaite shrines, 22 are situated in and around Kanchipuram.  Our Acharyas like  Sriman Ramanujar, Thirukachi Nambi, Koorathazhwan, Mudaliandan, Embar,  Vedanta Desikar were all born in Thondai mandalam.

The village of Mamandur (near Dusi) is on the Cheyyar route less than 10 km away from Kanchipuram.  The century old Sri Lakshmi Narayana Perumal kovil is place where devotees are granted their wishes by the Lord.  The Moolavar has Lakshmi Prattiyar on his lap - is very powerful and grants boons to all his devotees.

The temple was renovated last in 1950 and with the efforts of some good people, the Samprokshanam is to take place on 5th Sept 2010 (Sunday) in Simha Lagnam betwen 0530 am to 0700 am.

All are requested to attend and get the blessings of the Lord.  Donations can be sent in the name of "SRI SUNDARAVALLI THAYAR - LAKSHMI NARAYANA PERUMAL KAINKARYA SABHA" - Bank Account : 822010110003359 (IFSC code BKID 00082220) Bank of India, Kancheepuram Branch, Gandhi Road, Kanchipuram.


Adiyen - Sampathkumar Srinivasan.

-------------------------------------------------------------------------------------------------------
The notice containing details is available here.  Mamandur Samprokshana Pathirikai
------------------------------------------------------------------------------------------------------


ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களே

தொண்டை நாடு பல சிறப்பு பெற்றது.  ஸ்ரீ வைஷ்ணவ 108  திவ்ய தேசங்களில் - 22 திவ்ய தேசங்கள் தொண்டை மண்டலத்திலேயே, திருக்கச்சி  அருகிலேயே அமைந்துள்ளன.  நம் தொண்டை மண்டலத்தில்தான்  ஸ்ரீமத் ராமானுஜர், திருக்கச்சி நம்பிகள், கூரத்து  ஆழ்வான், முதலியாண்டான் , எம்பார் , வேதாந்த தேசிகர் போன்ற ஆச்சார்யர்கள் அவதரித்தனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரம் அருகே செய்யார் செல்லும் மார்க்கத்தில் தூசி அருகே மாமண்டூரில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் அமைந்து உள்ளது.  இத் திருக்கோவிலில்  ஸ்ரீ லக்ஷ்மி தாயாரை மடியில் தாங்கி, பெருமாள் அருள் பாலிக்கிறார். எல்லா வரங்களையும் தரும் இத் திருக்கோவிலின் சம்ப்ரோக்ஷணம் முன்பு  1950ம்  ஆண்டு நடைபெற்றது.   இப்போது ஊர் பெரியவர்களும் இங்கே முன்பு வாழ்ந்து இருந்த சிலரது பெரிய முயற்சிகளால் கோவில் பணிகள் நடைபெற்று சம்ப்ரோக்ஷணம் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் 20 ஆம் தேதி (05/09/2010 Sunday)  புனர் பூசம் நக்ஷத்திரம் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை  0530  மணிக்கு மேல்  0700  மணிக்குள் ஆலய விமான கோபுர சம்ப்ரோக்ஷணம் நடை பெற உள்ளது.

ஆஸ்திக பக்தர்கள் எல்லோரும் வந்து இருந்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் பரி பூர்ண க்ருபாகடாக்ஷதுக்கு பாத்திரர் ஆகுமாறு பிரார்த்திக்கிறேன்.

நன்கொடைகள்  " ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் சமேத லக்ஷ்மி நாராயண பெருமாள் கைங்கர்ய சபா" என்ற பெயரில் பேங்க் அப் இந்தியா  காஞ்சிபுரம் கிளை  கணக்கு எண் 822010110003359 IFSC code BKID 0008220)  காசோலை ஆக  அனுப்புமாறு வேண்டிக் கொள்கிறோம்.





Monday, August 16, 2010

ஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடு



திருவல்லிக்கேணி திவ்ய க்ஷேத்ரத்தில் ஐந்து திவ்ய தேச எம்பெருமான்கள் அருள் பாலிக்கின்றனர். சப்த ரோம என்ற முனிவர்க்கு காட்சி அளித்த ஸ்ரீ கஜேந்திர வரதர் 'ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து' என கருடன் மேலே எழுந்து அருளியிருக்கிறார். இவருக்கு வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் உத்சவமும் தவிர தவன உத்சவம் மற்றும் மாத திருநக்ஷத்திரமான ஹஸ்தம் அன்று புறப்பாடும் நடை பெறுகிறது.


14/08/2010 அன்று ஆடி ஹஸ்தம் - வரதராஜ பெருமாள் உத்சவர் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் சில புகை படங்கள் இங்கே


அடியேன் : சம்பத்குமார்.





Sunday, August 8, 2010

ஆண்டாள் திருவாடிப்பூரம் உத்சவம்

பூமி பிராட்டியின் திரு அவதாரமான கோதை என பெயர் பெற்ற ஆண்டாள் கலி பிறந்து தொண்ணூற்று எட்டாவது நள வருடத்தில் சுக்ல பக்ஷம் பஞ்சமி திதி கூடிய பூர நக்ஷத்ரத்தில் பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் அருகே  ஒரு அழகிய பெண்  குழந்தையாக அவதரித்தார். 


தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும் எல்லோரும் பேறு பெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் நடைபெறுகிறது.


வியாழன் 12/08/2010  அன்று திருவாடிபூர சாற்றுமுறை.  திருவல்லிக்கேணியில் ஆறாம் உத்சவ புறப்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : 




- ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்